உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / பைக் - லாரி மோதல் தந்தை, மகள் பலி

பைக் - லாரி மோதல் தந்தை, மகள் பலி

நாமக்கல்: திருச்சி மாவட்டம், தொட்டியம் கிடாரம் காட்டு சாலையை சேர்ந்தவர் சிவசுப்ரமணியன், 51, லாரி டிரைவர். இவரது மகள் ஸ்ரீநிதி, 19; கோவை கல்லுாரியில், முதலாமாண்டு படித்து வந்தார். மகன் ஸ்ரீகார்த்திகேயன், 16, மோகனுார் பள்ளியில் பிளஸ் 1 படிக்கிறார்.இந்நிலையில், சிவசுப்ரமணியன், தன் மகள், மகனுடன், பழனி முருகன் கோவிலில் சுவாமி தரிசனம் செய்து விட்டு, நேற்று முன்தினம் இரவு, 12:00 மணிக்கு 'ஹோண்டா ஸ்பிளண்டர்' பைக்கில், மூவரும் ஹெல்மெட் அணியாமல், ஊர் திரும்பிக் கொண்டிருந்தனர். மோகனுார், கீழ்பாலப்பட்டி முருகன் கோவில் தெருவைச் சேர்ந்தவர் லாரி டிரைவர் சரவணன், 51. இவர், தேவக்கோட்டையில் இருந்து வைக்கோல் லோடு ஏற்றிக்கொண்டு, நள்ளிரவு, 12:45 மணிக்கு, மோகனுார் - ப.வேலுார் சாலையில், துாக்கக் கலக்கத்தில் வந்தார். எதிர்பாராத விதமாக, பைக் மீது லாரி மோதியது. இதில், சிவசுப்ரமணியன், மகள் ஸ்ரீநிதி உடல் நசுங்கி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். படுகாயமடைந்த ஸ்ரீகார்த்திகேயன், லாரி டிரைவர் சரவணன் ஆகியோர் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை