உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / பிளக்ஸ் பேனர்கள் வைக்காதீங்க; கட்சியினருக்கு சொல்கிறார் உதயநிதி!

பிளக்ஸ் பேனர்கள் வைக்காதீங்க; கட்சியினருக்கு சொல்கிறார் உதயநிதி!

சென்னை: 'எனது பிறந்தநாளுக்கு பிளக்ஸ், பேனர் வைப்பதையும், சுற்றுச்சூழலுக்கு மாசு ஏற்படுத்தும் வகையில் பட்டாசு வெடிப்பதையும் தவிர்க்க வேண்டும்' என கட்சியினருக்கு துணை முதல்வர் உதயநிதி வேண்டுகோள் விடுத்தார்.

அவரது அறிக்கை

அழுத்தம் திருத்தமாகச் சொல்ல விரும்புகிறேன். எனது பிறந்த நாளை முன்னிட்டு பிளக்ஸ் பேனர் வைப்பது, பட்டாசுகள் வெடிப்பதைத் தவிர்க்க வேண்டும்.கொண்டாட விரும்பும் தோழர்கள் அதனை ஆக்கப்பூர்வமான மக்கள் பணிக்கும், கழகப்பணிக்கும் பயன்படுத்த வேண்டும். இதுவே என் பிறந்த நாள் வேண்டுகோள். எதிர்க்கட்சிகள் கூட்டணி அமைக்கவே, விழி பிதுங்கிக் கொண்டிருக்கும் போது நாம் 2026ம் ஆண்டு சட்டசபை தேர்தலுக்கான வேலைகளைத் துவங்கி விட்டோம். 2026ம் ஆண்டு சட்டசபை தேர்தலில் வெற்றி பெற்று திராவிட மாடல் அரசு மீண்டும் அமைவதற்கான உறுதிமொழியை இந்த பிறந்த நாளில் என்னுடன் சேர்ந்து கழகத் தோழர்களும் ஏற்றுக்கொள்ளுங்கள். இவ்வாறு உதயநிதி கூறியுள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 6 )

adalarasan
நவ 27, 2024 22:15

கட்டளை கொடுத்தால் போதாது, அதை உண்மையாக நடைமுறை படுத்தினால். மக்களுக்கு நிம்மதி ?


Mani Vellachamy
நவ 26, 2024 05:54

பிளக்ஸ் பேனர்கள் வைக்காதீங்க அப்படின்னு சொல்லுவோம். ஆனா, வைக்கணும். திமுக வின் கொள்கைப்படி அடிக்காதே என்றால் அடிக்கணும், பேருந்தை உடைக்காதே என்றால் உடைக்கணும், யாருடைய உயிருக்கும் ஆபத்து விளைவிக்கக் கூடாது என்றால் விளைவிக்கணும்.


adalarasan
நவ 25, 2024 22:12

ஆட்சி அதிகாரம் உங்கள் கையில் தான .easy ஆக தடுக்கலாம்,court ஆர்டர் கூட இருக்கு. முதல்ல உங்கள் ,கட்சி ஆட்களை கட்டுப்படுத்துஙக.


நிக்கோல்தாம்சன்
நவ 25, 2024 21:02

உங்களது தாத்தாவின் அகராதிப்படியா , அல்லது உங்களது தந்தையின் அகராதிப்படியா துணையே ?


அப்பாவி
நவ 25, 2024 19:31

போட்ரா வெடிய... வெய்டா ஃப்ளக்ஸ.


என்றும் இந்தியன்
நவ 25, 2024 17:53

அப்படின்னா பிளக்ஸ் பேனர்கள் கட்டாயம் வையுங்கள் என்று திராவிட அகராதியின் அர்த்தம்


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை