உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி அலுவலகம் சூறையாடல்: இ.பி.எஸ்., கண்டனம்

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி அலுவலகம் சூறையாடல்: இ.பி.எஸ்., கண்டனம்

திருநெல்வேலி: ஜாதி மறுப்பு திருமணம் நடத்தியதற்காக திருநெல்வேலி மாவட்ட மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி அலுவலகம் சூறையாடப்பட்டுள்ள சம்பவத்திற்கு, அதிமுக பொதுச்செயலாளர் இ.பி.எஸ்., கண்டனம் தெரிவித்துள்ளார்.இது குறித்து இ.பி.எஸ்., வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: தேசிய கட்சி அங்கீகாரம் பெற்ற ஒரு கட்சியின் அலுவலகம் தாக்கப்படுவது என்பதே இந்த திமுக ஆட்சியில் சீர்கெட்ட சட்டம் ஒழுங்கிற்கு அத்தாட்சி. சுயமரியாதை இயக்கம் தழைத்தோங்கிய தமிழகத்தில், இன்றளவும் ஜாதிய தீண்டாமையால் இதுபோன்ற சம்பவங்கள் நிகழ்வது வேதனைக்குரியது. திருநெல்வேலி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் அலுவலகத்தைத் தாக்கியவர்கள் மீது உரிய சட்ட நடவடிக்கை எடுக்குமாறு திமுக அரசின் முதல்வரை வலியுறுத்துகிறேன்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 4 )

Anand
ஜூன் 15, 2024 19:04

பெற்றவர்களின் இந்த மாதிரியான நிலைமை இவருக்கு ஏற்படவில்லை என்கிற மமதையில் பேசுகிறார், இவர் மட்டுமல்ல இவரை போன்ற அரசியல் வாதிகள் நிறைய பேர் அப்படிதான் இருக்கிறார்கள், ஊரான் வீட்டு வேதனை இவர்களுக்கு அரசியல் ஆதாயம்.


mathan
ஜூன் 15, 2024 17:54

EPS நாடக காதல் கும்பலுக்கு ஆதரவா ?


ஆரூர் ரங்
ஜூன் 15, 2024 15:39

கேரளாவில் சொந்தக் கட்சி ஆட்களையே கதை முடித்தவர்கள்.


Balasubramanyan
ஜூன் 15, 2024 11:05

will be given by worth less politicians in subha Murtha.


மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை