உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / அரசு பஸ் ஊழியர்களுக்கு ஊக்கத்தொகை

அரசு பஸ் ஊழியர்களுக்கு ஊக்கத்தொகை

சென்னை:பொங்கல் பண்டிகையை ஒட்டி, 1.12 லட்சம் போக்குவரத்துக் கழகப் பணியாளர்களுக்கு, 6.75 கோடி ரூபாய் சாதனை ஊக்கத் தொகை வழங்கப்பட உள்ளது.போக்குவரத்துக் கழக செயலர் பணீந்திர ரெட்டி அறிவிப்பு:அரசு போக்குவரத்துக் கழகங்கள், போக்குவரத்து வளர்ச்சி நிறுவனம், பல்லவன் போக்குவரத்து அறிவுரைப் பணிக் குழு ஆகியவற்றில் பணிபுரியும் பணியாளர்களுக்கு சாதனை ஊக்கத் தொகை வழங்கப்பட உள்ளது.அதாவது, 2023ம் ஆண்டு 91 நாட்கள் முதல் 150 நாட்கள் வரை பணிபுரிந்த ஊழியர்களுக்கு, 85 ரூபாய்; 151 நாட்கள் முதல் 200 நாட்கள் வரை, 195 ரூபாய்; 200 நாட்கள் மற்றும் அதற்கு மேல் 625 ரூபாய் வீதம், பொங்கல் சாதனை ஊக்கத் தொகை வழங்கப்படும்.இதன்படி, ஒரு லட்சத்து 12,675 போக்குவரத்துக் கழகப் பணியாளர்களுக்கு, 6 கோடியே 75 லட்சத்து 73,000 ரூபாய் வழங்கப்படும்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை