உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / நீதிபதி சந்துரு அறிக்கையை ஏற்க முடியாது: அண்ணாமலை

நீதிபதி சந்துரு அறிக்கையை ஏற்க முடியாது: அண்ணாமலை

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சென்னை : பள்ளிகளில் ஜாதிக்கு கடிவாளம் போட வேண்டும் என்பது உண்மை தான் . ஆனால் நீதிபதி சந்துரு அறிக்கையை ஏற்க முடியாது என தமிழக பா.ஜ., தலைவர் அண்ணாமலை கூறியுள்ளார்.தமிழக பா.ஜ.,வின் மையக்குழு கூட்டத்திற்கு பிறகு அண்ணாமலை நிருபர்களிடம் கூறியதாவது: நீட் தேர்வை பொறுத்தவரை 2024ம் ஆண்டு தமிழகத்திற்கு சிறப்பான ஆண்டு. நீட் தேர்வில் யார் குளறுபடி செய்தாலும் நடவடிக்கை எடுக்கப்படும். தேர்வில் தவறு இல்லை. தேர்வை நடத்திய தேசிய தேர்வு முகமை மீது தான் குற்றம்சாட்டப்படுகிறது. இந்த அமைப்பு பல்வேறு தேர்வுகளை நடத்தி வருகிறது. தேசிய தேர்வு முகமையை மறு ஆய்வு செய்யப் போவதாக மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான் கூறியுள்ளார். நீட் குளறுபடி குறித்து மறு ஆய்வு செய்யப்பட்டு தவறு இருந்தால் நடவடிக்கை எடுக்கப்படும்.தமிழகத்தில் கள்ளச்சாராய புழக்கம் அதிகரித்து உள்ளது. தனது பணியை மேற்கொள்ளாத அமைச்சர் முத்துசாமி பதவி விலக வேண்டும். தமிழகத்தில் அரசு அதிகாரிகளுக்கு பாதுகாப்பு இல்லை. அரசு அதிகாரிகள் மீது மணல் கடத்தல் கும்பல் தாக்குதல் நடத்துகின்றனர். தாக்குதல் நடத்துவோர் மீது நடவடிக்கை இல்லை. வி.ஏ.ஓ.,க்கள் துப்பாக்கி லைசென்ஸ் கேட்டு பெறும் அளவுக்கு சட்டம் ஒழுங்கு உள்ளது.பள்ளிகளில் ஜாதிக்கு கடிவாளம் போட வேண்டும் என்பது உண்மை தான் . ஆனால் சந்துரு அறிக்கையை ஏற்க முடியாது. அந்த அறிக்கையில் ஏற்றுக் கொள்ள முடியாத பல அம்சங்கள் உள்ளன. அவற்றை செயல்படுத்தினால், பள்ளி கல்லூரிகளில் மேலும் ஜாதி ரீதியிலான பிரச்னைகள் அதிகரிக்க வாய்ப்புகள் உள்ளன. கள்ளர், ஆதிதிராவிடர் பள்ளிகளை பள்ளிகல்வித்துறையின் கீழ் கொணடு வரக்கூடாது. ஆசிரியர்களை ஜாதி பார்த்து தேர்வு செய்து ஜாதி பார்த்து வேலை வழங்குவதை ஏற்க முடியாது. அகர வரிசைப்படி மாணவர்கள் அமர வேண்டும் என்ற அறிவுறுத்தல் எப்படி சரியாக இருக்க முடியும்.ஆக்கப்பூர்வமாக முடிவு எடுக்காமல் கையில் கயிறு கட்டி விபூதி குங்குமத்தை வைத்து அடையாளப்படுத்துவது சரியல்ல. பள்ளிகளில் தேர்தல் நடத்தினால் ஜாதி அரசியல் தான் அதிகரிக்கும். இவ்வாறு அண்ணாமலை கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 65 )

Annapoorani Guruchandrasekaran
ஜூன் 23, 2024 14:43

இதிலிருந்து அண்ணாமலைக்கு கள் நிலவரம் தெரியவில்லை என்று தெரிகிறது


MADHAVAN
ஜூன் 22, 2024 11:25

பல ஊர்களில் ஜாதி கயிறுனு விக்குறானுங்க, நெத்தில விபூதி,குங்குமம் வைப்பதற்கு பதிலாக வேறு வர்ணபூசு வைக்குதானுங்க, இதுதான் களைய வேண்டும்


Balakrishnen a
ஜூன் 22, 2024 01:45

பொறுப்பில்லாத அரசு இலவசத்தை தவிர விறொன்றும் தெரியாது


Balakrishnen a
ஜூன் 22, 2024 01:10

ஜாதி பொட்டு கயிறு நீதிபதி சந்துரு இந்த பருப்பெல்லாம் இந்துக்கள் அதிகம் உள்ள தமிழ் நாட்டில் வேகவே வேகாது


Balakrishnen a
ஜூன் 22, 2024 01:05

ஜாதி நெற்றியில் பொட்டு கையில் சாமி கயிறு அணியக்கூடாது என்று பள்ளிகளில் சட்டம் கொண்டு வந்தால் தனி மனிதன் உரிமை பாதிக்க க்கப்படும் ஜாதி பிரச்சனை முன்பைவிட அதிகரிக்கும்


M.Prabakar
ஜூன் 21, 2024 17:37

திலகம் இடுவதையும் கயிறு கட்டுவதையும் தடை செய்யச் சொல்லும் இவரால் சிலுவை அணிவதும், ஹிஜாப் அணிவதையும் தடை செய்யச் சொல்லும் தைரியம்,நேர்மை உள்ளதா?


tmranganathan
ஜூன் 20, 2024 19:15

இந்தாளுக்குனு ஒரு mosam ஆனா ஜாதிவெறியன் அந்த சந்துரு தான் agappattaaraa?


Rvn
ஜூன் 20, 2024 16:21

சந்துரு ஐ நீதிபதியாகவே ஏற்க முடியல ? அவர் தீர்ப்பை எப்படி ஏற்பது


Rvn
ஜூன் 20, 2024 16:08

வீட்டை IT dept செக் பண்ணனும் .


ஆ.செந்தில்குமார், முழு நேர சங்கி
ஜூன் 20, 2024 11:51

சாதி கட்சியான பா.ம.க யுடன் கூட்டு வைத்துள்ள அண்ணாமலைக்கு சாதி கடிவாளத்தை பேச தகுதியில்லை?


Rvn
ஜூன் 20, 2024 16:02

திமுக உடன் உள்ள விடுதலை சிறுத்தை , முஸ்லீம் லீக் இதெல்லாம் சுதந்தர போராட்ட கட்சிகள ?


Meignani Perumal
ஜூன் 22, 2024 21:45

டுமுய்கவுக்கு உண்டா. எல்லா சாதி, மதம் வைத்துள்ள இவங்க பேசப்பாடாது


மேலும் செய்திகள்











அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை