தங்கம் விலை ரூ.280 உயர்வு
சென்னை:தமிழகத்தில் நேற்று முன்தினம் 22 காரட் ஆபரண தங்கம் கிராம் 9355 ரூபாய்க்கும், சவரன் 74,840 ரூபாய்க்கும் விற்பனையானது. நேற்று தங்கம் விலை கிராமுக்கு 35 ரூபாய் உயர்ந்து 9390 ரூபாய்க்கும், சவரனுக்கு 280 ரூபாய் அதிகரித்து 75,120 ரூபாய்க்கும் விற்கப்பட்டது. இதையடுத்து மீண்டும் தங்கம் சவரன் விலை 75,000 ரூபாயை தாண்டியுள்ளது.