உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / அண்ணா பல்கலை முன்னாள் துணைவேந்தர் சஸ்பெண்ட்

அண்ணா பல்கலை முன்னாள் துணைவேந்தர் சஸ்பெண்ட்

சென்னை:'அண்ணா பல்கலையின் முன்னாள் துணைவேந்தரும், பேராசிரியருமான வேல்ராஜ், ஓய்வு பெற இருந்த நாளில், 'சஸ்பெண்ட்' செய்யப்பட்டுள்ளார். அண்ணா பல்கலையில் துணைவேந்தராக வேல்ராஜ் பணியாற்றினார். அவரது மூன்றாண்டு பதவி காலம் முடிந்தாலும், ஓய்வு பெறும் வயது இல்லாததால், தொடர்ந்து பேராசிரியராக பணியாற்றி வந்தார். அவர் துணை வேந்தராக இருந்தபோது, அண்ணா பல்கலையின் கீழ் செயல்படும், தனியார் கல்லுாரிகளுக்கு, அங்கீகாரம் கொடுக்கும் விவகாரத்தில், முறைகேடு நடந்ததாக புகார் எழுந்தது. இது தொடர்பான வழக்கு விசாரணையில் உள்ளது. இந்த வழக்கை காரணம் காட்டி, நேற்று ஓய்வு பெற இருந்த வேல்ராஜ். 'சஸ்பெண்ட்' செய்யப்பட்டுள்ளார் என, பல்கலை வட்டாரங்கள் தெரிவித்தன.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை