உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / ஆர்டர்லியாக ஒருவர் கூட இல்லை என்பதை ஏற்க முடியவில்லை: ஐகோர்ட்

ஆர்டர்லியாக ஒருவர் கூட இல்லை என்பதை ஏற்க முடியவில்லை: ஐகோர்ட்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சென்னை: 'தமிழகத்தில் காவல் துறை உயர் அதிகாரிகள் வீடுகளில், 'ஆர்டர்லி'களாக ஒருவர் கூட பணியில் இல்லை என, டி.ஜி.பி., கூறுவதை ஏற்க முடியவில்லை' என, சென்னை உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது. கோவில் தொடர்பாக வழக்கு தொடரும் சேலத்தைச் சேர்ந்த ராதாகிருஷ்ணன் என்பவர், தனக்கு பாதுகாப்பு வழங்க கோரி, சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். இந்த மனு மீதான விசாரணையின் போது, 'தமிழகத்தில் 'ஆர்டர்லி' முறை முற்றிலுமாக ஒழிக்கப்பட வேண்டும்' என, கடந்த 2022ம் ஆண்டு உயர் நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. 'இந்த உத்தரவு முழுமையாக பின்பற்றப்பட்டதா' என, நீதிபதிகள் எஸ்.எம்.சுப்ரமணியம், சி.குமரப்பன் அடங்கிய அமர்வு, வழக்கு விசாரணையின்போது கேள்வி எழுப்பியது. இதற்கு, 'காவல் துறை உயர் அதிகாரிகள் வீடுகளில், ஆர்டர்லிகளாக தற்போது யாரும் இல்லை' என, டி.ஜி.பி., சார்பில் அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது. இந்த வழக்கு, எஸ்.எம். சுப்ரமணியம் , சி.குமரப்பன் அடங்கிய அமர்வு முன், நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதிகள் கூறியதாவது: ஆர்டர்லிகளாக யாரையும் பணியில் வைத்திருக்கக் கூடாது என, டி.ஜி.பி., சுற்றறிக்கை அனுப்பியதை பாராட்டுகிறோம். அதே வேளையில், ஆர்டர்லிகளாக சீருடை காவலர்கள் பணியாற்றி வருவதாக, நாளிதழ்களிலும், பொதுத்தளத்திலும் தகவல்கள் வரும் நிலையில், ஆர்டர்லிகளாக யாரும் இல்லை என டி.ஜி.பி., கூறுவதை ஏற்க முடியவில்லை. இவ்வாறு நீதிபதிகள் கூறினர். அதற்கு பதிலளித்த தமிழக அரசின் தலைமை குற்றவியல் வழக்கறிஞர் அசன் முகமது ஜின்னா, ''ஆர்டர்லி பணியில் இருப்பது தொடர்பாக புகார் எதுவும் வந்தால், உரிய நடவடிக்கை எடுக்கப்படும்,'' என்றார்.இதையடுத்து நீதிபதிகள், இந்த வழக்கில் தமிழக அரசின் தலைமை செயலர் மற்றும் உள்துறை செயலர் ஆகியோரை இணைத்து உத்தரவிட்டனர். மேலும், இந்த வழக்கில் அட்வகேட் ஜெனரல் நீதிமன்றத்துக்கு உதவ வேண்டும் என கூறி, வழக்கை ஜனவரி 7ம் தேதிக்கு தள்ளிவைத்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 2 )

Ramesh Sargam
டிச 20, 2025 13:22

தமிழகத்தில் காவல் துறை உயர் அதிகாரிகள் வீடுகளில், ஆர்டர்லிகளாக ஒருவர் கூட பணியில் இல்லை. ஆம், உண்மைதான். அவர்கள் அந்த உயர் அதிகாரிகளுக்கும், அவர்கள் வீட்டினருக்கும் அடிமைகளாக உள்ளனர்.


raja
டிச 20, 2025 11:40

இந்த முறையால் என்ன பயன்.. பெரிதாக பயன் ஏதும் இல்லை போலிருக்கிறது


மேலும் செய்திகள்







அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை