உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / தாய்மொழி வாசிக்க திணறும் இளசுகள்; கணக்கெடுப்பில் கண்டுபிடிப்பு

தாய்மொழி வாசிக்க திணறும் இளசுகள்; கணக்கெடுப்பில் கண்டுபிடிப்பு

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சென்னை : நாட்டில் 14 - 18 வயது உள்ளோரில் 25 சதவீதம் பேர் தாய்மொழி வாசிப்பதில் பின்தங்கியுள்ளனர் என, தனியார் நிறுவன கணக்கெடுப்பில் கண்டறியப்பட்டுள்ளது.'அடிப்படையை தாண்டிய கல்வியின் நிலை' என்ற தலைப்பில், 'பிரதம்' என்ற தனியார் தொண்டு நிறுவனம், தேசிய அளவில் கணக்கெடுப்பு நடத்தியது. நாடு முழுதும், 26 மாநிலங்களில், 28 மாவட்டங்கள் வீதம் கணக்கெடுப்பு நடத்தப்பட்டது; அதில் முக்கியமாக, ஒரு மாநிலத்திற்கு ஒரு கிராமப்புற மாவட்டம் தேர்வு செய்யப்பட்டு கணக்கெடுப்பு நடத்தப்பட்டது.

கணித திறன்

இதில், 3 - 16 வயதுள்ள குழந்தைகளின் கல்வி, அடிப்படை வாசிப்புத் திறன், கணித திறன் மேம்பட்டிருப்பது தெரியவந்தது.கிராமங்களில் தற்போது, 18 வயதுடையோரில், 87 சதவீதம் பேர் பள்ளிப் படிப்பை முடித்துள்ளனர். மேலும், 55.7 சதவீதம் பேர் கலை மற்றும் மானுடவியல் பிரிவுகளையே, பட்டப்படிப்பில் தேர்வு செய்துஉள்ளனர். இன்ஜினியரிங், அறிவியல், கணித படிப்பில் பெண்களை விட, ஆண்கள் அதிகமாக பட்டம் பெற்றுள்ளனர்.பள்ளிப் படிப்பை முடித்தவர்களில், 25 சதவீதம் பேருக்கு,இரண்டாம் வகுப்பு பாடங்களை கூட, தங்கள் தாய்மொழியில் வாசிக்க தெரியவில்லை. அதில், 57 சதவீதம் பேர் ஆங்கில வார்த்தைகளை வாசித்து அதன் பொருளையும் அறியும் திறன் கொண்டுஉள்ளனர்.

கூடுதல் அறிவு

டிஜிட்டல் தொழில்நுட்பத்தை பயன்படுத்துவதில், கிராமப்புற இளைஞர்கள் கூடுதல் அறிவு பெற்றுள்ளனர். கணிதம் மற்றும் ஆங்கில மொழி மற்றும் கம்ப்யூட்டர் மற்றும் ஸ்மார்ட் போன் பயன்படுத்தும் முறை, சமூக வலைதள பாதுகாப்பு குறித்து, பெண்களை விட ஆண்கள் கூடுதல் திறன் பெற்றுள்ளனர் என்பது கணக்கெடுப்பில் தெரிய வந்துள்ளது.

தமிழகத்தில்...

பெரம்பலுார் மாவட்டத்தில் 1,197 வீடுகளில், 1,323 மாணவர்களிடம் கணக்கெடுப்பு நடத்தப்பட்டது. 10ம் வகுப்பு மற்றும் அதற்கு கீழ் படித்தவர்கள், 47.5 சதவீதம். பிளஸ் 2 வரை படித்தவர்கள், 37.2 சதவீதம். இங்கு, 12.4 சதவீதம் பேரே பட்டப்படிப்பு முடித்துஉள்ளனர். அதேபோல, 16 வயது உள்ளோரில் இரண்டாம் வகுப்பு பாடப் புத்தகத்தை, 77.1 சதவீதம் பேர் வாசிக்கின்றனர். அடிப்படை கணிதம் தெரிந்தவர்கள், 53.3 சதவீதம், ஆங்கிலம் வாசிக்க தெரிந்தவர்கள் 77 சதவீதமாக இருந்தது. ஸ்மார்ட் போன் வைத்திருக்கும் இளைஞர்கள், 92 சதவீதம்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்









அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை