உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / ஓட்டுக்கு பணம் வாங்கினால் நடவடிக்கை பாயும்: சாஹூ

ஓட்டுக்கு பணம் வாங்கினால் நடவடிக்கை பாயும்: சாஹூ

சென்னை; ''ஓட்டுக்கு பணம் கொடுப்போர் மீதும், வாங்குவோர் மீதும் வழக்கு பதிவு செய்யப்படும்,'' என, தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹு தெரிவித்தார்.அவர் கூறியதாவது: தேர்தலில் வாக்காளர்களுக்கு பணம் கொடுப்பதை தடுக்க, பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறோம். வாக்காளர்களுக்கு பணம் மற்றும் பரிசுப் பொருட்கள் கொடுப்பதும் குற்றம், அதை வாங்குவதும் குற்றம். ஓட்டுக்கு பணம் கொடுப்போர் மீதும், வாங்குவோர் மீதும் வழக்கு பதிவு செய்யப்பட்டு, சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும்.பணம் மற்றும் பரிசுப் பொருட்கள் வினியோகம், இரவு 10:00 மணிக்கு மேல் பிரசாரம் செய்தல் போன்றவை குறித்து, பொதுமக்கள், 'சி விஜில்' மொபைல் ஆப்ஸ் வழியாக புகார் அளிக்கலாம். தேர்தல் விதிமீறல்கள் குறித்து புகார் அளிக்க, பொதுமக்கள் முன் வர வேண்டும்.இதுவரை பணம் கொடுத்ததாக புகார் வரவில்லை. ஒன்றிரண்டு புகார்கள் வந்தன; அவையும் பழைய வீடியோக்கள். தமிழகத்தில் பதற்றமான ஓட்டுச் சாவடிகளாக, 8,050; கண்காணிக்க வேண்டிய ஓட்டுச்சாவடிகளாக 181 கண்டறியப்பட்டுள்ளன. இவற்றுக்கு கூடுதல் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்படும்.வாக்காளர்களுக்கு, 'பூத் சிலிப்' வழங்கும் பணி துவக்கப்பட்டுள்ளது. நேற்று முன்தினம், 13.08 லட்சம் பேருக்கு பூத் சிலிப் வழங்கப்பட்டுள்ளது. மற்றவர்களுக்கு வரும் 13ம் தேதிக்குள் வழங்கப்படும்.இவ்வாறு சத்யபிரதா சாஹுஅவர் கூறினார். .

தமிழகம் மந்தம்

நாடு முழுதும் தேர்தல் நடத்தை விதிமீறல்கள் குறித்து, பொதுமக்கள் புகார் அளிப்பதற்காக, 'சி விஜில்' மொபைல் ஆப், தேர்தல் கமிஷனால் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இதன் வழியே புகார் அளிப்பது, தமிழகத்தில் மந்தமாகவே உள்ளது.நேற்று முன்தினம் வரை அதிகபட்சமாக, கேரளாவில் 71,168 புகார்கள் வந்துள்ளன. இவற்றில், 70,929 புகார்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இன்னும், 239 புகார்கள் நிலுவையில் உள்ளன.அதற்கு அடுத்தபடியாக, உத்தரகண்ட் மாநிலத்தில், 14,684; கர்நாடகாவில் 13,959; ஆந்திராவில் 7,055 புகார் மனுக்கள் பெறப்பட்டுள்ளன. தமிழகத்தில், 2,168 புகார்கள் பெறப்பட்டதில், 2,139 மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இன்னும், 29 புகார்கள் நிலுவையில் உள்ளன.தமிழகத்தை பொறுத்தவரை, கரூர் மாவட்டத்தில் அதிகபட்சமாக 408 புகார்கள், அதற்கடுத்து சென்னையில் 239 புகார்கள் பெறப்பட்டுள்ளன.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 55 )

பாரத இந்துத் தமிழன்
ஏப் 08, 2024 19:22

என்ன பாயும்? கார்ப்பரேசன் எலெக்சன் சந்தி சிரிச்சுச்சு அதற்கு முன்னாடி மாநிலத்தேர்தல் நாறிப்போச்சு தேர்தல் கமிசன் மாநில நிர்வாகத்தோடு கைகோர்க்காமல், தனித்தியங்கும் முழு நேர இலாகாவாக, ஜனாதிபதியின் நேரடிக்கவனிப்பில் இருக்கவேண்டும்அந்தந்த மாநில ஆளுநர் முழு அதிகாரம் பெற வேண்டும் ஆட்டுக்குத் தாடி அவசியம் என்று அரைவேக்காடு கட்சிகள் உணர வேண்டும் இராணுவம், சென்ட்ரல் போலிஸ், மத்திய அரசு அலுவலகங்கள், தனியார் தொண்டு நிறுவனங்கள் மூலமாகவே எலக்சன் நடத்தவேண்டும் மாநில கைக்கூலி அரசு ஊழியர்களும், சந்தர்ப்பவாத நல்லாசிரியர்களையும் நம்பிப்பிரயோசனமில்லை தேர்தல் அதுவரை கேலிக்கூத்து தான் வாக்குக்கு பணம் பட்டுவாடா நடந்தது என்று தெரிந்தால் அந்த தொகுதியில் தேர்தல் நிறுத்தி வைக்கவேண்டும் வேட்பாளர் தேர்தலில் நிற்கும் தகுதியை நிரந்தரமாக நீக்கம் செய்யவேண்டும் வாக்காளரின் வாக்குரிமையை பத்து ஆண்டுகளுக்கு நிறுத்தி வைக்க வேண்டும் வாக்காளர் அடையாள அட்டை விவரத்தோடு செல்போன் இனைக்கும் வேலையை உதவாக்கரை மாநில அரசை நம்பாமல், தேர்தல் ஆனையமே செய்யவேண்டும் தேர்தல் நேரத்தில் மட்டும் பணிபுரியாமல், ஆண்டு முழுவதும் செயல்படும் தனி இலாகாவாக தேர்தல் ஆணையம் இருக்கவேண்டும் குழப்பும் கட்சிகளும், அதனை நம்பும் வாக்காளர்களும் இருக்கும் வரை, தேர்தல் ஆணையத்திற்கு பணிச்சுமை அதிகம் தான்


M S RAGHUNATHAN
ஏப் 08, 2024 16:27

கொடுப்பவர்கள் மீதா அல்லது வாங்குபவர்கள் மீதா ? சென்ற சட்ட மன்ற தேர்தலில் ஒரு திமுக பிரமுகர் ஒரு காவல் நிலையத்திலேயே பணப் பெட்டி கொடுத்து பிரித்துக் கொள்ள சொன்னார் அவர் மீது என்ன நடவடிக்கை எடுக்கப் பட்டது அய்யா?


K.n. Dhasarathan
ஏப் 08, 2024 11:16

சாஹு ஐயா நடவடிக்கை எடுங்கள், தேர்தலில் இருந்து பேசிக்கொண்டுதான் இருக்கிறீர்கள், ஒரு நடவடிக்கையும் காணோம் , எத்தனையோ வீடியோ ஆதாரம் கொடுத்த்தும் ஒன்றும் நடக்கவில்லை


vijay
ஏப் 08, 2024 10:12

ஆபிசர் ஆபிசர், அப்போ பணம் கொடுப்பவர்கள் நல்லவர்களா? ஆபிசர் நீங்கள் ரொம்ப வருஷமா தலைமையில் இருக்கீங்க இதுவரைக்கும் எத்தனையோ தேர்தலில் காசு கொடுத்து வோட்டு வாங்கி வச்சிருக்காங்க கடந்த இடைத்தேர்தலில் மக்களை ஆடுகளை போல " பட்டியில்" அடைத்து வைத்து காசும் கொடுத்து ஜெயிச்சது தீயமுக ஆபிசர், நீங்க என்ன நடவடிக்கை எடுத்தீங்க ஆபிசர்


Sathishkumar.N
ஏப் 08, 2024 09:33

பணம் கொடுப்பவர்களை விட்டுடுவீங்களா ஆபிசர்? நாலு கோடி நாகேந்திரன் கேசு என்னாச்சு?


vns
ஏப் 08, 2024 05:51

This man is an useless election officer Just follows MK Stalins orders


Sri
ஏப் 07, 2024 01:06

ஐயா சாவு ஊர்வலம் முலமாகவும் பணம் விநியோகம் தமிழகத்தில் நடக்கிறது


nv
ஏப் 06, 2024 00:27

வெறும் வெட்டி பேச்சு.. இந்த விஷயத்தில் தேர்தல் ஆணையம் படு தோல்வி அடைந்துள்ளது..


panneer selvam
ஏப் 05, 2024 23:41

Sahu ji , Great , your impressed dialogue is really great So please details on daily basis how many people are arrested while taking bribes from the conants We assure you that you will not catch anyone and no one will come forward while accepting the for vote


ديفيد رافائيل
ஏப் 05, 2024 20:19

பணம் கொடுக்குறதே DMK தான்


மேலும் செய்திகள்











அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை