உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / யானை வழித்தடம் என கூறி வஞ்சிக்கப்படும் ஹிந்துக்கள்: ஹிந்து முன்னணி குற்றச்சாட்டு

யானை வழித்தடம் என கூறி வஞ்சிக்கப்படும் ஹிந்துக்கள்: ஹிந்து முன்னணி குற்றச்சாட்டு

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

திருப்பூர்: 'ஹிந்து கோவில்களை மட்டும் குறி வைத்து சீரழிக்கும் தமிழக அரசும், வனத்துறையும், 'யானை வழித்தட வரைவு அறிக்கை' என்ற பெயரில் பக்தர்களை வஞ்சிக்கிறது' என, ஹிந்து முன்னணி குற்றஞ்சாட்டி உள்ளது.அதன் மாநில தலைவர் காடேஸ்வரா சுப்ரமணியம் அறிக்கை: தமிழகத்தில், 42 யானை வழித்தடங்களை கண்டறிந்ததாக ஒரு வரைவு அறிக்கையை வனத்துறை வெளியிட்டுள்ளது.அதில் நீலகிரி, கோவை, ஆனைமலை, அகஸ்திய மலை, ஸ்ரீவில்லிபுத்துார் ஆகிய ஐந்து யானைகள் காப்பகம் உள்ளிட்ட, 20 வனக்கோட்டங்களில், 2023ம் ஆண்டு அறிக்கையின்படி யானைகளின் எண்ணிக்கை குறைவதாக புள்ளிவிபரங்கள் தெரிவிக்கின்றன.'யானை வழித்தடங்களை மறைக்கின்றனர்' என்ற பெயரில் பல கோவில்களுக்கு பக்தர்கள் செல்வதற்கு இடையூறு ஏற்பட்டுத்த சதி நடப்பதாக அறிகிறோம். உதாரணமாக, நெல்லை மாவட்டம், அகஸ்தியர் அருவி செல்லும் வழியில் உள்ள சொரிமுத்து அய்யனார் கோவில், வனத்துறையின் கட்டுப்பாட்டில் வருவதால் கோவிலுக்கு பக்தர்கள் செல்வதற்கு பல கட்டுப்பாடுகள் விதிக்கப்படுகின்றன.அதுபோல, கோவை மாவட்டத்தில், வீரகாளியம்மன் கோவில், கொடிவேலி அம்மன், பத்ரகாளி அம்மன், பூண்டி வெள்ளிங்கிரி போன்ற கோவில்களுக்கு பக்தர்கள் செல்ல வனத்துறை ஏகப்பட்ட கட்டுப்பாடுகளை விதிக்கிறது. ஆனால், அதே பகுதியில் அமைந்துள்ள காருண்யா நிறுவனம் உள்ள பகுதியில் யானை வழித்தடங்கள் காலங்காலமாக உள்ளன.அதை வனத்துறையும், தமிழக அரசும் கண்டு கொள்ளவில்லை. மாறாக, முறையாக ஆன்மிகப் பணியாற்றும் இயற்கை வளத்தை பாதுகாக்க விழிப்புணர்வு சேவைப் பணியில் ஈடுபட்டு வரும், ஈஷா மையத்தின் மீது பல குறைகளை தொடர்ந்து சொல்லி வருகிறது.தவிர, உலகப்புகழ் பெற்ற மருதமலை கோவிலில் யானை வழித்தடம் என்ற பெயரில் பக்தர்களுக்கு சிரமத்தை ஏற்படுத்துகின்றனர். இதில் உள்ள சதியின் பின்னணியை ஹிந்துக்கள் உணர்ந்து கொள்ள வேண்டும். 'சென்னிமலையை கிறிஸ்துவ மலையாக மாற்றுவோம்' என கிறிஸ்துவ மதத்தினர் பகிரங்கமாக பேசிய போது, தி.மு.க., அரசு வாய் திறக்கவில்லை.அடுத்த குறியாக, ஏழாம் படை வீடாக கொண்டாடும் மருதமலையை வனத்துறை கட்டுப்பாட்டில் கொண்டு வந்துள்ளது தி.மு.க., அரசு. கல்கொத்தி - வாளையாறு யானை வழித்தடத்தில் அமைந்துள்ள காருண்யா நிறுவனத்தால், யானை உள்ளிட்ட வன விலங்குகளுக்கு ஏற்படும் பாதிப்புகள் திட்டமிட்டு மறைக்கப்பட்டுள்ளன.மொத்தம், 1,200 ஏக்கரில் பரந்து விரிந்துள்ள காருண்யா நிறுவனம் யானை வழித்தடத்திற்குள் வராது... ஆனால், பல நுாறு ஆண்டுகளாக லட்சக்கணக்கான ஹிந்துக்கள் வழிபடும் கோவில்கள் மட்டும் யானை வழித்தடத்தில் வரும் என்பது எந்த வகையில் நியாயம்?தமிழகத்தில் ஹிந்துக்களுக்கு ஒரு சட்டம்; கிறிஸ்துவர்களுக்கு வேறு சட்டமா? யானைகளை பாதுகாக்கிறோம் என்ற பெயரில், ஹிந்துக்களின் உரிமைகளை பறிக்கும் புதிய யானை வழித்தட பரிந்துரையை தமிழக அரசு ஏற்கக்கூடாது. இவ்வாறு அவர் கூறியுள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 15 )

Ravi Kulasekaran
மே 14, 2024 08:39

இந்து கோயில்களை யானைகள் வழி தடம் என தமிழக இந்து வீரோத அரசு மற்ற தேவாலயங்கள் மசூதிகளை கண்டு கொள்ளாமல் இருக்கிறது உண்மையான வழித்தடங்களை ஒரு நல்ல ஐஏஎஸ் பெண் அதிகாரி இருந்தார் அவரை தானாக நீதிமன்றம் உத்தரவு இருந்து அது அசந்த மாற்ற நினைக்க அந்த நல்ல மனசாட்சி உள்ள பெண்மணி ராஜினாமா செய்தார் அவரை மீண்டும் கொண்டு வர தல அண்ணா மலை முயற்சி செய்து இந்து கோவில்கள் அழியாமல் பாதுகாக்க வேண்டும் இந்து அறநிலையத்துறை ஒழிக்க வேண்டும்


அசோகன்
மே 08, 2024 16:52

எங்க சுடலைதான் யானை அவன் போகும் இடமெல்லாம் யானை வழித்தடம் அவை அத்தனையும் திமுகவிற்கும் பாவாடைகளுக்குமே சொந்தம்


sugumar s
மே 08, 2024 14:48

This anomally of troubling Hindus and supporting Christians and Muslims perpetually done by DMK This needs to be stopped for equality In TN majority is suppressed by DM for supporting minority But for votes alone they comes to majority As majority is illiterate and e vote for money they are enjoying I am not sure when Hindus will wake up


sethu
மே 08, 2024 12:58

இந்த அரசு நீரோ மன்னரால் நடக்கிறது மாமன்னர் கேட்கிறார் மாதம் மும்முறை மழை பொழிகிறதா மந்திரி நேரு அவர்களே ஆம் மன்னா அப்போ சரி, உச்சி பிள்ளையார்கோயில் இப்போது உங்கள் கைவசம் வந்துவிட்டதா அல்லது இன்னும் நமது எதிரி பொதுமக்கள்தான் அதை வைத்து பயன் அடைகிறார்களா? அதை தவிர்த்து மற்றவை அனைத்தும் எனது வசம் வந்துவிட்டது மன்னா தாங்கள் மனது வைத்தால் உச்சி பிள்ளையார் கோயில் மட்டும் அல்ல ஸ்ரீரங்கம் கோபுரத்தையும் எனது பராக்கிரமத்தில் நான் எடுத்து விடுவேன் மன்னா தங்கள் சித்தம் இந்த அடிமை உங்கள் கண் அசைவுக்காக காத்திருக்கிறேன் மன்னா


sridhar
மே 08, 2024 10:57

பொங்கி வரும் ஹிந்து உணர்வு பாலை ஆயிரம் ருபாய் என்னும் நீர் தெளித்தால் அடங்கி விடும் கடவுள் தான் நமக்கு இந்த ஹிந்து விரோதிகளிடமிருந்து விடுதலை தர வேண்டும்


Lion Drsekar
மே 08, 2024 10:37

எல்லாமே விழலுக்கு இறைத்த நீர் முளையிலேயே கிள்ளாமல் வளரவிட்டு விட்டு இப்போது கதறி என்ன பயன் வந்தே மாதரம்


vbs manian
மே 08, 2024 08:50

வாய்ச்சொல்லில் வீரரடி


GMM
மே 08, 2024 08:14

சுதந்திரத்திற்கு முன் சிறுபான்மை மக்கள் அவர்கள் ஆக்கிரமிப்பு தலைவர்கள் மூலம் போதிய வழிபாட்டு இடங்கள் பெற்று விட்டனர் சுதந்திரம் பின் கருண்யா போன்ற புதிய மத இடங்கள் கூடாது மேலும் இந்துக்கள் போல் குல தெய்வ வழிபாடு கிடையாது சிறுபான்மை மக்கள் எங்கும் வழிபடலாம் யானை வழி தடத்தில் எப்போதும் எந்த கோவிலும் முன்னோர்கள் அமைத்தது இல்லை? திராவிட ஆக்கிரமிப்பு தான் வழித்தடம் மாற காரணம் திராவிடம் வளரும் முன், வன விலங்குகள் வாழும் பகுதிகள் கண்டால் போதும்


Sankaran
மே 08, 2024 08:03

திமுக வுக்கு வாக்கு அளிக்கும் இந்துக்கள், மாற்று மதத்திற்கு மட்டும் காட்டும் சலுகைகளைப்போல, இந்துக் கோவில்களுக்கும் பாதுகாப்பு தரும்வரை, திராவிட model அரசை புறக்கணிக்க வேண்டும்


கஜபதி
மே 08, 2024 07:54

வினாயகர்னுட்டு யானைகளை துன்புறுத்தும் இந்துக் கோவில்கள்.


ஆரூர் ரங்
மே 08, 2024 09:27

ஆனா பிரியாணிக்காக பசுமாடு, ஒட்டகம் பலி கொடுக்கத் தடையில்லை.


மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை