உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / ஆயிரம் நாளாச்சு, வாக்குறுதி என்னாச்சு

ஆயிரம் நாளாச்சு, வாக்குறுதி என்னாச்சு

தஞ்சாவூர் : தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணத்தை தனி வருவாய் மாவட்டமாக அறிவிக்க கோரி, 25 ஆண்டுகளாக பல்வேறு போராட்டங்கள் நடந்து வருகின்றன.கடந்த, 2021ம் ஆண்டு சட்டசபை தேர்தல் முன்னிட்டு, தற்போதைய முதல்வர் ஸ்டாலின், தேர்தல் பிரசாரத்தின் போது, 'தி.மு.க., ஆட்சிக்கு வந்த 100 நாட்களுக்குள், கும்பகோணத்தை தலைமையிடமாக கொண்டு தனி மாவட்டமாக அமைப்போம்' என, வாக்குறுதி அளித்திருந்தார்.இதுவரை 1,000 நாட்கள் ஆன நிலையில், கும்பகோணத்தை தனி மாவட்டமாக அறிவிக்காத முதல்வரை கண்டித்து நேற்று, கும்பகோணம் புதிய மாவட்டம் கோரும் ஒருங்கிணைப்புக் குழுவினர் சார்பில், மகாமக குளத்தில் மனித சங்கிலி ஆர்ப்பாட்டம் நடந்தது.இதில் பல்வேறு அரசியல் கட்சியினர், அமைப்பினர் உள்ளிட்ட பொதுமக்கள் நுாற்றுக்கணக்கானோர் பங்கேற்றனர்.

இது குறித்து போராட்டக்குழுவினர் கூறியதாவது:

முதல்வர் ஸ்டாலின் அளித்த வாக்குறுதியை நம்பி, கும்பகோணம், பாபநாசம், திருவிடைமருதுார் ஆகிய மூன்று தொகுதி வாக்காளர்கள், அவரது கூட்டணிக்கு வாக்களித்து வெற்றி பெற செய்தோம்.ஆனால் தி.மு.க., வாக்குறுதி அளித்து ஆயிரம் நாட்கள் கடந்துள்ள நிலையில், கும்பகோணத்தை புதிய மாவட்டமாக அறிவிக்காதது மூன்று தொகுதி மக்களுக்கும் ஏமாற்றம் அளிக்கிறது. வரும் பட்ஜெட் கூட்டத்தில் அல்லது 110 விதியின் கீழ் கும்பகோணத்தை புதிய மாவட்டமாக அறிவிக்க வேண்டும்.இவ்வாறு கூறினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 22 )

Ramesh
பிப் 14, 2024 08:33

இதெல்லாம் வீரமா கேப்போம் கொடி பிடிப்போம் ஆர்ப்பாட்டம் பண்ணுவோம். ஆனால் ஓட்டு மட்டும் திராவிடியானுக்குதான் போடுவோம் அது எங்கள் பிறப்புரிமை


mupaco
பிப் 13, 2024 15:03

5 thalukavukku mele ulla mavattangalai pirikkalaam. Virudhunagarum appadiye.


Hari Bojan
பிப் 13, 2024 14:58

பேச்சு பேச்சாகத்தான் இருக்கும்


ganesh
பிப் 13, 2024 14:30

பதினைந்து லட்சம் என்ன ஆனது ,இரண்டு கோடி வேலை வாய்ப்பு என்ன ஆனது பெட்ரோல் டீசல் ரூபாய் ஐந்பது க்கு தருவது என்ன ஆனது , அமெரிக்க டாலர் மதிப்பு ஐந்பது ஆகும் என சொன்னது என்ன ஆனது


katharika viyabari
பிப் 13, 2024 13:18

ஓசி பேருந்துல தானே போறீங்க?.


Mani . V
பிப் 13, 2024 13:13

1000 நாட்கள் பொறுத்திருந்த நீங்கள் இன்னும் ஒரு 5000 நாட்கள் பொறுத்திருக்க மாட்டீர்களா?


விடியல்
பிப் 13, 2024 11:38

நீங்கள் அதிகம் எதிர்பார்த்து நடக்க முடியாத நிலையை உங்களுக்கு வேண்டும் என்று தன்னலத்துக்கு வோட்டு போட்டு கள்ள ஓட்டுபோடவும் துணை போனீங்க இப்பவாவது திருந்துங்க கர்மா உண்டு என்பதை புரிந்து கொள்ளும் நேரம் இது


Gurumurthy Kalyanaraman
பிப் 13, 2024 11:31

ennanga neengalum ariyaadha pillaiya? ippadiye koduththa vaakuridhiya ellam patri kavala patta, naanga eppadinga aatiyila irukkiradhu?


Duruvesan
பிப் 13, 2024 11:27

காசு வாங்கிட்டு ஓட்டு போட்ட அடிமைகள் இப்போ பொங்குவது ஏன்? அதான் மகளிர் உரிமை தொகை, இலவச பஸ், இலவச நீர் இணைப்பு, காஸ், வீடு எல்லாம் விடியல் குடுக்கிறார் இல்ல? அப்புறம் என்ன


sridhar
பிப் 13, 2024 11:15

ஏதோ மற்ற எல்லா வாக்குறுதியையும் நிறைவேற்றி விட்டு உங்களை மட்டும் ஓரவஞ்சனை செய்தது போல் புலம்பறீங்க. மழை வந்தால் சென்னை மகிழ்ச்சி வெள்ளத்தில் இருப்போம் என்றார்கள் , நாங்க ரொம்ப கடுப்புல இருக்கோம்.


மேலும் செய்திகள்







அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை