உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / 60 வருடம் ஆண்டவர்கள் மீது வெறுப்பு: அன்புமணி தகவல்

60 வருடம் ஆண்டவர்கள் மீது வெறுப்பு: அன்புமணி தகவல்

திண்டிவனம்,:லோக்சபா தேர்தலில், பா.ஜ., தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியில் பா.ம.க.,விற்கு, 10 தொகுதிகள் ஒதுக்கீடு செய்வதற்கான ஒப்பந்தம், விழுப்புரம் மாவட்டம், திண்டிவனம் அடுத்த தைலாபுரம் தோட்டத்தில் கையெழுத்தானது. தொடர்ந்து, பா.ம.க., தலைவர் அன்புமணி, தமிழக பா..ஜ., தலைவர் அண்ணாமலை கூட்டாக நிருபர்களை சந்தித்தனர். அன்புமணி கூறியதாவது:பத்தாண்டு காலமாக பா.ம.க., டில்லியில் தேசிய ஜனநாயக கூட்டணியின் அங்கமாக இருந்து வருகிறது. நாட்டின் நலன் கருதி, மோடியின் நல்லாட்சி தொடர, தமிழகத்தில் மாற்றங்கள் வருவதற்கு நாங்கள் முடிவு எடுத்துள்ளோம். 60 ஆண்டுகளாக தமிழகத்தை ஆட்சி செய்து கொண்டிருப்பவர்கள் மீது மக்களுக்கு ஒரு வெறுப்பான சூழல் உள்ளது. இந்தக் கூட்டணி தமிழகத்தில் மட்டுமல்ல, இந்திய அளவில் மிகப்பெரிய வெற்றி பெறும். மோடி மூன்றாவது முறையாக பிரதமராக தேர்வு செய்யப்படுவார்.இவ்வாறு கூறினார்.

மாற்றம் நிகழும்

அண்ணாமலை கூறியதாவது:அன்புமணி சொன்னது போல, தமிழகத்தில், 60 ஆண்டுகளாக மக்களின் வெறுப்பை மட்டும் சம்பாதித்துக் கொண்டுள்ள கட்சிகளுக்கு மாற்றாக, 2024ல் வலிமையாக இந்த கூட்டணி அமைந்துள்ளது. தற்போது பா.ம.க., எடுத்துள்ள முடிவின்படி, தமிழக அரசியல் நிலவரம் மாறியிருக்கிறது. வரும், 2026ல் கூட நாம் அனைவரும் எதிர்பார்க்கும் அரசியல் மாற்றம் நிகழும்.எந்தெந்த தொகுதிகளில் பா.ம.க., போட்டியிடும் என, விரைவில் அறிவிக்கப்படும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை