உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / வந்ததை விட தந்ததே அதிகம்:தமிழகத்திற்கு மத்திய அரசு செய்த உதவிகள் பட்டியல் போடுகிறார்- நிர்மலா சீதாராமன்

வந்ததை விட தந்ததே அதிகம்:தமிழகத்திற்கு மத்திய அரசு செய்த உதவிகள் பட்டியல் போடுகிறார்- நிர்மலா சீதாராமன்

சென்னை:தமிழகத்தில் இருந்து பெற்றதை விட, அதிக நிதி தமிழகத்திற்கு கொடுக்கப்பட்டு உள்ளதாக, மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன், புள்ளி விபரங்களுடன் தெரிவித்தார்.மத்திய பா.ஜ., அரசின் சாதனைகளை மக்களிடம் கொண்டு செல்லும், 'வளர்ந்த இந்தியாவுக்கான சங்கல்ப யாத்திரை' என்ற பிரசார பயணம் நாடெங்கும் நடந்து வருகிறது. அதன் ஒரு பகுதியாக, தென் சென்னை லோக்சபா தொகுதிக்கு உட்பட்ட ரங்கராஜபுரத்தில் நேற்று நடந்த சங்கல்ப யாத்திரை நிகழ்ச்சியில், மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் பங்கேற்றார்.மத்திய அரசின் முத்ரா கடன் உதவி, தெருவோர வியாபாரிகளுக்கான கடன் உதவி உள்ளிட்ட, 17 திட்டங்களில் பயனடைந்தவர்கள், தங்கள் அனுபவங்களை பகிர்ந்து கொண்டனர். இந்த திட்டங்களின் கீழ் விண்ணப்பித்திருந்த பயனாளிகள் சிலருக்கு, நிர்மலா சீதாராமன், கடனுக்கான காசோலைகள் வழங்கினார். '2047ல் இந்தியாவை வளர்ந்த நாடாக்குவோம்' என, அனைவரும் உறுதிமொழி எடுத்துக் கொண்டனர்.பின், நிர்மலா பேசியதாவது:சுதந்திர நுாற்றாண்டான 2047ல், இந்தியாவை வளர்ந்த நாடாக மாற்ற வேண்டும் என்ற இலக்குடன், பல்வேறு திட்டங்களை பிரதமர் மோடி செயல்படுத்தி வருகிறார். மோடி அரசின் திட்டங்களால், தமிழகம் பெரும் பயனடைந்துள்ளது. தமிழகத்தில் மட்டும், 37 லட்சம் குடும்பங்களுக்கு இலவச சமையல் எரிவாயு இணைப்பு11.40 லட்சம் வீடுகள்62.40 லட்சம் கழிப்பறைகள்93 லட்சம் வீடுகளுக்கு குடிநீர் குழாய் இணைப்பு1.50 கோடி வங்கிக் கணக்குகள்1.80 கோடி பேருக்கு விபத்து காப்பீடு3.10 லட்சம் சாலையோர வியாபாரிகளுக்குஉத்தரவாதம் இல்லா கடன்கள் வழங்கப்பட்டு உள்ளன. ஆனாலும் அரசியல் காரணங்களுக்காக, தமிழகத்திற்கு மத்திய அரசு எதுவும் செய்யவில்லை என குற்றம் சாட்டுகின்றனர். ஆனால், நாடு முழுக்க ஓடும், 'வந்தே பாரத்' ரயில் பெட்டிகள், சென்னை பெரம்பூர் ஐ.சி.எப்.,பில் தான் தயாரிக்கப்படுகின்றன. தமிழகத்திற்கு மட்டும் நான்கு 'வந்தே பாரத்' ரயில்கள்கடந்த ஒன்பது ஆண்டுகளில் சென்னையில், 170 கி.மீ., மெட்ரோ ரயில் பாதை50,000 கோடி ரூபாயில் சென்னை -- பெங்களூரு விரைவுச் சாலைபாதுகாப்பு தொழில் வழித்தடம் என, தமிழகத்தில் பல்வேறு திட்டங்களை மோடி அரசு செயல்படுத்தி வருகிறது.தமிழகத்திலிருந்து நேரடி வரி வருவாயாக, கடந்த ஒன்பது ஆண்டுகளில், 6.24 லட்சம் கோடி ரூபாய் மத்திய அரசுக்கு கிடைத்துள்ளது. ஆனால், இதே காலகட்டத்தில் தமிழகத்திற்கு 6.97 லட்சம் கோடி ரூபாயை, மத்திய அரசு வழங்கியுள்ளது.கடந்த 1996ல் இருந்து மாநிலங்களுக்கு வழங்கப்படாமல் இருந்த, 81,645 கோடி ரூபாயை, மோடி அரசு வழங்கியது. இதில் தமிழகத்திற்கு, 3,225 கோடி ரூபாய் வழங்கப்பட்டது. கடந்த ஒன்பது ஆண்டு களில், தமிழகத்திற்கு கிடைத்த 57,557 கோடி, 'செஸ்' வரி முழுதும் தமிழகத்தில் நெடுஞ்சாலைகள், பள்ளிகள், பிரதமரின் வீட்டுவசதி திட்டத்தில், வீடுகள் கட்டவும் செலவிடப்பட்டது.தமிழகத்திலிருந்து கிடைத்த மத்திய ஜி.எஸ்.டி., 27,360 கோடி ரூபாயில், 41 சதவீதம் தமிழகத்திற்கே கொடுக்கப்பட்டுள்ளது. மாநிலங்களுக்கு வழங்க வேண்டிய நிதி, குறிப்பிட்ட தேதியில் தாமதம் இன்றி வழங்கப்படுகிறது.இவ்வாறு அவர் பேசினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 9 )

K.n. Dhasarathan
ஜன 05, 2024 21:51

அம்மா நிதி அமைச்சரே ஒரே கேள்வி, நான் புள்ளி விபரம் உள்ளே எல்லாம் போகலங்க, நீங்க தமிழகம் கொடுத்ததை காட்டிலும் அதிக மாக கொடுத்ததாக சொன்னீர்கள், பொய் ஜே பி ஆளும் மாநிலங்களுக்கும் அதிகமான நிதி தருவதாக எதிர்க்கட்சிகள் சொல்கிறார்கள், அப்போ இவ்வளவு பணம் எங்கிருந்து வந்தது ?மக்கள் வரி யில் இருந்துதானே கொடுத்தீர்கள், அல்லது வெளிநாட்டில் கடன் வாங்கி கொடுத்தீர்களா?அல்லது புண்ணியவான்கள் யாரும் இந்தியா கஷ்டப்படுது என்று இநாம் கொடுத்தார்களா? யாருடைய சொந்த பணமும் அல்ல, இல்லையா ? பிறகு ஏனம்மா இவ்வளவு கஷ்டப்படுகிறீர்கள், மக்கள் வெள்ளத்தில் மழையில் கஷ்டப்படுகிறார்கள், நீருக்கடியில் நீச்சல் பயிற்சி எடுக்கவில்லை. அவர்கள் சாபம் சும்மா விடாது.


Palanivelu Kandasamy
ஜன 05, 2024 17:39

கணக்கு இருக்கட்டும். இங்கேயிருந்து எடுத்த பணத்தை திரும்ப கொடுத்துவிட்டு, எல்லாமே நீங்கள் செய்தது என்று சொல்லவில்லையா? ரோடு போட்டுவிட்டு அது எங்களுடையது என்று சொல்லி அதற்கும் டோல் வாங்கினால் அது என்ன கணக்கு? வங்கிக் கணக்குகள் - அது என்ன கணக்கு, புதிய கணக்கு திறக்க பணம் கொடுத்தீர்களா? இலவச எரிவாயு இணைப்பு கொடுப்பதில் என்ன செலவு - வருமானம் தானே வரப்போகிறது. 6.97 லட்சம் கொடுத்ததற்கு இப்படியா ஒரு நிதி அமைச்சர் கணக்கு கொடுப்பது? இலவச இணைப்பு, கழிப்பறை கட்டுதல், ரோடு போடுதல் - இதற்கான செலவுத் தொகை என்ன? வாய் ஜாலம் மட்டும் தான். தமிழகம் கேட்டதென்னவோ பேரிடர் நிதியிலுருந்து தான், அதற்கு தேவையில்லாமல் மற்ற செலவு கணக்கு சொல்வது - யாருக்கு வேண்டும் இது


Sridhar
ஜன 05, 2024 13:58

இதுல ஒரு பூதம் இந்தம்மா கணக்கு தவறுன்னு சொல்லுது. அத மொதல்ல விளக்குங்க. இல்லேன்னா தவறு தவறுன்னு ஒரேடியா மக்கள் மனத்துல அப்பிருவாங்க. அப்புறம் என்ன விளக்கம் கூறினாலும் எடுபடாது.


Arjun
ஜன 05, 2024 13:30

அம்மா, பெரம்பூர் ICF நீங்கள் பிறக்கறதுக்கு முன்னாலிருந்து இருக்கிறது. வந்தே பாரத், வரி வருமானம், இலவச வீடு, காஸ் இதை மற்ற மாநிலங்களுடனான ஒப்பீட்டுடன் சொல்ல முடியுமா? உங்க பூ இங்க விலை போகாதும்மா


Narayanan
ஜன 05, 2024 16:07

அற்புதமா வேக ஆரம்பித்துவிட்டது


Sivagiri
ஜன 05, 2024 12:36

கொடுத்த பணமெல்லாம் மக்களுக்கு போயி சேர்ந்துச்சான்னு கேக்க மாட்டேங்களா ? .. . திருட்டு திராவிட மாடலிடம் புள்ளி விவரமெல்லாம் சொல்ல கூடாது - புள்ளி விவரத்தை கேட்க வேண்டும் - - நீ வாங்கிய பணத்தை என்னென்ன செய்தாய் - ஒரு வெள்ளை அறிக்கை கொடு , என்று கேட்க துப்பில்லையா ? . .


kijan
ஜன 05, 2024 05:41

பட்டுக்கோட்டைக்கு வழி கேட்டால் கொட்டை பாக்கின் விலை சொல்லுகிறார் .... தமிழக நிதிஅமைச்சர் ....கேட்டது ....வருடா வருடம் தானே வரும் ...மாநில பேரிடர் நிதி மட்டும் தந்திருக்கிறீர்கள் .... தேசிய பேரிடர் நிதியிலிருந்து .... எதிர்பாரா மழைக்கு நிதி ஒதுக்குங்கள் என்ற வேண்டுகோளுக்கு இதுவரை பதிலில்லை .... ஜி கவனித்துக்கொண்டு இருக்கிறார் ....ரொம்ப நாய்சியாக பணி புரிந்தீர்கள் என்றால்.....அடுத்த கிரண் ரிஜ்ஜு தான் ....


sankar
ஜன 05, 2024 20:24

சரி தம்பி - வருடாவருடம் வரும் நிதி யாருடைய பாக்கெட்டில் விழுகிறது?


Senthoora
ஜன 05, 2024 05:39

இருக்கலாம், ஆனால் கேட்க்காமலே குஜராத் மாநிலத்துக்கு கொடுத்தது, அதைவிட பலமடங்கு அதிகம்,


மேலும் செய்திகள்









சமீபத்திய செய்தி