தி.மு.க., ஆட்சியில் அனைவருக்கும் துயரம்
தமிழக ஊரக வளர்ச்சித்துறை, ஊரக வீழ்ச்சி துறையாக மாறிக் கொண்டிருக்கிறது. ஊராட்சிகளில் பணிபுரியும், மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டி இயக்குபவர், துாய்மைக் காவலர், சுகாதார உதவியாளர் என, அடிப்படை பணிகளை செய்வோருக்கு, மாதம் 2,000 மட்டுமே, தொகுப்பூதியம் வழங்கப்படுகிறது. குறைந்தபட்சம் 10,000 ரூபாயாக உயர்த்துமாறு விடுத்த கோரிக்கையை தி.மு.க., அரசு கண்டுகொள்ளவில்லை.அரசு ஊழியர்களின் கோரிக்கைகளை நிறைவேற்றியதாக தி.மு.க., அரசு கூறுகிறது. ஆனால், அரசு ஊழியர்கள், அரசு டாக்டர்கள், துாய்மைப் பணியாளர்கள் என, அனைத்து தரப்பினரின் அன்றாட போராட்டங்களை காணும்போது, அவர்களின் கோரிக்கைகள் நிறைவேற்றப்படவில்லை என்பது தெளிவாகிறது. தி.மு.க.,வின், 55 மாத ஆட்சியில், அனைத்து தரப்பு மக்களும், துயரத்துக்கு ஆளாக்கப்பட்டு இருக்கின்றனர் என்பதே, கள யதார்த்தம். - பன்னீர்செல்வம், ஒருங்கிணைப்பாளர், அ.தி.மு., தொண்டர்கள் உரிமை மீட்பு கழகம்