உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / சேலம் பெரியார் பல்கலை.,யில் கவர்னருக்கு கருப்பு கொடி: மறுபுறம் சோதனை; போலீசார் குவிப்பு

சேலம் பெரியார் பல்கலை.,யில் கவர்னருக்கு கருப்பு கொடி: மறுபுறம் சோதனை; போலீசார் குவிப்பு

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சேலம்: கவர்னர் ஆர்.என்.ரவி இன்று(ஜன.,11) சேலம் பெரியார் பல்கலைக்கழகத்திற்கு சென்றுள்ள நிலையில், 3 அடுக்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. அவருக்கு எதிராக கருப்பு கொடி காட்டி போராட்டத்தில் ஈடுபட்ட 200 பேர் கைது செய்யப்பட்டனர். மறுபுறம், பல்கலையில் முறைகேடு தொடர்பாக போலீசார் சோதனை நடத்தினர். சேலம் அருகே கருப்பூரில் உள்ள பெரியார் பல்கலைக்கழகத்தில் துணைவேந்தராக ஜெகநாதன் என்பவர் கடந்த 2021ம் ஆண்டு முதல் பணியாற்றி வருகிறார். இவர் சட்டப்படி விதிமுறைகளை மீறி தனியார் நிறுவனம் துவங்கியதாக பல்கலைக்கழக தொழிலாளர் சங்க சட்ட ஆலோசகர் இளங்கோவன் புகார் அளித்திருந்தார். https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=8a1cyajb&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0இதில் துணைவேந்தர் ஜெகநாதன் மற்றும் அதற்கு உடந்தையாக இருந்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறியிருந்தார். இது தொடர்பாக விசாரணை நடத்திய போலீசார், துணைவேந்தர் ஜெகநாதனை அதிரடியாக கைது செய்தனர். தற்போது அவருக்கு ஜாமின் கொடுக்கப்பட்டுள்ளது.இந்நிலையில், கவர்னர் ஆர்.என்.ரவி இன்று(ஜன.,11) சேலம் பெரியார் பல்கலைக்கழகத்திற்கு சென்றுள்ள நிலையில், 3 அடுக்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. முறைகேடு தொடர்பாக, பல்கலைக்கழகத்தில் போலீசார் சோதனை நடத்தினர். பல்கலைக்கழகத்தில் நடைபெறும் அலுவலர்கள் சந்திப்பில் ஆர்.என்.ரவி கலந்து கொள்ள உள்ளதாக கூறப்படுகிறது. பெரியார் பல்கலை துணை வேந்தரை பணியிடை நீக்கம் செய்ய மறுத்த கவர்னர் இன்று அவரை சந்திக்கிறார். கவர்னருக்கு எதிராக போஸ்டர்கள் ஒட்டப்பட்டள்ளன.

கருப்பு கொடி - கைது

சேலம் வந்த கவர்னர் ரவிக்கு எதிர்ப்பு தெரிவித்து பல்வேறு அமைப்பை சேர்ந்தவர்கள் கருப்பு கொடி காட்டி போராட்டத்தில் ஈடுபட்டனர். அவர்களை தடுத்து நிறுத்திய போலீசார் 200க்கும் மேற்பட்டவர்களை கைது செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







முக்கிய வீடியோ