உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / குடியுரிமை சட்டம் குறித்து விமர்சனம் : அமெரிக்காவுக்கு இந்தியா பதிலடி

குடியுரிமை சட்டம் குறித்து விமர்சனம் : அமெரிக்காவுக்கு இந்தியா பதிலடி

புதுடில்லி :'குடியுரிமை திருத்த சட்டம் தொடர்பாக அமெரிக்காவின் கருத்து தவறானது; தேவையற்றது' என, மத்திய அரசு தெரிவித்துள்ளது.சமீபத்தில், மத்திய அரசு குடியுரிமை திருத்த சட்டத்தை அமல்படுத்தியது. இது தொடர்பாக அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் விமர்சனங்களை முன்வைத்தன. குடியுரிமை திருத்த சட்டம் குறித்து அமெரிக்க வெளியுறவு அமைச்சக செய்தி தொடர்பாளர் மேத்யூ மில்லர் கூறுகையில், ''குடியுரிமை திருத்த சட்டம் இந்தியாவில் மத சுதந்திரத்தை பாதிக்கும். இது எங்களுக்கு கவலைஅளிக்கிறது. இந்த சட்டத்தையும், அமல்படுத்தும் முறையையும் கூர்ந்து கவனித்து வருகிறோம்,'' என்றார். அமெரிக்காவின் இந்த கருத்துக்கு மத்திய அரசு பதிலடி கொடுத்துள்ளது. இது தொடர்பாக, மத்திய வெளியுறவு அமைச்சக செய்தி தொடர்பாளர் ரந்தீர் ஜெய்ஸ்வால் கூறியதாவது:குடியுரிமையை வழங்குவதுதான் குடியுரிமை திருத்த சட்டத்தின் நோக்கம்; எவரது குடியுரிமையையும் பறிப்பது அல்ல. இந்த சட்டம் நாடு இல்லாமல் அகதிகளாக வந்தவர்களின் பிரச்னையை தீர்க்கிறது. கண்ணியத்தை வழங்குகிறது; மனித உரிமையை ஆதரிக்கிறது. இது தொடர்பாக அமெரிக்காவின் கருத்துகள் தவறானது. அதே சமயம் தேவையற்றது. இந்தியாவின் பன்முகத்துவ மரபுகள் மற்றும் பிரிவினைக்குப் பிறகான வரலாறு பற்றி சரியான புரிதல் இல்லாதவர்கள் பாடம் எடுக்காமல் இருப்பது நல்லது. அதுமட்டுமின்றி இது இந்தியாவின் சட்ட விவகாரம். இந்தியாவின் நட்பு நாடுகள் மற்றும் நலன் விரும்பிகள் இந்த சட்டத்தை வரவேற்பர் என நம்புகிறேன். இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 2 )

Vijay D Ratnam
மார் 16, 2024 00:14

எப்புட்றா இந்தியாவில் குடியுரிமை திருத்த சட்டம் மத சுதந்திரத்தை பாதிக்கும்னு அமெரிக்காவில ஒப்பாரி வைக்கிறீங்க. இந்தியாவில் இருந்து இஸ்லாமிய மதத்திற்காக தனியாக நாடு வேண்டும் எனபிரிந்து போன நாடு பாகிஸ்தானும் பங்களாதேஷும். அங்கிருந்த சிறுபான்மை ஹிந்துக்கள் மதரீதியாக பாதிப்படையும் போது அவர்களை காத்து குடியுரிமை தரவேண்டியது இந்தியாவின் கடமை. இந்தியா சுதந்திரம் அடைந்த போது இஸ்லாமியர்களுக்காக தனியாக நாடு வேண்டும் என்று ஒன்றுபட்ட நாட்டை பிரித்து கூறு போட்டுக்கொண்டு போன போது பாகிஸ்தானில் பங்களாதேஷில் எத்தனை சதவிகிதம் ஹிந்துக்கள் இருந்தார்கள், இப்போது எத்தனை சதவிகிதம் இருக்கிறார்கள் என்று பாருங்கடா. ங்கொம்மால, 1947 ல் மிச்சமிருந்த இத்தியாவில் எத்தனை சதவிகிதம் இஸ்லாமியர்கள் இருந்தார்கள், இப்போது எத்தனை சதவிகிதம் இருக்கிறார்கள்


Ramesh Sargam
மார் 15, 2024 23:17

அமெரிக்காவின் கருத்துகள் தவறானது. அதே சமயம் தேவையற்றது. அமெரிக்கா முதலில் அவர்கள் நாட்டில் நடக்கும் அந்த தொடர் துப்பாக்கி சூட்டு பிரச்சினைக்கு ஒரு முடிவுகாணவேண்டும். உயிர்பலிகளை தடுத்து நிறுத்தவேண்டும். அனாவசியமாக இந்திய நாட்டு உள்விஷயங்களில் மூக்கை நுழைக்காமல் இருப்பது அமெரிக்காவிற்கு நல்லது.


மேலும் செய்திகள்













அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை