உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / லஞ்சம் கொடுத்தாலும் தண்டனை தரணும்!

லஞ்சம் கொடுத்தாலும் தண்டனை தரணும்!

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

உலக, தேசிய, தமிழக நிகழ்வுகள் குறித்து தினமலர் நாளிதழுக்கு வாசகர்கள் எழுதிய கடிதம்

ந.தேவதாஸ், சென்னையில் இருந்து எழுதுகிறார்: நம் அண்டை நாடான சீனாவில், அதிபர் ஷீ ஜின் பிங் தலைமையிலான, சீன கம்யூனிஸ்ட் கட்சியின் ஆட்சி நடக்கிறது. இவர் அதிபராக பதவியேற்ற 2012 முதல், ஊழலுக்கு எதிராக தீவிர நடவடிக்கைகளை எடுத்து வருகிறார். இந்நிலையில், சீனாவில் அரசு அதிகாரிகளுக்கு லஞ்சம் கொடுப்போருக்கும் தண்டனை வழங்கும் வகையில், குற்றவியல் சட்டத்தில் திருத்தம் செய்யப் பட்டுள்ளது.சமீபத்தில், இச்சட்டம் அந்நாட்டு பார்லிமென்டில் நிறைவேற்றப்பட்டது. இச்சட்டப்படி, முக்கியமான தேசிய திட்டங்களில் ஊழலில் ஈடுபடும் கட்சிகளுக்கும் கடுமையான தண்டனை தரப்பட உள்ளது.மேலும் நிர்வாகம், நீதித்துறை ஊழியர்களுக்கு லஞ்சம் கொடுப்பவர்கள், மற்றும் நிதி, சுகாதாரம், உணவு, கல்வி போன்ற துறைகளில் லஞ்சம் கொடுப்பவர்களுக்கும், கடுமையான தண்டனை வழங்கப்பட உள்ளது.இச்சட்டத்தை, தற்போது லஞ்ச ஊழலில் புரையோடிப் போன நம் நாட்டிலும் உடனடியாக அமல்படுத்த வேண்டிய மிக அவசர, அவசியமாகும். குறிப்பாக, தமிழகத்தில் அனைத்து துறைகளிலும் லஞ்சமும், ஊழலும் தலை விரித்தாடுகிறது.தற்போதுள்ள ஊழல் தடுப்பு சட்டம் என்பது கண்ணுக்கு தெரியாத சட்டமாகவே இயங்கி வருகிறது. இதனால், சகல துறைகளிலும் ஊழல் தாண்டவமாடுகிறது. இதை முற்றிலுமாக ஒழிக்க ஒரே வழி...தற்போது சீனாவில் அமல்படுத்தப்பட்டதை போன்று, நம் நாட்டிலும் இச்சட்டம் அவசரமாக நிறைவேற்றப்பட வேண்டும் என்பது தான். குற்றம் செய்தவரை விட, குற்றம் செய்ய துாண்டியவருக்கே அதிக தண்டனை தரப்பட வேண்டும் என்கிறது சட்டம்.அந்த வகையில், தங்கள் வேலை சீக்கிரம் முடிய வேண்டும் அல்லது விதிகளை மீறி, தங்களது காரியத்தை முடிக்க வேண்டும் என்பதற்காக, பெரும்பாலான மக்கள், அரசு அதிகாரிகள் மற்றும் ஊழியர்களுக்கு தாங்களாக முன்வந்தே லஞ்சம் கொடுக்கின்றனர்.இதனால், இவர்களுக்கும் தண்டனை என்று சட்டம் கொண்டு வந்தாலே, நம் நாட்டில், 90 சதவீதம் அளவுக்கு லஞ்சம், ஊழலை ஒழித்து விட முடியும். இதன் வாயிலாக, நம் நாடு பொருளாதாரத்தில் இன்னும் பீடுநடை போடும் என்பதிலும், மாற்றுக் கருத்துக்கு இடமில்லை.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 10 )

P.Sekaran
ஜன 09, 2024 09:58

கையும் களவுமாக பிடிப்பட்டவர்களுக்கு தண்டனை கடுமையாக்க வேண்டும் அவர்களுக்கு பாதி சம்பளத்தில் வைத்துக்கொண்டும் வேறு இடத்துக்கு மாற்றியும் வைக்கின்றனர். வேலையிலிருந்து டிஸ்மிஸ் செய்ய வழிவகை செய்யவேண்டும் அப்பொழுதான் லஞ்சம் ஒழியும்.


Vikramadithan Renu Gopal Renugopal
ஜன 09, 2024 14:45

லஞ்சம் இந்தியாவின் சாபக்கேடு, வேலூரில் கட்டட வரைபடம் அனிமதிக்கு இரண்டு லட்சம் முதல் ஆறு லட்சம் வரை ல...


Sampath Kumar
ஜன 09, 2024 09:27

ithu nadai muraiku ஒத்துவராத விஷயம்


R.RAMACHANDRAN
ஜன 09, 2024 08:49

லஞ்சம் கொடுப்பவர்களுக்கு தண்டனை அளிக்க வழிவகை செய்வதோடு நில்லாமல் அரசு ஊழியர்கள் சட்டப்படி கடமையை ஆற்றத் தவறி சட்ட விரோதமாக செயல்பட்டால் அது லஞ்சம் பெற்று செய்த செயலாக அனுமானிக்க உரிய சட்ட திருத்தங்கள் செய்வதோடு ரசாயனம் தடவிய நோட்டுகளை பெறும்போது கையும் களவுமாக பிடிபட்டால் மட்டுமே வழக்கு என்ற நிலையை மாற்ற வேண்டும்.


மோகனசுந்தரம்
ஜன 09, 2024 08:43

ஒரு வாரிசுதாரர் சர்டிபிகேட்டை வாங்க எவ்வளவு நடையாக நடக்க வேண்டி உள்ளது. அதற்கு பதிலாக சிறிய காசை தூக்கி அடித்து வேலையை முடித்துக் கொண்டு போகவே சாமானியன் விருப்பப்படுகிறான். இதில் எங்கே லஞ்சம் வந்தது.


Ramesh Sargam
ஜன 09, 2024 07:07

லஞ்சம் கொடுப்போருக்கும் தண்டனை வழங்கும் வகையில், குற்றவியல் சட்டத்தில் திருத்தம் நம் நாட்டிலும் இயற்றப்படவேண்டும். மக்கள் கூறலாம், லஞ்சம் கொடுக்காவிட்டால் அரசு அலுவல்கள் ஒன்றும் நடக்காது என்று. அது உண்மைதான். அப்படி மக்களிடம் லஞ்சம் எதிர்பார்க்கும் அரசுஅலுவலர்களை பணியிலிருந்து நீக்கி, சிறை தண்டனை கொடுக்கவேண்டும்.


g.s,rajan
ஜன 09, 2024 05:30

அரசாங்கம் அளிக்கும் இலவசமும் ஒரு வகையில் லஞ்சம்தானே ......


Ramesh Sargam
ஜன 09, 2024 09:09

லஞ்சமேதான். சந்தேகமே வேண்டாம்.


R Kay
ஜன 09, 2024 02:07

இது நடைமுறைக்கு ஒவ்வாத பதிவு. சாமான்ய மக்கள் யாருக்கும் கையூட்டு கொடுத்து அரசு அலுவல்களை முடித்துக்கொள்ளும் எண்ணம் இருப்பதில்லை. ஒப்பந்ததாரர்களுக்கு வேண்டுமானால் அப்படி ஒரு எண்ணமிருக்கலாம். சாமான்யன் procedure பிரகாரம் விண்ணப்பித்து, மீண்டும், மீண்டும் அவனது விண்ணப்பம் வேண்டுமென்றே நிராகரிக்கப்பட வேறு வழியின்றி கையூட்டு தந்தால்தான் காரியம் முடியுமென்ற நிலையில் against his principle and conscience அந்நிலைக்கு தள்ளப்படுகிறான். 90% வரி ஏய்ப்புகள், பொருளாதார குற்றங்கள், cash transactions-வழியே நடக்கின்றன. ஒரு குடும்பத்திற்கு மாதம் சில்லறை செலவுகளுக்காக ஐயாயிரம் ரூபாய் மட்டுமே ரொக்கமாக வழங்கப்படவேண்டும். Bus ticket, parking charges, hotel bill, coffee, tea, petrol, diesel என அநைத்து செலவினங்களும் டிஜிட்டல் பரிமாற்றங்களாகவே நிகழ வேண்டும். ரியல் எஸ்டேட், சினிமா துறைகளே கருப்புப்பணத்தின் ஊற்று, கண்மாய், மஹாசமுத்திரம் அனைத்தும். இங்குள்ள ஓட்டைகள் அடைக்கப்பட வேண்டும். சொத்து வாங்கும்போது, அதற்கான source கட்டாயமாக காண்பிக்கப்பட்ட வேண்டும். வெகு சாமான்யனான எனக்கே இவ்வளவு தோன்றும்போது, மெத்தப்படித்த நிதி அமைச்சருக்கும், அமைச்சக அதிகாரிகளுக்கும் இவை தெரியாதா என்ன? கடுமையான நடவடிக்கைகள் எடுத்தால், பொருளாதாரம் முடங்கிப்போகுமென்ற பயத்தில், கண்டும் காணாதது போல் இருக்கிறார்கள். மிகப்பெரிய அளவிலான லஞ்சம், பொருளாதாரக்குற்றங்களை மட்டும் தண்டித்து வருகின்றனர்.


vaiko
ஜன 09, 2024 01:46

கண்டிப்பாக, குறிப்பக்காக பீ ஜெ பி தேர்தல் பத்திரங்களை வாங்கியவர்களை சிறையில் தள்ள வேண்டும்.


மேலும் செய்திகள்



முக்கிய வீடியோ