உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / மாதம் ரூ.6.50 லட்சம் கேட்டு பிரபல சமையல் நிபுணர் மீது ஆடை வடிவமைப்பாளர் வழக்கு

மாதம் ரூ.6.50 லட்சம் கேட்டு பிரபல சமையல் நிபுணர் மீது ஆடை வடிவமைப்பாளர் வழக்கு

சென்னை: நிறைமாத கர்ப்பிணியாக இருக்கும் தனக்கு மாத பராமரிப்பு தொகையாக, 6.50 லட்சம் ரூபாய் வழங்க, மாதம்பட்டி ரங்கராஜுக்கு உத்தரவிடக்கோரி, சென்னை குடும்பநல நீதிமன்றத்தில், ஆடை வடிவமைப்பாளர் ஜாய் கிரிசில்டா மனு தாக்கல் செய்துள்ளார். பிரபல சமையல் நிபுணர் மாதம்பட்டி ரங்கராஜ். இவர், தன்னை திருமணம் செய்து கொள்வதாக கூறி ஏமாற்றி விட்டதாக, ஆடை வடிவமைப்பு நிபுணர் ஜாய் கிரிசில்டா புகார் அளித்திருந்தார். ஜாய் கிரிசில்டா கருவுற்ற நிலையில், அவரிடம் இருந்து மாதம்பட்டி ரங்கராஜ் விலகினார். இதையடுத்து, சமூக வலைதளத்தில் ரங்கராஜுக்கு எதிராக கருத்துகளை பதிவிட்டிருந்தார். அவற்றை நீக்கக்கோரி, சென்னை உயர் நீதிமன்றத்தில் ரங்கராஜ் தாக்கல் செய்த வழக்கு நிலுவையில் உள்ளது. இந்நிலையில், கர்ப்பிணியாக உள்ள தனக்கு பராமரிப்பு செலவு தொகை கோரி, சென்னை குடும்பநல நீதிமன்றத்தில் ஜாய் கிரிசில்டா மனு தாக்கல் செய்து உள்ளார். அதன் விபரம்: நிறைமாத கர்ப்பிணியாக உள்ளதால், ஆடை வடிவமைப்பில் ஈடுபட முடியவில்லை. எனக்கும், என் வயிற்றில் உள்ள குழந்தைக்கும், ஒவ்வொரு மாதமும் பராமரிப்பு செலவு தொகையை, மாதம்பட்டி ரங்கராஜ் வழங்க உத்தரவிட வேண்டும். என் வயிற்றில் வளரும் குழந்தைக்கு மாதம்பட்டி ரங்கராஜ் தான் தந்தை. தற்போது ஏழு மாத கர்ப்பிணியாக உள்ள எனக்கு மருத்துவம், வீட்டு வாடகை மற்றும் இதர செலவுகளுக்காக, மாதம், 6.50 லட்சம் ரூபாய் வழங்க உத்தரவிட வேண்டும். இவ்வாறு மனுவில் கூறியுள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை