உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / குட் நியூஸ்! பொங்கலுக்கு ரூ.1000 பரிசுத்தொகை: முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பு

குட் நியூஸ்! பொங்கலுக்கு ரூ.1000 பரிசுத்தொகை: முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பு

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சென்னை: குடும்ப அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசு தொகுப்பில் ஒரு கிலோ பச்சரிசி, ஒரு கிலோ சர்க்கரை, முழு கரும்பு வழங்கப்படும் என அறிவித்த நிலையில், ரூ. 1,000 பரிசுத்தொகையும் சேர்த்து முதல்வர் ஸ்டாலின் அறிவித்து உள்ளார்.ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஒவ்வொரு ஆண்டும் பொங்கல் பரிசு தொகுப்புடன் ரூ.1000 ரொக்கமாக தமிழக அரசு வழங்கி வருகிறது. ஆனால் சமீபத்தில் வெளியான அறிவிப்பில், 2.19 கோடி ரேஷன் கார்டுதாரர்களுக்கு பொங்கல் சிறப்பு தொகுப்பு வழங்கப்படும் என்றும், அதில் ஒரு கிலோ பச்சரிசி, ஒருகிலோ சர்க்கரை, முழு கரும்பு அளிக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டது. பரிசுத்தொகுப்பில் ரூ.1000 ரொக்கம் இடம்பெறாதது பொதுமக்களுக்கு ஏமாற்றத்தை அளித்தது. பல எதிர்க்கட்சிகளும் ரொக்கம் வழங்க வலியுறுத்தின.https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=b9yyjfdi&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0இந்த நிலையில், பொங்கல் பண்டிகையை ஒட்டி ரூ.1000 பரிசுத்தொகை வழங்கப்படும் என முதல்வர் ஸ்டாலின் அறிவித்துள்ளார். அதன்படி, பொங்கல் திருநாளை சிறப்பாக மக்கள் கொண்டாட மத்திய, மாநில அரசு ஊழியர்கள், வருமான வரி செலுத்துவோர், பொதுத்துறை நிறுவனங்களில் பணிபுரிவோர், சர்க்கரை கார்டுதாரர்கள், பொருளில்லா கார்டுதாரர்கள் தவிர்த்து, ஏனைய குடும்ப அட்டைதாரர்கள் அனைவருக்கும் ரூ.1000 பரிசாக ரேஷன் கடைகளில் பொங்கல் பண்டிகைக்கு முன்னதாக ரொக்கமாக வழங்கப்படும் என ஸ்டாலின் அறிவித்துள்ளார்.

உரிமைத்தொகை

அதேபோல், பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ஒவ்வொரு மாதமும் 15ம் தேதி வழங்கப்பட்டு வரும் மகளிர் உரிமைத் தொகையினை 10ம் தேதியே ஒரு கோடியே 15 லட்சம் மகளிரின் வங்கி கணக்குகளுக்கு அனுப்பி வைக்கப்படும் என்றும் முதல்வர் ஸ்டாலின் அறிவித்துள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 64 )

g.s,rajan
ஜன 07, 2024 07:31

Pimplikki Pilaappi....


g.s,rajan
ஜன 06, 2024 17:38

Voice Of(No)Tax Payers Everywhere.....


நரேந்திர பாரதி
ஜன 06, 2024 03:46

"குடும்ப அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசு தொகுப்பில் ஒரு கிலோ பச்சரிசி, ஒரு கிலோ சர்க்கரை, முழு கரும்பு வழங்கப்படும் என அறிவித்த நிலையில், ரூ. 1,000 பரிசுத்தொகையும் சேர்த்து முதல்வர் ஸ்டாலின் அறிவித்து உள்ளார்."...மக்களை இன்னும் எவ்வளவு நாட்களுக்கு / வருடங்களுக்கு பிச்சைக்காரர்களாக வைத்திருக்கப் போகிறீர்கள்? அரசு கொடுக்கும் பரிசு தொகுப்பினை பயன்படுத்திதான் பொங்கல் வைக்கும் நிலையில் மக்கள் இருக்கிறார்களா? நீங்கள் கொடுக்கும் இந்த ஆயிரம் ரூபாய் டாஸ்மாக் கடைக்கே வந்துசேரும் என்று உங்களுக்கு தெரியாதா?


N SASIKUMAR YADHAV
ஜன 05, 2024 22:36

இன்னும் மூவாயிரம் சேர்த்து ஐயாயிரம் ரூபாயாக உயர்த்தி கொடுக்கவேண்டும் தீயமுக தலைவரோட மரியாதைக்குரிய அப்பன் வீட்டு பணமில்லை இது பொதுமக்களின் வரிப்பணம்


R. Vidya Sagar
ஜன 05, 2024 22:24

தமிழ்ப்புத்தாண்டு என்று சொல்ல மறந்து விட்டீர்களே


Anantharaman Srinivasan
ஜன 05, 2024 20:38

வரி கட்ட வேண்டிய வருமானமில்லா விட்டாலும் வருமான வரி தாக்கல் செய்ய வேண்டியது Compulsory என்பதால் தான் மத்திய மாநில தனியார்துறை ஊழியர்கள் Return file செய்கின்றனர். மாற்றாந்தாய் மனப்பான்மையுன் ஸ்டாலின் அரசு நடந்து கொண்டால் 1000 கிடைக்காதவர்களின் குடும்ப ஓட்டுக்கள் திமுக விற்கு விழாது. இதுவரை ஓட்டு போட வராதவர்கள் கூட வெளியே வந்து எதிர்த்து வாக்ககளிப்பபர். இது நிச்சயம் நடக்கும்.


வெகுளி
ஜன 05, 2024 19:26

மீதி நாலாயிரம் ரூ எப்ப குடுப்பீங்க?


தமிழன்
ஜன 05, 2024 21:17

பிம்பிளிக்கி பிளாக்கி


rajen.tnl
ஜன 05, 2024 23:43

இன்னும் 50000 கோடி கொள்ளை அடித்த பிறகு


Guruvayur Mukundan
ஜன 05, 2024 17:19

1000/-Rs.... Parisu thogai.... that means... Prize Amount. What prize? What amount?


தமிழன்
ஜன 05, 2024 21:17

இந்த பரிசை வாங்கிகிட்டு திமுகவுக்கு ஒட்டு போடா சொல்றாங்க.. மானம் உள்ளவன் திமுகவுக்கு ஒட்டு போடுவான்னு நினைக்கிறீங்க.


sridhar
ஜன 05, 2024 16:53

திமுக , அதன் கூட்டணி கட்சிகள் தவிர்த்து ஏனைய கட்சிகளுக்கு நாங்கள் வாக்களிப்போம் .


தமிழன்
ஜன 05, 2024 21:19

தேர்தலில் போட்டி இடும் வரை அந்த கட்சி இருக்கும்னு நினைக்கறீங்க..? எனக்கு நம்பிக்கை இல்லை.தேர்தல் ஆணையம் திமுகவை முடக்கி விடும். இந்த குரு பெயர்ச்சிக்கு பிறகு பாருங்கள். திமுகவில் வெடிக்கும் ஒரு பிரச்சனை


தமிழன்
ஜன 05, 2024 16:29

உங்க பணத்தை நீங்கள் பெறுவதற்கு உங்களிடம் சம்பளம் வாங்கும், ஒரு சேவககனுக்கு நன்றி சொல்றதை பார்த்தால், மக்கள் இன்னமும் அறிவு நிலையில் முதிர்ச்சி அடையவில்லை என்பது புரிகிறது.


மேலும் செய்திகள்







புதிய வீடியோ