மேலும் செய்திகள்
பூத் ஏஜன்ட் நியமனத்தில் முதலிடத்தில் தி.மு.க.,
1 hour(s) ago
வாக்காளர் பட்டியலில் மா.கம்யூ., சந்தேகம்
3 hour(s) ago
சென்னை: ஜல்லிக்கட்டு மாடுபிடி வீரர்களுக்கு மாதம் ரூபாய் 1000 உதவித்தொகை வழங்க வேண்டும் என அ.தி.மு.க., பொதுச்செயலாளர் இ.பி.எஸ் வலியுறுத்தி உள்ளார்.இது குறித்த இ.பி.எஸ்., கூறியிருப்பதாவது: 'உழுதுண்டு வாழ்வாரே வாழ்வார்மற் றெல்லாம் தொழுதுண்டு பின்செல் பவர்' எனும் கூற்றுக்கு ஏற்ப உலகை வழி நடத்தும் உழவுத் தொழில் செய்யும் உழவர் பெருமக்களுக்கும், அந்த உழவுக்கு துணை நிற்கும் மாடுகளுக்கும் இந்த உழவர் திருநாளில் எனது நன்றிகளையும் வணக்கங்களையும் தெரிவித்துக் கொள்கிறேன்.ஆட்சிக்கு வந்து மூன்றாண்டுகள் ஆன இந்த திமுக அரசு தமிழகத்தின் ஜல்லிக்கட்டு மாடுபிடி வீரர்களுக்கு மாதம் ரூபாய் 1000 உதவித்தொகை வழங்கப்படும் என தனது தேர்தல் அறிக்கையில் தெரிவித்திருந்ததை உடனடியாக செயல்படுத்த வேண்டும் என வலியுறுத்துகிறேன். இவ்வாறு இ.பி.எஸ்., கூறியுள்ளார்.
1 hour(s) ago
3 hour(s) ago