உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / அது ஒரு சதுரங்க விளையாட்டு: ஆப்பரேஷன் சிந்தூர் குறித்து விளக்கிய ராணுவத் தலைமை தளபதி திவேதி

அது ஒரு சதுரங்க விளையாட்டு: ஆப்பரேஷன் சிந்தூர் குறித்து விளக்கிய ராணுவத் தலைமை தளபதி திவேதி

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சென்னை: ஆப்பரேஷன் சிந்தூரில் நாங்கள் சதுரங்க விளையாட்டு போல சாதுர்யமாக விளையாடினோம் என ராணுவத் தலைமை தளபதி உபேந்திர திவேதி தெரிவித்துள்ளார்.சென்னை ஐஐடியில் நடந்த நிகழ்ச்சியில், ராணுவத் தலைமைத் தளபதி உபேந்திர திவேதி பேசியதாவது: ஆப்பரேஷன் சிந்தூரில், நாங்கள் சதுரங்கம் விளையாடினோம். எதிரியின் அடுத்த நகர்வு என்னவாக இருக்கும், என்ன செய்யப் போகிறோம் என்பது எங்களுக்குத் தெரியாது. இது கிரே சோன் (Grey zone) என்று அழைக்கப்படுகிறது. கிரேசோன் என்றால் நாம் வழக்கமான நடவடிக்கைகளுக்கு அல்ல. https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=6lhewpgl&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0நமது வழக்கமான நடவடிக்கையை விட வித்தியாசமானது. நாங்கள் சதுரங்க நகர்வுகளைச் செய்து கொண்டிருந்தோம். அவர்களும் (எதிரி) சதுரங்க நகர்வுகளைச் செய்து கொண்டிருந்தார். எங்கோ நாங்கள் அவர்களுக்கு செக்மேட்டைக் கொடுத்துக் கொண்டிருந்தோம். ஆப்பரேஷன் சிந்தூர் நடவடிக்கையை செயல்படுத்த பாதுகாப்பு படையினருக்கு மத்திய அரசு அதிகாரம் அளித்தது. ஏப்ரல் 22ம்தேதி அன்று பஹல்காமில் நடந்தது நாட்டையே அதிர்ச்சிக்குள்ளாக்கியது. மறுநாளே, 23ம் தேதி, நாங்கள் அனைவரும் அமர்ந்தோம். பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங், 'எல்லாம் போதும் போதும்' என்று கூறியது இதுவே முதல் முறை. சுதந்திரமான முறையில் செயல்பட உத்தரவுகள் வழங்கப்பட்டன. என்ன செய்ய வேண்டும் என்பதை நீங்களே முடிவு செய்யுங்கள்.' அந்த வகையான நம்பிக்கை, அரசியல் தெளிவை நாங்கள் முதன்முறையாகக் கண்டோம். இவ்வாறு அவர் பேசினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 6 )

Priyan Vadanad
ஆக 10, 2025 15:26

அரூர் ருங் கருத்து முற்றிலும் சரியானது.


vivek
ஆக 10, 2025 21:09

ஆரூர் ரங் அறிவு உமக்கு எட்ட...இன்னும் நீங்க வளரனும் பிரியன்


M Ramachandran
ஆக 10, 2025 14:47

ஐயா இது என்ன அவனுக்கு புரியாத பாஷயில் சொன்னால் எப்படி புரியும் அவன் ஒரு லாலி பப் சப்பும் குழந்தை. அவனுக்கு புரியற மாதிரியான பாஷயில் சொல்லணும்.அப்போது தான் கொஞ்சமாவது ...


SUBBU,MADURAI
ஆக 10, 2025 12:19

On 23rd, Defence Minister Rajnath Singh said, enough is enough. We are giving you free hands, you decide what is to be done. That is the kind of confidence, political direction and political clarity we saw for the first time - Chief of Army Staff General Upendra Dwived


Kasimani Baskaran
ஆக 10, 2025 10:19

எல்லாம் சரிதான். அடித்து உடைக்கவேண்டிய நேரத்தில் போரை நிறுத்தியது பாக்கிகளுக்கு உயிர் கொடுத்தது போல ஆகிவிட்டது. ஆக்கிரமிப்பு காஷ்மீரை மீட்க பொன்னான சந்தர்ப்பத்தை இந்தியா இழந்துவிட்டது என்றுதான் எடுத்துக்கொள்ள வேண்டும்.


ஆரூர் ரங்
ஆக 10, 2025 12:36

ஆக்கிரமிப்பு காஷ்மீரில் சீனா நிறைய முதலீடு செய்து காரகோரம் ஹைவே போன்ற உட்கட்டமைப்பு திட்டங்களைக் கட்டி தன் கட்டுப்பாட்டில் வைத்துள்ளது. ஆக அங்கு தாக்குதல் நடத்துவது சீனாவையும் தாக்குவதற்கு சமம். பின்விளைவுகள்?


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை