உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் /  பயிர் கடன் வழங்க ரூ.10,000 கோடி; நபார்டு வங்கியிடம் அமைச்சர் கோரிக்கை

 பயிர் கடன் வழங்க ரூ.10,000 கோடி; நபார்டு வங்கியிடம் அமைச்சர் கோரிக்கை

சென்னை: ''தமிழக விவசாயிகளுக்கு, கூட்டுறவு வங்கிகளில் இந்தாண்டில், 20,000 கோடி ரூபாய் பயிர்க்கடன் வழங்க, அரசு இலக்கு நிர்ணயம் செய்துள்ளது. குறுகிய கால பயிர்க் கடனுக்கான நிதியாக, 'நபார்டு' வங்கி, 3,730 கோடி ரூபாய் வழங்கியுள்ளது. ''இதை, 10,000 கோடி ரூபாயாக உயர்த்தி வழங்க வேண்டும்,'' என, கூட்டுறவு துறை அமைச்சர் பெரியகருப்பன் தெரிவித்தார். தேசிய வேளாண் மற்றும் ஊரக வளர்ச்சி வங்கியான நபார்டு சார்பில் கூட்டுறவு மாநாடு, சென்னையில் நேற்று நடந்தது. இதில், நபார்டு வங்கியின் தமிழக மண்டல அலுவலக முதன்மை பொது மேலாளர் ஆனந்த், தமிழக கூட்டுறவு துறை செயலர் சத்யபிரதா சாஹு, கூட்டுறவு சங்கங்களின் பதிவாளர் நந்தகுமார் உள்ளிட்டோர் பங்கேற்றனர். அமைச்சர் பெரிய கருப்பன் பேசியதாவது: தமிழகத்தில் இந்தாண்டில் பயிர்க்கடன் இலக்காக, 20,000 கோடி ரூபாயை அரசு நிர்ணயம் செய்துள்ளது. குறுகிய கால பயிர்க் கடனுக்கான நிதியாக நபார்டு வங்கி, 18.65 சதவீதம் அதாவது, 3,730 கோடி ரூபாயை வழங்கியுள்ளது. இதை, 50 சதவீத அளவிற்கு அதாவது, 10,000 கோடி ரூபாயாக உயர்த்தி வழங்கினால், மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கிகள், தொடக்க வேளாண் கூட்டுறவு கடன் சங்கங்கள் பயன்பெறும். இவ்வாறு அவர் பேசினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை