உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் /  ஆசிரியர்களை பாதுகாக்க சட்ட திருத்தம் அவசியம்; பிரதமருக்கு முதல்வர் கடிதம்

 ஆசிரியர்களை பாதுகாக்க சட்ட திருத்தம் அவசியம்; பிரதமருக்கு முதல்வர் கடிதம்

சென்னை: 'இலவச மற்றும் கட்டாய கல்வி உரிமை சட்டம், தேசிய ஆசிரியர் கல்வி குழும சட்டம் போன்றவற்றில் திருத்தம் மேற்கொள்ள வேண்டும்' என, பிரதமர் மோடிக்கு, முதல்வர் ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார். அவரது கடிதம்: இலவச மற்றும் கட்டாய கல்வி உரிமை சட்டம் மற்றும் தேசிய ஆசிரியர் கல்வி குழும சட்டம் போன்றவற்றில் திருத்தம் மேற்கொண்டு ஆசிரியர்களை பாதுகாப்பதுடன், பதவி உயர்வுக்கு தகுதி உடையவர்களாக இருப்பதையும், குழந்தைகளின் கல்வி பாதிக்கப்படாமல் இருப்பதையும் உறுதி செய்ய வேண்டும். கடந்த செப்.,1ல் உச்சநீதிமன்றம் வழங்கிய தீர்ப்பில், 'பணியில் உள்ள அனைத்து ஆசிரியர்களும், வேலையில் தொடர, இரண்டு ஆண்டுகளுக்குள், 'டெட்' தேர்வில் தேர்ச்சி பெற வேண்டும்' என, கூறியுள்ளது. அதேநேரத்தில், ஐந்து ஆண்டுகளுக்கும் குறைவான பணிக்காலம் உள்ள ஆசிரியர்கள், பணியை தொடர அனுமதிக்கப்பட்டாலும், டெட் தகுதி பெறாவிட்டால், பதவி உயர்வுக்கு தகுதியவற்றவர்களாக இருப்பர் என தெரிவித்து உள்ளது. இதன் விளைவாக, ஆசிரியர்கள் இரண்டு ஆண்டுகளுக்குள், 'டெட்' தேர்ச்சி பெற வேண்டும். இல்லாவிட்டால் அவர்களின் வேலை பறிக்கப்படும். இது நிர்வாகத்திற்கு சிரமம் ஏற்படுத்துவதுடன், ஆசிரியர்களுக்கும் தனிப்பட்ட சிரமத்தை ஏற்படுத்தும். தமிழகத்தில் மட்டும், 4 லட்சம் ஆசிரியர்கள் பாதிக்கப்படுவர். எனவே, இலவச மற்றும் கட்டாய கல்வி உரிமை சட்டம் மற்றும் தேசிய ஆசிரியர் கல்வி குழும சட்டம் ஆகியவற்றில் உரிய திருத்தம் மேற்கொள்ள வேண்டும். இவ்வாறு கடிதத்தில் கூறியுள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை