உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / இ.பி.எஸ்., முதலை கண்ணீர்: தங்கம் தென்னரசு காட்டம்

இ.பி.எஸ்., முதலை கண்ணீர்: தங்கம் தென்னரசு காட்டம்

சென்னை: தமிழக அமைச்சர் தங்கம் தென்னரசு அறிக்கை: அரசு ஊழியர்களின் கோரிக்கை தொடர்பாக, பழனிசாமி வெளியிட்ட அறிக்கை, மொட்டைத் தலைக்கும், முழங்காலுக்கும் முடிச்சு போடுவது போல உள்ளது. தி.மு.க., விளக்க அறிக்கையை, மொட்டை காகித அறிக்கை என்று பழனிசாமி கூறியுள்ளார். ஜெயலலிதாவுக்கு தெரியாமல், 2011-ம் ஆண்டு சட்டசபை தேர்தலில், கூட்டணி கட்சிகளின் தொகுதிகளுக்கும் சேர்த்து, மொட்டையாக வேட்பாளர் பட்டியல் வெளியானது.கடந்த 2007ல் நடந்த ஜனாதிபதி தேர்தலில், எனக்கு தெரியாமல், என் கட்சி எம்.எல்.ஏ.,க்களும், எம்.பி-.,க்களும் ஓட்டளிக்கச் சென்றனர்' என, ஜெயலலிதா அறிக்கை வெளியிட்டார். 'டான்சி' வழக்கில், ஆவணத்தில் உள்ளது என் கையெழுத்தே இல்லை என, ஜெயலலிதா சொன்னதெல்லாம், அ.தி.மு.க., அடித்த மொட்டைதானே.ஏராளமான இளைஞர் களுக்கு வேலைவாய்ப்பு வழங்குவதோடு, அரசு ஊழியர்களின் நலனை பாதுகாத்து, அவர்கள் நியாயமான கோரிக்கைகளை தமிழக அரசு, நடைமுறைப்படுத்தி வருகிறது. அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் மீதான வெறுப்பு, அ.தி.மு.க., வின் உதிரத்திலேயே ஊறியிருக்கிறது. இதை அரசு ஊழியர்கள் அறியாதவர்கள் அல்லர். இந்த உண்மைகளை மறைத்துவிட்டு, பழனிசாமி இன்று வடிக்கும் முதலைக்கண்ணீரை பார்த்தால், முதலையே தோற்றுவிடும் போலிருக்கிறது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை