உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / ஆன்லைன் முன்பதிவு வசதி வீட்டுவசதி வாரியம் அறிமுகம்

ஆன்லைன் முன்பதிவு வசதி வீட்டுவசதி வாரியம் அறிமுகம்

சென்னை:வீட்டுவசதி வாரிய திட்டங்களில் வீடு வாங்க விரும்புவோர், 'ஆன்லைன்' முறையில் முன்பதிவு செய்ய, புதிய வசதி உருவாக்கப்பட்டு உள்ளது.வாரிய அதிகாரி ஒருவர் கூறியதாவது:வீட்டுவசதி வாரியத்தில், கட்டி முடிக்கப்பட்ட வீடுகள் குறித்த விபரங்களை மக்கள் எளிதில் அறிய, இணையதளத்தில் புதிய வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது.எந்தெந்த பகுதியில் என்ன திட்டங்கள் உள்ளன; அவற்றில் விற்பனைக்கு தயாராக உள்ள வீடுகளின் விபரங்களை, வாரியத்தின், tnhb.tn.gov.inஎன்ற இணையதளத்தில் அறியலாம். பின், இணையதளம் வாயிலாகவே வீட்டை தேர்வு செய்து, அதை வாங்க முன்பதிவு மற்றும் விண்ணப்பிக்கலாம். முதல் கட்டமாக, அரசு ஊழியர்கள், அதிகாரிகளுக்கான, சென்னை நெற்குன்றம் திட்டத்தில்,'ஆன்லைன்' முன்பதிவு திட்டம் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது; மற்ற இடங்களுக்கும் விரைவில் விரிவுபடுத்தப்படும்.இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்









சமீபத்திய செய்தி