உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / சம்பளம் பிடிக்காதீங்க...! போலீசாருக்கு விண்ணப்பம்

சம்பளம் பிடிக்காதீங்க...! போலீசாருக்கு விண்ணப்பம்

சென்னை : 'புயல் நிவாரணத்திற்காக, என் சம்பளத்தில் பிடித்தம் செய்ய வேண்டாம்' என, போலீசார் தெரிவிக்க வசதியாக, விண்ணப்ப படிவம் வழங்கப்பட்டுள்ளது.டிசம்பரில் வீசிய மிக்ஜாம் புயல் சென்னையை புரட்டிப்போட்டது. புயல் நிவாரண பணிகளுக்கு, ஐ.ஏ.எஸ்., - ஐ.பி.எஸ்., அதிகாரிகள் மற்றும் போலீசார், ஒரு நாள் சம்பளத்தை, முதல்வரின் பொது நிவாரண நிதிக்கு வழங்குவதாக அறிவித்தனர். தற்போது காவல் துறையில், புயல் நிவாரண பணிக்கு, ஒரு நாள் சம்பளத்தை கொடுக்க விரும்பாதோர், விண்ணப்பம் வாயிலாக தெரிவிக்கலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கான விண்ணப்பங்கள் நேற்று வினியோகம் செய்யப்பட்டன. இந்த விண்ணப்பத்தை சமர்பிப்போரின் சம்பளத்தில், நிவாரண நிதிக்கான பணம் பிடித்தம் செய்யப்படாது என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை