உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / தேர்தலுக்காக லஞ்சமா பொங்கல் பரிசு ரூ.5,000?

தேர்தலுக்காக லஞ்சமா பொங்கல் பரிசு ரூ.5,000?

சட்டசபை தேர்தலில் அ.தி.மு.க., தோல்வி அடைந்ததற்கு பா.ஜ., காரணம் என கூறுவதை ஏற்க முடியாது. அ.தி.மு.க., உட்கட்சி பிரச்னை சாதாரணமானது. த.வெ.க.,வுக்கு ஒரு கவுன்சிலர் கூட கிடையாது. அக்கட்சியை நம்பி, முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் சென்றுள்ளார். த.வெ.க., கட்சிக்கும், அவருக்கும் தோல்வியே கிடைக்கும்.கடந்த முறை பொங்கலுக்கு, ரேஷன் கார்டு தாரர்களுக்கு 1,000 ரூபாய் கூட கொடுக்கவில்லை; இந்த முறை, 5,000 ரூபாய் கொடுக்கப் போகின்றனராம். தேர்தலுக்காக லஞ்சம் கொடுக்கும் முயற்சி இது. கடந்த சட்டசபை தேர்தலில், அ.ம.மு.க.,வுடன் பா.ஜ., கூட்டணியாக இல்லை. இப்போதும் கூட, அ.ம.மு.க., பொதுச் செயலர் தினகரனுடன் நட்பாகவே உள்ளோம். எனக்கு தெரிந்த வரையில், தமிழக பா.ஜ., முன்னாள் தலைவர் அண்ணாமலை தனிக்கட்சி துவங்க வாய்ப்பில்லை. - நயினார் நாகேந்திரன் தலைவர், தமிழக பா.ஜ.,


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை