மேலும் செய்திகள்
நமது இளைஞர் சக்தி வலிமையானது: பிரதமர் மோடி பெருமிதம்
8 hour(s) ago | 1
விழுப்புரம்: தெற்கு ரயில்வே திருச்சி கோட்ட அலுவலக செய்திக்குறிப்பு:தெற்கு மத்திய ரயில்வே கோட்டத்துக்குட்பட்ட திருப்பதி ரயில் நிலையத்தில் பொறியியல் மேம்பாட்டு பணி நடக்கிறது. இதையொட்டி விழுப்புரம் - திருப்பதி வரை செல்லும் முன்பதிவில்லா விரைவு ரயில் பகுதியளவில் ரத்து செய்யப்பட்டுள்ளது.விழுப்புரத்தில் காலை 5:35 மணிக்கு புறப்படும் விழுப்புரம் - திருப்பதி முன்பதிவில்லா விரைவு ரயில் (16854) இன்று 19ம் தேதி முதல் வரும் 23ம் தேதி வரை காட்பாடியோடு நிறுத்தப்படுகிறது.எதிர் வழித்தடத்தில் திருப்பதியில் இருந்து மதியம் 1:40 மணிக்கு புறப்படும் திருப்பதி - விழுப்புரம் முன்பதிவில்லா விரைவு ரயில் (16853) இன்று 19ம் தேதி முதல் வரும் 23ம் தேதி வரை காட்பாடியில் இருந்து மாலை 4:30 மணிக்கு விழுப்புரத்திற்கு புறப்படும்.இவ்வாறு செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.
8 hour(s) ago | 1