உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / முக்கிய வேட்பாளர்களின் சொத்து மதிப்பு தெரியுமா?

முக்கிய வேட்பாளர்களின் சொத்து மதிப்பு தெரியுமா?

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சென்னை: லோக்சபா தேர்தலில் போட்டியிடும் முக்கிய வேட்பாளர்களின் சொத்து மதிப்பு குறித்த தகவல்கள் வெளியாகியுள்ளன.தமிழகத்தில் ஏப்.,19ல் லோக்சபா தேர்தல் நடக்கிறது. இதற்கான வேட்புமனு தாக்கல் நாளை மறுநாள் (மார்ச் 27) முடியவுள்ளது. இதனையடுத்து வேட்புமனு தாக்கல் தற்போது சூடுபிடித்துள்ளது. இன்று பங்குனி உத்திரம் என்பதால் பெரும்பாலான வேட்பாளர்கள் இன்றே வேட்புமனுவை தாக்கல் செய்தனர். அதிமுக சார்பில் போட்டியிடும் 33 வேட்பாளர்கள், பா.ஜ., மற்றும் திமுக.,வின் முக்கிய வேட்பாளர்கள் என பலரும் தேர்தல் அதிகாரியிடம் தங்களது வேட்புமனுவை தாக்கல் செய்தனர். அதில், வேட்பாளர்கள் குறிப்பிட்டுள்ள தங்களது சொத்து மதிப்பு குறித்த விவரங்கள் தற்போது வெளியாகியுள்ளது.* திருநெல்வேலி தொகுதியில் பா.ஜ., சார்பில் போட்டியிடும் நயினார் நாகேந்திரனுக்கு ரூ.21.92 கோடி சொத்து இருப்பதாக குறிப்பிட்டுள்ளார். அதில், தனக்கும், தனது மனைவிக்கும் ரூ.14.03 கோடி அசையும் சொத்து, ரூ.7.89 கோடி அசையா சொத்து; தனது குடும்பத்துக்கு ரூ.5.13 கோடி கடன் இருப்பதாக குறிப்பிட்டுள்ளார்.* கன்னியாகுமரி தொகுதி பா.ஜ., வேட்பாளர் பொன்.ராதாகிருஷ்ணனுக்கு ரூ.7.63 கோடி சொத்து இருப்பதாக கூறியுள்ளார். அதில் ரூ.6.99 கோடிக்கு அசையா சொத்துகளும், ரூ.64 லட்சத்திற்கு அசையும் சொத்துகளும் இருப்பதாக குறிப்பிட்டுள்ளார். மேலும் தனக்கு எந்தவித கடனும் இல்லை என்றும் குறிப்பிட்டுள்ளார்.* ஸ்ரீபெரும்புதூர் தொகுதி திமுக வேட்பாளர் டி.ஆர்.பாலுவின் சொத்து மதிப்பு ரூ.45.71 கோடி என வேட்பு மனுவில் குறிப்பிட்டுள்ளார். அதில் அவருக்கும் அவரது குடும்பத்துக்கும் ரூ.5.51 கோடிக்கு அசையும் சொத்து, ரூ.40.21 கோடிக்கு அசையா சொத்து; ரூ.8.06 கோடிக்கு கடன் இருப்பதாக குறிப்பிட்டுள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 2 )

sureshpramanathan
மார் 26, 2024 10:15

T R Balu is lying Who owns all those shipping company Mitsubishi agency in chennai All those fertilisers import companies and many more Hiding all under Binami people He has to be investigated disproportionately amazed black money thru corruption Rough estimate is 51000 Crs


N SASIKUMAR YADHAV
மார் 25, 2024 19:11

ஸ்ரீபெரும்புதூர் வேட்பாளரின் சொத்துமதிப்பு இன்னும் அதிகமாக இருக்கும் . ஆகவே அமலாக்கத்துறையை விட்டு விசாரிக்க உத்தரவிட வேண்டும்


மேலும் செய்திகள்









அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை