உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / திருநெல்வேலி, துாத்துக்குடி தென்காசியில் இன்று கனமழை

திருநெல்வேலி, துாத்துக்குடி தென்காசியில் இன்று கனமழை

சென்னை: 'திருநெல்வேலி, துாத்துக்குடி, தென்காசி ஆகிய மாவட்டங்களில், இன்று கனமழை பெய்ய வாய்ப்புள்ளது' என, வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

வானிலை மையத்தின் அறிக்கை:

நேற்று காலை வரையிலான 24 மணி நேரத்தில், சென்னை மணலி புதுநகர் பகுதியில், 24 செ.மீ., மழை பெய்துள்ளது. அடுத்தபடியாக, எண்ணுாரில், 21; விம்கோ நகர், 20; கத்திவாக்கம், 16; திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி, 15; மணலி, 12; விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம், திருவள்ளூர் மாவட்டம் ஊத்துக்கோட்டை, சென்னை திருவொற்றியூர் ஆகிய இடங்களில், 11; திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரியில், 10 செ.மீ., மழை பெய்துள்ளது. வங்கக் கடலில் உருவான டிட்வா புயல், டிச., 3ல் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுவிழந்தது. சென்னை அருகே நிலை கொண்டிருந்த இந்த அமைப்பு, நேற்று முன்தினம் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுவிழந்து, புதுச்சேரி நோக்கி நகர்ந்தது. நேற்று முன்தினம் இரவு ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுவிழந்தது. நேற்று காலை நிலவரப்படி, இது காற்றழுத்த தாழ்வு பகுதியாக மேலும் வலுவிழந்தது. இந்த அமைப்பால் உருவான மழை மேகங்கள் இருக்கும் வரை, சென்னை மற்றும் சில மாவட்டங்களில் அவ்வப்போது மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. தமிழகத்தில் ஒருசில இடங்கள், புதுச்சேரியில் இன்று, இடி மின்னலுடன் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. திருநெல்வேலி, துாத்துக்குடி, தென்காசி ஆகிய மாவட்டங்களில், இன்று கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில், இன்று வானம் ஓரளவு மேகமூட்டமாக காணப்படும். ஒருசில இடங்களில், இடி மின்னலுடன் லேசான அல்லது மிதமான மழை பெய்யும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை