உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / புதுப்பிக்கத்தக்க மின்சாரம் உற்பத்தி திறனில் தமிழகத்தை பின்னுக்கு தள்ளியது மஹாராஷ்டிரா 

புதுப்பிக்கத்தக்க மின்சாரம் உற்பத்தி திறனில் தமிழகத்தை பின்னுக்கு தள்ளியது மஹாராஷ்டிரா 

சென்னை:நாட்டில் காற்றாலை, சூரியசக்தியை உள்ளடக்கிய புதுப்பிக்கத்தக்க மின் நிலையங்களின் உற்பத்தி திறனில், இந்தாண்டு ஜனவரி நிலவரப்படி, 24,333 மெகாவாட் உடன் மூன்றாவது இடத்தில் இருந்த தமிழகத்தை, தற்போது, மஹாராஷ்டிரா மாநிலம் பின்னுக்கு தள்ளியுள்ளது. நீர், சூரியசக்தி, காற்றாலை மற்றும் பயோ மின்சாரம் போன்றவை சுற்றுச்சூழலை பாதிப்பதில்லை. இதனால், இந்த வகை மின்சாரத்தை அதிகம் பயன்படுத்த, மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது. அந்த மின் நிலையங்களை தனியார் நிறுவனங்களும், மாநில மின் வாரியங்களும் அமைத்து வருகின்றன. மாநிலம் வாரியாக சூரியசக்தி, காற்றாலை மின் உற்பத்தி திறன் விபரங்களை, மத்திய அரசின் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி துறை அமைச்சகம் வெளியிட்டு வருகிறது. விரைவான அனுமதி இந்தாண்டு ஜன., 31ம் தேதி நிலவரப்படி, ஒட்டுமொத்த புதுப்பிக்கத்தக்க மின் உற்பத்தி திறனில் ராஜஸ்தான் முதலிடத்திலும், குஜராத் இரண்டாவது இடத்திலும், தமிழகம் மூன்றாவது இடத்திலும், கர்நாடகா நான்காவது, மஹாராஷ்டிரா ஐந்தாவது இடத்திலும் இருந்தன. கடந்த செப்டம்பர் நிலவரப்படி, மின் நிறுவு திறன் பட்டியல் தற்போது வெளியாகி உள்ளது. இதில், முதலிடத்தில் ராஜஸ்தான், இரண்டாவது இடத்தில் குஜராத் தொடரும் நிலையில், மூன்றாவது இடத்தில் இருந்த தமிழகத்தை பின்னுக்குத் தள்ளி, அந்த இடத்திற்கு மஹாராஷ்டிரா முன்னேறியுள்ளது. இதுகுறித்து, புதுப்பிக்கத்தக்க மின் திட்ட முதலீட்டாளர்கள் கூறியதாவது: நாட்டில், காற்றாலை, சூரியசக்தி மின் நிலையங்களை அமைக்க, தமிழகத்தில் சாதகமான வானிலை நிலவுகிறது. இந்த மின் நிலையங்களை அமைக்க குஜராத், ராஜஸ்தான் மாநில அரசுகள் குறைந்த விலையில் நிலம் வழங்குவதுடன், விரைவாக அனைத்து அனுமதிகளையும் வழங்குகின்றன. 'கூடுதல்' செலவு தமிழகத்தில் மின் திட்டங்களுக்கு அனுமதி கிடைப்பதில் தாமதம் செய்யப்படுகிறது. மின் திட்டத்திற்கான செலவுடன், 'கூடுதல்' செலவுகளையும் செய்ய வேண்டியுள்ளது. இதனால், தமிழகத்தில் சூரியசக்தி, காற்றாலை மின் நிலையங்களை அமைக்காமல், முதலீட்டாளர்கள் மற்ற மாநிலங்களில் முதலீடு செய்கின்றனர். இவ்வாறு அவர்கள் கூறினர். முதல் 5 மாநிலங்கள் ----------------------------------- 2025 ஜன., நிலவரப்படி/ மெகா வாட் ----------------------------------- மாநிலம் - நீர் - காற்றாலை - பயோ மின்சாரம் - சூரியசக்தி - மொத்தம் ------------------------------------------------------------------- ராஜஸ்தான் - 435 - 5,196 - 171 - 27,347 - 33,149 குஜராத் - 2,097 - 12,510 - 116 - 17,580 - 32,303 தமிழகம் - 2,301 - 11,444 - 1,045 - 9,541 - 24,333 கர்நாடகா - 4,973 - 6,851 - 1,909 - 9,282 - 23,017 மஹாராஷ்டிரா - 3,431 - 5,226 - 2,988 - 9,337 - 20,982 ---------------------------------- 2025 செப்., நிலவரப்படி/ மெகா வாட் ---------------------------------- மாநிலம் - நீர் - காற்றாலை - பயோ மின்சாரம் - சூரியசக்தி - மொத்தம் ------------------------------------------------------------------- ராஜஸ்தான் - 435 - 5,208 - 207 - 34,556 - 40,406 குஜராத் - 2,103 - 14,374 - 129 - 23,413 - 40,019 மஹாராஷ்டிரா - 3,431 - 5,553 - 3,000 - 15,690 - 27,674 தமிழகம் - 2,301 - 11,885 - 1,047 - 11,355 - 26,588 கர்நாடகா - 4,974- 8,051 - 1,916 - 10,558 - 25,499 * தமிழகத்தில் மொத்த சூரியசக்தி மின் உற்பத்தி நிறுவு திறனில், அதிக திறனில் அமைக்கப்பட்டுள்ள மின் நிலையங்களின் மின் நிறுவு திறன், 10,120 மெகா வாட்; மேற்கூரை சூரியசக்தி நிறுவு திறன், 1,163 மெகா வாட்; விவசாய நிலங்களில் அமைக்கப்பட்டுள்ள ஆலைகளின் நிறுவு திறன், 72 மெகா வாட். இவை அனைத்துமே தனியாரால் அமைக்கப்பட்டுள்ளன.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 6 )

R. THIAGARAJAN
அக் 13, 2025 07:33

Its பெட்டெர் TAMIL GOVERNMENT OFFICIALS ARE EXTENDING THEIR COOP HONESTLY AND LOYALTY MUST BE ADHERING THEIR CODE OF CONDUCTS. NO ROOM FOR OTHER MEANS OF SERVICES. EVERYBODY MUST THINK ABOUT THE RENEWABLE ENERGY ARE ARE CREATES MORE AND MORE EMPLOYMENT ADDING WITH STATE OF ART TECHNOLOGY FOR THE FORTHCOMING GENERATIONS AND OUR NATIONAL GROWTH. IT MUST BE SUSTAINING FOREVER.


R. THIAGARAJAN
அக் 13, 2025 07:33

Its பெட்டெர் TAMIL GOVERNMENT OFFICIALS ARE EXTENDING THEIR COOP HONESTLY AND LOYALTY MUST BE ADHERING THEIR CODE OF CONDUCTS. NO ROOM FOR OTHER MEANS OF SERVICES. EVERYBODY MUST THINK ABOUT THE RENEWABLE ENERGY ARE ARE CREATES MORE AND MORE EMPLOYMENT ADDING WITH STATE OF ART TECHNOLOGY FOR THE FORTHCOMING GENERATIONS AND OUR NATIONAL GROWTH. IT MUST BE SUSTAINING FOREVER.


மணிமுருகன்
அக் 12, 2025 00:14

கூடுதல்செலவு என்பதை விட கொடுக்கும் பணத்திலேயே ஊழல் நடக்கிறது என்பதே உண்மை திறன்வாய்ந்த இயந்திரங்கள் அமைக்கபடவில்லை என்பதே உண்மை காற்றாலைக்கு அமைக்கப்பட்டிள்ள உபகரணங்கள் திறன் உள்ளதா இல்லை ஒப்புக்கு வைக்கப்பட்டுள்ளதா என்று சந்தேகம் எழுகிறது


Sridhar Venkadesan
அக் 11, 2025 14:54

Respected sir please allow the windmills in coastal area and here Fisher welfare is Required please give the permission to make easy for solar and windmills. If any wrong word please forgive me


raja
அக் 11, 2025 06:29

என்ன திராவிட மாடல் அரசு நடத்தும் தனக்குத்தானே நம்பர் ஒன்னு முதல்வர் என்று கூறிகொள்ளும் முதல்வர் முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் அவேற்களே எடப்பாடியார் இருக்கும் வரை நம்பர் ஒன்னு மாநிலமாக அனைத்திலும் இருந்த தமிழகம் இப்போ 1950 ஆண்டு நிலை கொக்கி சென்று கொண்டு இருக்கிறது.. வீடியோ ஷூட்டிங் ஸ்டிக்கர் ஓட்டுவது போன்றவற்றை நிறுத்தி விட்டு இதில் கொஞ்சம் கவனம் செலுத்துங்கள் என்று மக்கள் கேட்கிறார்கள்....


Vasan
அக் 11, 2025 04:17

"கூடுதல்" செலவு என்றால் என்ன ? அது எவ்வளவு ? அதற்கு மின்சார ஒழுங்கு முறை ஆணையம் விலை பட்டியல் வெளியிட்டுள்ளதா ?


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை