உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் /  அரசு ஊழியர்கள் வேலை நிறுத்தம்; தலைமை செயலகத்தில் இன்று பேச்சு

 அரசு ஊழியர்கள் வேலை நிறுத்தம்; தலைமை செயலகத்தில் இன்று பேச்சு

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சென்னை: காலவரையற்ற வேலை நிறுத்தப் போராட்டம் அறிவித்துள்ள, 'ஜாக்டோ - ஜியோ, போட்டோ - ஜியோ' நிர்வாகிகளுடன், அமைச்சர் எ.வ.வேலு, இன்று(ஜன.,2) பேச்சு நடத்த உள்ளார். புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்து, பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும் என்பது உட்பட, 10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி, தமிழ்நாடு அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் சங்கங்களின் கூட்டமைப்பான ஜாக்டோ - ஜியோ; அனைத்து அரசு அலுவலர்கள், ஆசிரியர்கள் மற்றும் உள்ளாட்சி பணியாளர்கள் கூட்டமைப்பான, போட்டோ - ஜியோ சார்பில், போராட்டங்கள் நடந்து வருகின்றன. இரண்டு சங்கங்களும், ஜன., 6 முதல், மாநிலம் முழுதும் காலவரையற்ற வேலை நிறுத்தப் போராட்டம் நடத்தப்படும் என அறிவித்துள்ளன. கடந்த 22ம் தேதி தலைமைச் செயலகத்தில், அமைச்சர்கள் எ.வ.வேலு, தங்கம் தென்னரசு, மகேஷ் ஆகியோர் தலைமையில், அரசு ஊழியர்கள், ஆசிரியர் சங்க நிர்வாகிகளுடன் பேச்சு நடந்தது. அதில் உடன்பாடு எட்டப்படவில்லை. இந்நிலையில், தலைமைச் செயலகத்தில், அமைச்சர் எ.வ.வேலு தனது அறையில், இன்று காலை 11:00 மணிக்கு, போட்டோ - ஜியோ நிர்வாகிகள், ஜாக்டோ - ஜியோ நிர்வாகிகள் ஆகியோருடன், தனித்தனியே பேச்சு நடத்த உள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 8 )

சிவம்
ஜன 02, 2026 11:20

போங்க போய் பேச்சுவார்த்தை நடத்துங்க. வரும் தேர்தலில் உங்கள் ஒத்துழைப்பு கிடைத்தால் மீண்டும் ஆட்சியை பிடித்தால் 100 சதவீதம் உங்கள் கோரிக்கைகள் நிறைவேற்ற படும் என்று அரசு சொல்லும். போனஸ் வேறு அறிவித்து விட்டார்கள். பல்லை காட்டிக்கொண்டு எல்லாவற்றுக்கும் சம்மதம் சொல்லி வேலை நிறுத்தம் வாபஸ் என்று அறிவித்து, திமுக ஆட்சிக்கு வர பாடுபடுங்கள். போங்க.. போங்கையா..


Barakat Ali
ஜன 02, 2026 10:56

அரசிடம் இருக்கும் நிதியை மொத்தமாகத் துடைத்து இவர்களுக்கு அள்ளி வழங்கினாலும் விடியாது .......


பெரிய ராசு
ஜன 02, 2026 22:46

முப்பது வருடம் வேலை செய்து ஓய்வூதியம் கேட்பது தப்பா , தப்பெனில் அனைத்து பழைய ஓய்வூதியம் பெறுவோருக்கு ரத்து செய்க .. அதுசரி நீ படித்து அரசாங்கம் வேல வாங்கின ஓய்வூதியம் வேண்டாம்னு சொல்லுவே ..முன்கள போராளியாக ஒப்பாரி வெப்ப இல்லைய...


Barakat Ali
ஜன 02, 2026 10:55

காக்கா கூட்டம் ....


sivaram
ஜன 02, 2026 08:52

தலைவர் சொல்லிட்டார் இந்தியாவிலேயே நம்பர் 1. நம் தமிழ் நாடு என்று , எனவே உடன்பிறப்புகளே நீங்கள் மகிழ்ச்சியாக தேர்தல் வேலை பாருங்கள் , முரசொலி படியுங்கள் , டாஸ்மாக் கடைக்கு வருகை தாருங்கள் ,முடிந்தால் தெருவில் போவோரை வம்புக்கு இழுங்கள் , நானும் என் மகனும் என்னுடைய அடிமை கூட்டமும் உங்களை என்றும் பாதுகாக்கும்


Ananthanarayanan Aa
ஜன 02, 2026 07:51

ஆளக்கு ஒரு பெட்டி . பிரச்சினை முடிந்தது.


ராமகிருஷ்ணன்
ஜன 02, 2026 07:25

ஐ நா சபையில் பேச்சுவார்த்தை நடத்தினாலும் முடியாது


Svs Yaadum oore
ஜன 02, 2026 07:19

தமிழக விரைவு போக்குவரத்து கழகத்தில், 1,050 பஸ்கள் இயக்கப் படுகின்றன. பஸ்களில் பிரேக், லைட், டயர்கள் எதுவும் சரியில்லை என்பதால், வேலைக்கு சென்றால் உயிருக்கு உத்தரவாதம் இல்லை என, டிரைவர்கள் அச்சத்துடன் பணியாற்றி வருகின்றனராம். அண்மையில், ராமநத்தம் அருகே பஸ் விபத்தில் சிக்கி, 10 பேர் உயிரிழந்ததற்கு, அந்த பஸ்சின் டயர் சரியில்லாதது தான் காரணமாம். இப்படி ஒரு படு கேவலமான ஆட்சி நடக்குது ....


மேலும் செய்திகள்







சமீபத்திய செய்தி