உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / ஜி.எஸ்.டி., வரி அல்ல… வழிப்பறி!: முதல்வர் ஸ்டாலின் புகார்

ஜி.எஸ்.டி., வரி அல்ல… வழிப்பறி!: முதல்வர் ஸ்டாலின் புகார்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சென்னை: ஜிஎஸ்டி வரி அல்ல… வழிப்பறி என முதல்வர் ஸ்டாலின் குற்றம் சாட்டியுள்ளார்.

வழிப்பறி

இது குறித்து எக்ஸ் சமூகவலைதளத்தில் முதல்வர் ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: ஜி.எஸ்.டி., வரி அல்ல… வழிப்பறி. தன் பிணத்தின் மீது தான் ஜி.எஸ்.டி.யை அமல்படுத்த முடியும் என்று முதல்வராக இருந்த போது எதிர்த்த மோடி, பிரதமரானதும், ஜி.எஸ்.டி பொருளாதாரச் சுதந்திரம் என்று ஒரே நாடு ஒரே வரி கொண்டு வந்தார்.ஹோட்டல் முதல் டூ வீலர் பழுதுபார்ப்பது வரை அத்தனைக்கும் ஜி.எஸ்.டி.யா?. அடுத்து என்ன செல்பி எடுத்தாலும் ஜிஎஸ்டி கட்ட வேண்டுமா?. 1.45 லட்சம் கோடி ரூபாய் கார்ப்பரேட் வரியைத் தள்ளுபடி செய்யும் பா.ஜ.,வால், ஏழைகளுக்குக் கருணை காட்ட முடியாதா?. ஜி.எஸ்.டி-யில் கிடைக்கும் தொகையில் 64 விழுக்காடு, 50 சதவீத அடித்தட்டு மக்களிடம் இருந்து வசூலிக்கப்படுகின்றது.

இண்டியா கூட்டணிக்கு ஓட்டளியுங்கள்

33 விழுக்காடு ஜி.எஸ்.டி 40 சதவீத நடுத்தர மக்களிடம் இருந்து பெறப்படுகின்றது. வெறும் 3 விழுக்காடு ஜி.எஸ்.டி மட்டுமே 10 சதவீத பெரும் பணக்காரர்களிடம் இருந்து கிடைக்கிறது. இந்திய மக்கள் தொகையில் 50 சதவிகிதத்தினர் 6 மடங்குக்கும் அதிகமாக மறைமுக வரியைக் கட்டுகிறார்கள். ஏழைகளைச் சுரண்டும் இந்த முறையை மாற்ற இண்டியா கூட்டணிக்கு ஓட்டளியுங்கள். இவ்வாறு முதல்வர் ஸ்டாலின் அந்த அறிக்கையில் கூறியுள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 60 )

Godfather_Senior
ஏப் 18, 2024 19:42

உங்களால கொள்ளையடிக்க முடியலே, பொய் கணக்கு எழுதி வரி ஏய்ப்பு செய்யமுடியலே ஒழுங்கா இருக்கவனுக்கு ஜிஎஸ்டி ஒரு பொருட்டே இல்லே உன்னமாதிரி திருடங்களுக்குத்தான் ஜிஎஸ்டி கொள்ளையா தெரியுது ஜூலை மாசத்துக்கு பிறகு கோபாலபுரம் குடும்பமே திஹார் வாசம்தான், ஜெயில் களி தின்ன தயாராகுங்கோ கட்டுமரம் மொத்த குடும்பமும்


Thiruvengadam Ponnurangam
ஏப் 18, 2024 21:16

சரியான விளக்கம்


Hari Bojan
ஏப் 18, 2024 15:58

மது போதையல்ல உங்களது சூது


sabitharaja
ஏப் 17, 2024 20:29

ஜிஎஸ்டி வரியில் மாநிலத்தின் %பங்கும் வழிப்பறி தனே முதல்வரே?


Thiruvengadam Ponnurangam
ஏப் 18, 2024 21:19

அது வேற இது வேற நாங்க வாங்கினா அது வேற மத்திய அரசு வாங்கினா அது வேற நேரடியா மக்கள் கிட்ட பணம் கொடுத்தா கணக்குல வர்றது, எங்க கிட்ட கொடுத்துட்டா மக்களுக்கு போகுமா அப்டித்தான்னு நெனைக்கிறோம் ஆனால் கொடுப்போம் எப்போ தேதி சொன்னோமா ?


Balachandran Rajamanickam
ஏப் 17, 2024 18:25

In case if old tax tem, with in state purchase Local Vat, Excise Duty, service tax almost % was payable amount, Other state purchase Entry tax, state VAT, Local Vat, Excise Duty, service tax almost % was payable Many person use auditor and make block money more current tax tem every one easy to understand MrStalin dont know existing tax tem and current


spr
ஏப் 17, 2024 18:02

முன்பு காங்கிரஸ் ஆட்சியில் ப, சி உள்ளிட்ட அனைத்து நிதியமைச்சர்களும் விதித்த அதே வரிகள் பின்வரும் வரிகள் மத்திய கலால் வரி,வணிக வரி,மதிப்பு கூட்டு வரி வாட்,உணவு வரி,மத்திய விற்பனை வரி CST,ஆக்ட்ரோய்,பொழுதுபோக்கு வரி,நுழைவு வரி,கொள்முதல் வரி,ஆடம்பர வரி,விளம்பர வரி என இவை அனைத்தும் ஒருங்கிணைக்கப்பட்ட ஒன்றாக ஜி எஸ் டி இருக்கிறது அப்பொழுதெல்லாம் வாய் மூடியிருந்தவர் ஒருவேளை அறியாமலிருந்தாரோ உலகிலேயே விற்பனை வரி என்றொரு வரியை முதல் முதலாக அறிமுகப்படுத்திய ராஜாஜியைக் குறை சொல்லலாம் - இது ஒருவகையில் வாங்குவோர் செலுத்தும் வரி என்ற வகையில் இவரது கூட்டணி ஆட்சிக்கு வந்தால் இதை நிறுத்தி விடுவோம்


Ramalingam Shanmugam
ஏப் 17, 2024 12:58

சுதந்திர தினம் குடியரசு தினம் எப்போ என்றே தெரியாது நீயெல்லாம் பேச வந்துட்டே


Mohan
ஏப் 16, 2024 12:21

ஒரு மாநிலத்தின் முதலமைச்சர் பேசுகிற பேச்சா இது? வழிப்பறியாக எல்லா மாநிலங்களும் இஷ்டத்துக்கு வரிவசூல் செய்ததைப் பார்த்து இந்தியாவுக்குள் பெரிய வெளிநாட்டு முதலீடுகள் வரவில்லை அதை வசதியாக மறந்தும் மறைத்தும் பேசுகிறீரே ஐயா? முதலீடுகள் இவ்வளவு கொண்டு வந்தேன் என பெருமையாக சொல்கிறீரே நிர்வாக சீர்கேட்டு தொல்லையற்ற ஜிஎஸ்டி தற்சமயம் இருப்பதால் தான் வெளிநாட்டு முதலீடு வருகிறது இல்லாவிட்டாசங்கு தான் சும்மா காலி டப்பா சத்தம் போடற மாதிரி யாரோ முழுவிவரமற்றவன் எழுதிய பேச்சை படிப்பது உங்களது பதவிக்கு சற்றும் பொருத்தமல்ல """சீற்றம் வரின் ஆற்றல் அறும்"""


Indian
ஏப் 16, 2024 12:46

உங்களை போன்றவர்களுக்கு இப்படி பேசினால் தான் புரியும்


Subramaniam Mathivanan
ஏப் 16, 2024 09:29

அப்புறம் ஏன் ஜி எஸ் டி யில், அதுவும் சென்ட்ரல் ஜி எஸ் டி யில் எங்கள் பங்கு வருவதில்லை என கூப்பாடு


ellar
ஏப் 16, 2024 09:24

மின்சார கட்டணங்களும் சொத்து வரியும் முக்கியமாக கட்டிடங்கள் அனுமதிக்கு தரப்படும் தொகைகளும் மிகவும் நியாயமற்றவையாக உள்ளன


Mahalingam Laxman
ஏப் 16, 2024 08:51

what Tamil Nadu government does is day-time robbery they know alcohol is danger to life and family Still by one hand they give money x but take it back by another hand xxx times they are not interested in the wellbeing of lower-class people they use them to attend election meeting and shout for them and shout against other parties


மேலும் செய்திகள்









அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை