உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / நான் தமிழகத்திற்கும் எம்.பி.,தான்: என்கிறார் மத்திய அமைச்சர் சுரேஷ் கோபி

நான் தமிழகத்திற்கும் எம்.பி.,தான்: என்கிறார் மத்திய அமைச்சர் சுரேஷ் கோபி

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சென்னை: நான் தமிழகத்திற்கும் எம்.பி., தான் என மத்திய அமைச்சரும், நடிகருமான சுரேஷ் கோபி தெரிவித்துள்ளார்.மத்திய அமைச்சரான பிறகு முதன் முதலாக, சென்னை வந்த நடிகர் சுரேஷ் கோபி நிருபர்கள் சந்திப்பில் கூறியதாவது: கேரளாவில் தேர்தலுக்கு முன்பே தமிழகத்திற்கான பிரதிநிதியாகவும் நான் செயல்படுவேன் என கூறியுள்ளேன். நான் தமிழகத்திற்கும் எம்.பி., தான். சுற்றுலாத்துறை பழக்கமான துறை தான். https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=oxxxvroc&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0சுற்றுலாத்துறை பற்றி அதிகம் சிந்திக்கிறேன். ஆனால் பெட்ரோலியத்துறையில் கற்று வருகிறேன். சபரிமலை விவகாரத்தை தொட்டவர்கள் இன்று இல்லாமல் போய்விட்டார்கள். எனக்கு நடிக்க வாய்ப்பு, தூங்க இடம் கொடுத்தது சென்னை தான். தமிழகத்தை நேசிக்கிறேன். இவ்வாறு அவர் கூறினார்.

அரசியல் 'நோ'

நீட் தேர்வு குறித்து நிருபர் கேள்விக்கு, 'அரசியல் குறித்து பேச வேண்டாம்' என சுரேஷ் கோபி ஒரே வரியில் பதில் அளித்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 5 )

venugopal s
ஜூலை 03, 2024 21:15

இவர் எம் பி ஆகியும் இன்னும் நடிப்பதை விட வில்லையா?


T.sthivinayagam
ஜூலை 03, 2024 19:35

அப்ப முருகன் சார் அவ்வளவுதானா


Barakat Ali
ஜூலை 03, 2024 20:11

இவரைப் போல முருகன் லோக் சபா எம் பி யா? ஐந்நூறு, ஆயிரம் ன்னு வாங்கிட்டு ஒட்டு போடுற ஆளுகளுக்கு இவ்ளோதான் அரசியல் ஞானம் ....


உண்ணி நாயர்
ஜூலை 03, 2024 19:11

அதாவது ரெண்டு மாநிலத்துக்கும் ஒண்ணும்.பண்ணாம சினிமாவில் நடிப்பாரு.


Barakat Ali
ஜூலை 03, 2024 20:08

அந்த நாற்பது பொம்மைகளை ஒப்பிட்டால், இவரால் துக்கினியூண்டு பிரயோஜனமாவது இருக்கும் ன்னு சொல்றீங்க ...


மேலும் செய்திகள்







அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை