உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / திமுகவின் கொள்கைகளை மாணவர்கள் மீது திணிப்பதா: அண்ணாமலை எதிர்ப்பு

திமுகவின் கொள்கைகளை மாணவர்கள் மீது திணிப்பதா: அண்ணாமலை எதிர்ப்பு

சென்னை: ‛‛திமுகவின் கொள்கைகளை, மாணவ சமுதாயத்தின் மீது திணிப்பதை எதிர்க்கிறோம் '' என தமிழக பா.ஜ., தலைவர் அண்ணாமலை கூறியுள்ளார்.இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது: பள்ளி, கல்லூரி மாணவர்களிடையே ஜாதி, இன உணர்வுகளால் உருவாகும் வன்முறைகளைத் தவிர்க்கவும், நல்லிணக்கம் ஏற்படுத்தவும். அதற்கான வழிமுறைகளை வகுக்கவும் தமிழக அரசு சார்பில் அமைக்கப்பட்ட முன்னாள் நீதிபதி சந்துரு தலைமையிலான, ஒரு நபர் குழு முதல்வர் ஸ்டாலினிடம் அறிக்கை வழங்கியது.சந்துருவின் அறிக்கைக்கு எதிராக பாஜ செயற்குழு கூட்டத்தில், கண்டனத் தீர்மானம் நிறைவேற்றினோம். இதனால் சந்துரு வருத்தப்பட்டிருக்கிறார் எனத் தெரிகிறது. சமீபத்தில் ஒரு விழாவில், இந்த அறிக்கை குறித்துப் பேசுகையில், நூலகம், அறநெறி குறித்தெல்லாம் பேசி, இவற்றைப் பற்றி பாஜ.,வுக்கு என்ன தெரியும் என்று கூறியிருக்கிறார்.எரிந்து போன யாழ்ப்பாணம் நூலகத்தில் இந்தியப் புத்தகங்களுக்கான பிரத்யேகப் பகுதியை திறந்து வைத்ததும், அதற்கு 16,000 புத்தகங்களை வழங்கிட ஏற்பாடுகள் செய்ததும், பிரதமர் மோடி தலைமையிலான அரசுதான். அதே யாழ்ப்பாணத்தில், சுமார் 11 மில்லியன் அமெரிக்க டாலர் மதிப்பில், கலாச்சார மையம் அமைத்ததும், மோடி அரசுதான். நூலகம், அறநெறி, கலாச்சாரம் குறித்தெல்லாம் சந்துரு எங்களுக்குப் பாடம் நடத்த வேண்டாம்.அறிக்கை அளித்ததோடு உங்கள் பணி நிறைவடைந்தது என்பதை நீங்கள் மறந்து விட்டீர்கள். ஜனநாயகத்தில், அரசின் பொதுமக்கள் சார்ந்த நடவடிக்கைகளுக்கு ஆதரவும், எதிர்ப்பும் தெரிவிப்பது எதிர்க்கட்சிகளின் பணி. திமுகவின் கொள்கைகளை, மாணவ சமுதாயத்தின் மீது திணிப்பதைத்தான் எதிர்க்கிறோம். அரசியல் பேச வேண்டும் என்ற விருப்பம் இருந்தால், சந்துரு, அதிகாரப்பூர்வமாக திமுகவில் இணைந்து கொள்ளலாம். சுயலாபத்துக்காக, அரசு அமைக்கும் குழுக்களில் அமர்ந்து கொண்டு. மக்களின் வரிப்பணத்தில், திமுகவின் கொள்கைகளை, குழு அறிக்கை என்ற பெயரில் மாணவ சமுதாயத்தின் மீது திணித்தால், அதற்கான எதிர்ப்பும் நிச்சயம் இருக்கும். இவ்வாறு அந்த அறிக்கையில் அண்ணாமலை கூறியுள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 42 )

M Ramachandran
ஆக 07, 2024 13:09

அது தானே நெல்லுரிலிருந்து குடிபெயர்ந்த கொள்ளை குடும்ப கொள்கை எவ்வளவு முடியுமோ தமிழரார் குடிகாரர்களாக்கி அதில் குளிர் காய்ந்து அறுவடை செய்து தங்கள் சொந்த வழி வந்த நாட்டிற்கு நன்றியாக நடத்தல்.


Dharmavaan
ஆக 07, 2024 08:59

நறுக்கு தெறித்தாற்போல் பதில் சந்துரு வெட்கப்பட வேண்டும் .கேவலம் சட்டம் படித்தவன் ஐ ஏ எஸ் /ஐ பி எஸ் க்கு இணையாக முடியாது


நிக்கோல்தாம்சன்
ஆக 07, 2024 07:14

மற்றவர்களின் மீது தான் என்பது தான் ஜனநாயகமா சந்துரு, இது டை அடிப்பது போல அல்ல எண்பதாவது இந்த கோட்டா புலிக்கு தெரியுமா?


spr
ஜூலை 31, 2024 08:28

எகிப்தில் பிரமீடுக்களைக் கட்டிய மக்களுக்கும் சைனாவில் மதிற்சுவர் கட்டிய மக்களுக்கும் தாங்கள் அடிமைகள் என்றாவது தெரியும் பணியவில்லையென்றால் உயிர் போகும் என்றும் தெரியும் ஆனால் அரசியல் கட்சித் தொண்டர்களுக்கு, குறிப்பாகக் கழக அடிமைகளுக்கு, தாங்கள் கழகத்தின் கொத்தடிமைகள் என்று தெரியவே தெரியாது என்பதுதான் அவலம்


Sampath Kumar
ஜூலை 19, 2024 08:47

அவர்களாவது மாணவர்கள் மட்டும் தான் உங்க கட்சி மக்களிடமே தினியே தீனி என்று திணிக்கிறதே அதுக்கு என்ன சொல்லுற நீ போவியா


Balraj Alagarsamy
ஜூலை 19, 2024 00:35

அடுத்தவர் சொத்தை எப்படி அவருக்கே தெரியாமல் கொள்ளை அடிப்பது .. ஒருவனை யோசிக்கவே விடாமல் எப்படி கொத்தடிமையாக வைத்திருப்பது .,, இந்து மதத்தை மிக மிக கேவலமாக பேசினாலும் சூடு சொரணை வராமல் உயிர் மட்டும் வாழும் ஜென்மங்களாக கொத்தடிமைகளாக இருக்கும் உடன்பிறப்புகளின் கூடாரம் தான் இந்த திருட்டு கழகம் ... இப்படிப்பட்ட கொத்தடிமைகள் ஆர் எஸ் எஸ் பற்றியும் , அதன் அரசியல் இயக்கமான பிஜேபி பற்றியும் பேச எந்த அருகதையும் இல்லை என்பதுதான் யோசிக்கத் தெரிந்தவர்களின் கருத்து .. உண்மையும் கூட..


Kesavan
ஜூலை 18, 2024 21:33

திமுகவின் கொள்கை தான் நாட்டுக்கு நல்லது பிஜேபியின் கொள்கை நாட்டை நாசமாக்கும் சமுதாயத்தை சீரழிக்கும் அதையெல்லாம் எப்படிப்போய் மாணவர்களுக்கு சொல்லிக் கொடுக்க முடியும் சொல்லலாம் எந்த காலத்திலும் இந்த ஜென்மங்களுக்கு ஆதரவளிக்காதீர்கள் என்று சொல்லலாம்


SRIRAMA ANU
ஜூலை 18, 2024 21:15

வாக்கு சதவிகிதம் சரிந்ததற்கு 6 காரணங்களை அடுக்கப்பட்டுள்ளதாம்.. கட்சியினருக்கு இடையே ஒற்றுமை இல்லாதது, அரசு தேர்வுகளில் அடிக்கடி வினாத்தாள் கசிந்தது.. அரசு பணிகளில் ஒப்பந்த ஊழியர்களை பணியில் அமர்த்தியது, இட ஒதுக்கீடு விவகாரத்தில் ஆளும் கட்சிக்கு எதிராக எதிர்க்கட்சிகள் முன் வைத்த காரணம் உள்ளிட்டவையே தோல்விக்கு காரணம் என்று அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாம்.. இந்த அறிக்கையில் பாஜக வாக்கு விகிதம் 8 சதவிகிதம் குறைந்து இருப்பதாகவும், மத்திய தலைமை உடனடியாக உறுதியான நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளதாம். Play 00:00 00:00 Mute Play யோகி ஆதித்யநாத் காரணமா?: உத்தர பிரதேசத்தில் பாஜக பின்னடைவு சந்தித்தது தொடர்பான ஆலோசனைக் கூட்டங்களில் அக்கட்சி எம்.எல்.ஏக்கள் பலரும் முதல்வர் யோகி ஆதித்யநாத்தின் அதீத தன்னம்பிக்கையே இவ்வளவு பெரிய தோல்விக்குக் காரணம் என்று சொல்லியிருக்கிறார்கள்.. யோகி ஆதித்யநாத்துக்கு எதிரான பாஜக எம்.எல்.ஏக்கள் , துணை முதல்வர் கேசவ் பிரசாத் மவுரியா தலைமையில் இனி வரும் தேர்தல்களை சந்திக்க வேண்டும் எனவும் குரல் கொடுத்து வருகின்றனர். மாற்றப்படுகிறாரா?: இதனால், உத்தர பிரதேச பாஜகவிற்குள் உள்கட்சி பூசல் அதிகரித்துள்ளது. இதற்கிடையே, டெல்லி சென்ற கேசவ் பிரசாத் மவுரியா, பாஜக தலைவர் ஜேபி நட்டா உள்ளிட்டோரை சந்தித்து பேசினார். இதனையடுத்து உ.பி. முதல்வர் யோகி ஆதித்யநாத் மாற்றப்படலாம் அல்லது உ.பி. பாஜக தலைவர் மாற்றப்படலாம் என தகவல்கள் வெளியாகி இருக்கின்றன. இதனால் உத்தர பிரதேச அரசியலில் ஹை டென்ஷன் நிலவுகிறது.


Arul Narayanan
ஜூலை 18, 2024 16:49

அண்ணாமலை லண்டன் போய் விட்டால் இவர்களை எல்லாம் யார் கேள்வி கேட்பது?


SRIRAMA ANU
ஜூலை 18, 2024 21:15

முதலில் லண்டன் போக சொல்லுங்கள்....


Godyes
ஜூலை 18, 2024 15:20

பதினெட்டு வயது என்பது கல்வி யறிவுக்கு மேல் வளர வேண்டிய உலக பொது அறிவு.படும் அநுபவங்களில் தான் பட்டறிவு சேர்ந்து நன்மை தீமைகள் நல்லவர் கெட்டவர் யார் என பகுத்தறிந்து செயல் பட முடியும் அது 25 வயதுக்கு மேல் தான் கிடைக்கும்.


மேலும் செய்திகள்







புதிய வீடியோ