உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / பா.ஜ.,வுடன் இணைந்தது சமத்துவ மக்கள் கட்சி: அறிவித்தார் சரத்குமார்

பா.ஜ.,வுடன் இணைந்தது சமத்துவ மக்கள் கட்சி: அறிவித்தார் சரத்குமார்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சென்னை: பா.ஜ.,வுடன் தனது சமத்துவ மக்கள் கட்சியை இணைத்தார் சரத்குமார். இது தொடர்பான அறிவிப்பை அக்கட்சியின் தலைவர் சரத்குமார் வெளியிட்டார். மக்கள் நலனுக்காக கட்சியை இணைப்பதாக அவர் காரணம் கூறியுள்ளார்.சென்னையில் நடந்த இணைப்பு விழாவில் சரத்குமார் பேசியதாவது: வருங்கால இளைஞர்களின் நலனுக்காகவும், தேசிய நலனுக்காகவும் இந்த முடிவை நான் எடுத்தேன். இதனை கட்சி நிர்வாகிகளுடன் கலந்து பேசினேன். அவர்கள் எனது முடிவை ஏற்று கொண்டனர். https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=py6opj91&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0தலைவர் எவ்வழியோ அவ்வழி என்ற கருத்தை தெரிவித்தனர். ஒவ்வொரு தேர்தலிலும் எந்த இடங்களில் , எத்தனை தொகுதிகளில் போட்டியிடுவது என்பது சங்கடமாக இருந்தது. நமது வலிமைக்கு பா.ஜ.,வுடன் இணைத்தால் என்ன என்ற எண்ணம் வந்தது. இதனால் பா.ஜ.,வுடன் கட்சியை இணைந்துள்ளேன்.

காமராஜர் போல் பிரதமர் மோடி

காமராஜர் போல ஆட்சி வராதா என்ற ஏக்கம் இருந்த போது பிரதமர் மோடியின் ஆட்சியை பார்க்கிறேன். காமராஜர் ஆட்சியை பிரதமர் மோடி தருகிறார். இந்த இணைப்பு எழுச்சியின் துவக்கம் , எளிய குடும்பத்தில் பிறந்து நாட்டின் பிரதமராக மோடி வந்துள்ளார். நமது சக்தியை மிகப்பெரிய சக்தியுடன் இணைத்துள்ளோம்.பிரதமர் மோடி தலைமையிலனா ஆட்சியில் பொருளாதார வளர்ச்சி, இளைஞர்களின் நலன் நன்றாக அமைந்துள்ளது. போதை பொருளை பிரதமர் மோடியால் தான் தடுக்க முடியும். 2026ல் தமிழகத்தில் இந்த கட்சி போட்டியிட்டு வெற்றி பெற்று ஆட்சியை பிடிக்கும். வலிமையான ஆட்சியை மீண்டும் தரும். இது மக்களுக்கான முடிவு. இவ்வாறு சரத்குமார் கூறினார். இவரது வரவை பா.ஜ., தலைவர் அண்ணாமலை வரவேற்றார். தமிழகத்திற்குள் சரத்குமாரை அடைத்து வைக்க விரும்பவில்லை. அதே நேரத்தில் சரத்குமார் தேசிய அரசியலுக்கு தேவைப்படுகிறார். இவ்வாறு அண்ணாமலை கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







முக்கிய வீடியோ