மேலும் செய்திகள்
பழமையான தவ்வை சிற்பம்; கோட்டக்குப்பம் அருகே கண்டுபிடிப்பு
15 hour(s) ago
தினமலர் வித்யாரம்பம்; விருத்தாசலத்தில் கோலாகலம்
15 hour(s) ago
புதுடில்லி: மாணவர்களின் புரிந்து கொள்ளும் திறன், சரியான பதிலை தேடும் முயற்சி, சரியான நேரத்துக்குள் தேர்வு எழுதுவதை ஊக்குவிக்கும் வகையில், புத்தகத்தை பார்த்து தேர்வு எழுதும் முறையை மீண்டும் அறிமுகம் செய்ய, சி.பி.எஸ்.இ., எனப்படும் மத்திய இடைநிலை கல்வி வாரியம் திட்டமிட்டுள்ளது.புத்தகத்தை பார்த்து தேர்வு எழுதும் நடைமுறையை, சி.பி.எஸ்.இ., 2014 -- 2015 கல்வியாண்டில் இருந்து மூன்று ஆண்டுகளுக்கு பரிசோதனை செய்து பார்த்தது. ஆனால், இதில் சில குறைபாடுகள் இருப்பதாக, மாணவர்கள், பெற்றோர், ஆசிரியர்கள் உள்ளிட்டோர் தெரிவித்தனர். இதையடுத்து இந்த திட்டம் நிறுத்தப்பட்டது. ஆலோசனை
இந்த அனுபவத்தின் அடிப்படையில், இந்த முறையில் சில மாற்றங்கள் செய்து, புத்தகத்தை பார்த்து தேர்வு எழுதும் முறையை மீண்டும் அறிமுகம் செய்வது குறித்து, சி.பி.எஸ்.இ., ஆலோசனை நடத்தி வருகிறது.இதற்கான வழிமுறைகள், பாடதிட்டங்கள் உள்ளிட்டவை, வரும் ஜூன் மாதத்துக்குள் இறுதி செய்து, இந்தாண்டு இறுதியில் சோதனை முறையில், சில குறிப்பிட்ட பள்ளிகளில் மட்டும் செயல்படுத்தி பரிசோதிக்க திட்டமிடப்பட்டுள்ளது.இந்த திட்டத்தின்படி, 9 -- 12ம் வகுப்பு வரையில், மாணவர்களுக்கு நடத்தப்படும் பருவநிலை தேர்வுகளில், குறிப்பிட்ட சில பாடங்களுக்கு மட்டும் இது செயல்படுத்தப்படும். அதே நேரத்தில், 10 மற்றும் பிளஸ் 2 வகுப்புகளுக்கான பொதுத் தேர்வில் இது செயல்படுத்தப்படாது. சரியான விடை
மாணவர்கள் எந்தளவுக்கு பாடத்தை புரிந்து கொள்கின்றனர்; குறிப்பிட்ட நேரத்துக்குள் தேர்வுகளை எழுத முடிகிறதா; சரியான விடையை தேடும் முயற்சியில் ஈடுபடுகின்றனரா என்பதை கணிப்பதற்காக, இந்த முறையை பரிசோதிக்க திட்டமிடப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.தேசிய பாடத்திட்ட வடிவமைப்பு குழு அளித்த பரிந்துரையின் அடிப்படையில் இந்த முடிவு எடுக்கப்பட்டதாக தகவல் வெளியாகி உள்ளது. சி.பி.எஸ்.இ.,யின் செயற்குழு கூட்டம் சமீபத்தில் நடந்தது. அதில், இந்த திட்டத்தை செயல்படுத்துவது குறித்து விவாதிக்கப்பட்டது. முதலில், ஆசிரியர்களுக்கு இந்த முறையில் தேர்வு நடத்தப்பட்டு, அவர்களுடைய கருத்துகள், ஆலோசனைகளின்படி, திட்டத்தை மேம்படுத்தவும் முடிவு செய்யப்பட்டுள்ளது.
15 hour(s) ago
15 hour(s) ago