உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / கமிஷனர் அலுவலகத்தில் மாதர் சங்கத்தினர் புகார்

கமிஷனர் அலுவலகத்தில் மாதர் சங்கத்தினர் புகார்

திருப்பூரில் வரதட்சணை கொடுமையால் தற்கொலை செய்து கொண்ட ரிதன்யா என்ற பெண் குறித்து, சீமான் சமீபத்தில், கருத்து தெரிவித்தார். அப்போது, 'இந்த தற்கொலைக்கு, எந்த பெண்கள் அமைப்பும், மாதர் சங்கத்தினரும் கண்டனம் தெரிவிக்கவில்லை. இப்பிரச்னைக்கு குரல் கொடுக்காமல் எங்கே போய் படுத்து கிடக்கிறார்கள்; கஞ்சா, கோகைன் சாப்பிட்டு விட்டு கிடக்கிறார்களா அல்லது டாஸ்மாக் கடையில் மது குடித்துவிட்டு கிடக்கிறார்களா?' என கேள்வி எழுப்பி இருந்தார். இந்நிலையில், நேற்று சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்துக்கு மாதர் சங்கத்தை சேர்ந்தோரும், பெண்கள் அமைப்புகளை சேர்ந்தோரும் வந்து, தங்களை இழிவுபடுத்தி விட்டதாக கூறி, சீமான் மீது புகார் அளித்தனர்.பின், சீமானின் புகைப்படத்தை கிழித்து கீழே போட்டனர். அதை செருப்பு காலால் மிதித்து தங்கள் ஆத்திரத்தை வெளிப்படுத்தினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 2 )

kamal 00
ஜூலை 17, 2025 06:57

உண்மை தான்.... இவர்களும் இப்போ கொத்தடிமை ஆகிட்டாங்க


Mani . V
ஜூலை 17, 2025 05:04

அடேங்கப்பா இந்த மாதர் சங்கத்தினரும் கோபாலபுரம் கொத்தடிமைகளோ என்னும் அளவுக்கு செயல்படுவது வேடிக்கையாக இருக்கிறது.


சமீபத்திய செய்தி