உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / அமைச்சரின் பதிலை கேட்டு சிரிப்பதா ? அழுவதா? அண்ணாமலை பேட்டி

அமைச்சரின் பதிலை கேட்டு சிரிப்பதா ? அழுவதா? அண்ணாமலை பேட்டி

ஈரோடு: ‛‛ அதிகரித்து வரும் கொலை சம்பவங்கள் தொடர்பாக அமைச்சர் ரகுபதி கூறும் பதிலைக் கேட்டு சிரிப்பதா? அழுவதா? என தெரியவில்லை, '' என்று தமிழக பா.ஜ., தலைவர் அண்ணாமலை கூறியுள்ளார்.

குற்றச்சாட்டு

அண்ணாமலை நிருபர்களிடம் கூறியதாவது: போலீஸ் மீதான அச்சம் போய் விட்டதால், நாள்தோறும் 15 கொலை நடக்கிறது. தற்போது கொலை சம்பவங்கள் அதிகரித்து உள்ளது. இதற்கு, போலீசாரின் கைகள் கட்டப்பட்டதே காரணம். போலீஸ் ஸ்டேசனில் போலீசார் வேலை செய்வதில்லை. அதிக கொலை நடப்பது தான் எங்களின் குற்றச்சாட்டு. தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு கெட்டுவிட்டது என்பது தெளிவாகி உள்ளது. கொலை தொடர்பாக கேள்வி எழுப்பினால், அமைச்சரின் பதிலை கேட்டு சிரிப்பதா? அழுவதா? எனத் தெரியவில்லை.

சந்தேகம்

காவிரி விவகாரத்தில் மத்திய அரசு மீது சந்தேகம் உள்ளதாக அமைச்சர் துரைமுருகன் கூறுகிறார். ஆனால், துரைமுருகன், தி.மு.க., கர்நாடக அரசிடம் பணம் வாங்கிவிட்டதா என்பது எனது சந்தேகம். இதுவரை கர்நாடகா காங்கிரஸ் அரசை ஒரு வார்த்தை கூட அவர்கள் விமர்சிக்கவில்லை. அறிக்கை விடவில்லை. சிவக்குமார் உள்ளிட்டோர் சொல்வது தவறு என சொன்னது அறிக்கை விட்டது கிடையாது. அவர்கள் தவறு செய்துவிட்டார்கள் என விமர்சனம் செய்யவில்லை. கர்நாடகாவில் தி.மு.க.,வினருக்கு தொழில் உள்ளது. விமர்சித்தால் அதற்கு பாதிப்பு வரும் என அஞ்சுகின்றனர். காங்., அரசு செய்யும் தப்பை ஏன் தி.மு.க., கேட்கவில்லை என மக்கள் நினைக்கின்றனர். இவ்வாறு அண்ணாமலை கூறினார்.

தொடர் உண்ணாவிரதம்

ஈரோட்டில் மாலையில் மீண்டும் நிருபர்களிடம் அண்ணாமலை கூறியதாவது: அத்திக்கடவு அவினாசி திட்டத்தை நிறைவேற்ற வேண்டும். இதனை வலியுறுத்தி வரும் 20 ம் தேதி முதல் பா.ஜ., சார்பில் தொடர் உண்ணாவிரத போராட்டம் நடத்தப்படும். அமெரிக்கா, சீனாவுக்கு அடுத்து இந்தியாவில் தான் அதிக அணைகள் உள்ளன. அணைகளை பாதுகாப்பது, கண்காணிப்பது உள்ளிட்டவற்றுக்கு, மத்திய அரசு கொண்டு வந்த அணைகள் பாதுகாப்பு சட்டம் மிகவும் முக்கியம். பரம்பிகுளம் ஆழியாறு அணை மதகு சரி செய்யப்படாமல் தண்ணீர் வீணாக வெளியேறுகிறது. அணை பாதுகாப்புக்காக தமிழக அரசு, மத்திய அரசின் சட்டத்தை அமல்படுத்தி மாநில அளவில் குழுவை உருவாக்கி அணைகள் பாதுகாப்பில் ஈடுபட வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 27 )

Kesavan
ஆக 05, 2024 06:14

நீ பேசுற பதிலை கருத்துக்களை பார்த்து நாடே சிரிக்கிறது. போய் வேற வேலை இருந்தா பாரு மணிப்பூரை பாரு உத்திர பிரதேசம் பாரு ரொம்ப கஷ்டமா இருந்தா தமிழ்நாட்டுல இருக்காதே உங்க கட்சி எந்த மாநிலத்தில் ஆளுதோ அங்க போய் இருந்துக்கோ


Sathyanarayanan Sathyasekaren
ஆக 21, 2024 19:02

கேசவன், வழக்கம் போல கேட்ட கேள்விக்கு பதில் சொல்ல வக்கில்லாமல் கிண்டலாக வாய்ச்சவடால் விடுவது கொத்தடிமையின் வாடிக்கை. அதை தான் நீயும் செய்கிறாய், கர்நாடக அரசை கண்டித்து ஒரு வார்த்தை உன் திருட்டு திராவிட அரசியல் வியாதிகள் பேசவில்லை, நீ இங்கே வந்து கம்பு சுத்துகிறாய்.


K.n. Dhasarathan
ஆக 03, 2024 20:52

அண்ணாமலை மதுரை சென்று அய்ய்ம்ஸ் முன்னாள் நின்று அழுகலாம், வாய் விட்டு அழுகலாம் மணிப்பூர் காஸ்மீர் எல்லாம் அமைதி பூங்கா ஆக மாறிவிட்டது என்று உள்துறை அமைச்சகம் கூறுவதை கேட்டு சிரிக்கலாம், நன்றாக வாயை திறந்து, ஜோக் அடித்தவர்களை பார்த்து சிரிக்கலாம் .


Ramesh Sargam
ஆக 03, 2024 19:58

போனவாரம் டெல்லி சென்ற அமைச்சர் துரைமுருகன் அங்கு மத்திய அமைச்சர் பேசுவது புரியவில்லை என்றார். பக்கத்து மாநிலம் சென்று, அங்கு கூட்டணி நண்பர்கள் காங்கிரஸ் தலைவர்களிடம் பேசலாம். ஆனால் அங்கே சென்ற பிறகு அவர்கள் கன்னடாவில் பேசுவார்கள். மீண்டும் சென்னை திரும்பியபிறகு, அவர்கள் பேசுவதே புரியவில்லை என்பார்.


பல்லவி
ஆக 03, 2024 18:46

சிலர் சிரிப்பார் சிலர் அழுவார் கவிஞரின் பாடலை மனப்பாடம் செய்யுங்க பயன் தரும் , காரணம் அழும் காலங்களில் மன அமைதி தரும்


Svs Yaadum oore
ஆக 03, 2024 16:36

காவிரி விவகாரத்தில் மத்திய அரசு மீது சந்தேகம் உள்ளதாக விடியல் அமைச்சர் கூறுகிறாராம் . ஆனால், உண்மையில் விடியல் கர்நாடக அரசிடம் பணம் வாங்கிவிட்டதா என்பது இவரது சந்தேகமாம் . இதுவரை கர்நாடகா காங்கிரஸ் அரசை ஒரு வார்த்தை கூட விடியல் விமர்சிக்கவில்லை. அறிக்கை விடவில்லை....


Svs Yaadum oore
ஆக 03, 2024 16:15

கர்நாடகாவில் தொழில் உள்ளது , அதனால் விமர்சித்தால் அதற்கு பாதிப்பு வரும் என அஞ்சுகின்றனர் என்று செய்தி ....இது அந்த காலத்திலேயே தெரிந்த விஷயம்தான் ....இங்கு விடியல் ஊழல் சம்பாதித்த பணம் எல்லாம் பெங்களூரில் பெரும் முதலீடாக உள்ளது ...பெங்களூரு தமிழர்களை கேட்டால் இது பற்றி விலாவரியாக விபரம் வரும் ..காவேரி பிரச்னையில் விடியல் இதுவரை துரும்பைக்கூட அசைத்து கிடையாது .. ...விடியல் ஆட்சிக்கு வந்தாலே கர்நாடகத்தில் மகிழ்ச்சி ..காவேரியில் தமிழன் உரிமையை உச்ச நீதிமன்றம் வரை சென்று போராடி பெற்றது மறைந்த அம்மா அவர்கள்தான் ....ஆனால் காவேரி மாவட்டங்களில் இதற்கெல்லாம் நன்றி கிடையாது ...அவர்கள் வோட்டு எப்போதும் விடியலுக்குத்தான் ...அடிபட்டு திருந்தட்டும் ....


GMM
ஆக 03, 2024 15:45

நாள் முழுவதும் பல கொலைகள். கொள்ளை, கட்ட பஞ்சாயத்து... திராவிடம் வளர்ந்தது மக்கள் நல கொள்கை வகுத்து அல்ல. அரசியல் பின்புல குற்றம் தடுத்தால் உள் கட்சி பூசல், கூட்டணி எதிர்ப்பு அதிகரிக்கும். . கவர்னர் பதவி தவிர அனைத்தும் ஆளும் கட்சியின் பிடியில் உள்ளன. வாக்கு வங்கி சிதறினால், ஆட்சி பறிபோகும். நதி நீர் தாவா அரசியல் ஊன்றுகோல். மாநில கட்சிகள் ஒரு போதும் தீர்க்க விடாது. மத்திய அரசுக்கு இணையாக அதிக துறைகள் உருவாக்கி, போட்டி நிர்வாகம் நடத்தி வருகிறது. மாநிலம் மத்திய அரசுக்கு உதவ அமைக்கபட்டது. சட்ட விரோத போட்டி அரசியல், மாநில அதிகார துஷ்பிரயோகம் மூலம் வளரும் சிதைவை கவனிக்க உச்ச நீதிமன்றம் தவறி வருகிறது.


SANKAR
ஆக 03, 2024 16:39

Please see NCRB report on number of murders in UP per day NO Dravida aatchi there!.Sanathana Yogi aatchi!!


Sathyanarayanan Sathyasekaren
ஆக 21, 2024 19:04

Mr. Sankar, this article is about the thiruttu thiravida viyathigal why not questioning karnataka khan scam congress government. Not about UP government. wake up you koththadimai.


S. Narayanan
ஆக 03, 2024 15:36

தினமும் நிறைய போலீசார் ஓய்வு பெற்று விடுவதால் மீதம் இருக்கும் கொஞ்சம் போலீஸ் வேலை பலுவினால் அவதி படுகிறார்கள். புதிய போலீஸ் நியமிக்க தமிழக அரசில் பணம் இல்லை. இது தான் சட்டம் ஒழுங்கு சீர்கேடு காரணம்.


கோபால கிருஷ்ணன்
ஆக 03, 2024 16:36

மற்றபடி திமுக மீது குற்றம் சுமத்துவது அநியாயம்....போலிஸ் பற்றாக்குறையை நிரப்பி விட்டால் சட்டம் ஒழுங்கு அது பாட்டுக்கு போயிட்டிருக்கும்...!!!


chandrasekar
ஆக 03, 2024 15:16

cry


Kumar
ஆக 03, 2024 15:07

அண்ணாமலையை பார்த்தால் அழுவதா சிரிப்பாத என்று தெரியாம வில்லை


கோபால கிருஷ்ணன்
ஆக 03, 2024 16:43

பின்ன இருக்காதா ??? அண்ணாமலைக்கு என்ன தெரியும்... ஆளுங்கட்சிக்கு ஜால்ரா போடத்தெரியல, கமிஷன் வாங்கி சொத்து சேர்க்க தெரியல, காமராஜர் போல நியாய அநியாயத்தை பேசிக்கிட்டு இருந்தா வேலைக்கு ஆகுமா....ஏதோ அரசியலுக்கு வந்தோமா ஜால்ரா போட்டோமா சொத்து சேர்த்தோமா செட்டில் ஆனோமான்னு இருக்காம வீணா போயிகிட்டிருக்காரு....!!!


Nagendran,Erode
ஆக 03, 2024 19:17

உம்மை போன்ற அறிவாலய அடிமைகளை பார்த்தால் சிரிக்க மட்டுமே முடியும்..????????


ramesh
ஆக 03, 2024 20:39

என்ன கோபால கிருஷ்ணன் இந்தியாவிலே காமராஜர் உடன் ஒப்பிட எந்த தலைவரும் இல்லை .அண்ணா மலை உடன் ஒப்பிட்டு காமராஜர் பெயரை களங்க படுத்தாதீர்கள்


மேலும் செய்திகள்









அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை