உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / முதலீட்டாளர்கள் மாநாட்டில் கையெழுத்தான புரிந்துணர்வு ஒப்பந்தங்கள்: எந்த நிறுவனங்கள் எவ்வளவு முதலீடு ஓர் பார்வை!

முதலீட்டாளர்கள் மாநாட்டில் கையெழுத்தான புரிந்துணர்வு ஒப்பந்தங்கள்: எந்த நிறுவனங்கள் எவ்வளவு முதலீடு ஓர் பார்வை!

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சென்னை:இன்று சென்னையில் துவங்கப்பட்ட 3 ஆவது 'உலக முதலீட்டாளர் மாநாடு 2024'-ல் பல சர்வதேச நிறுவனங்கள் தங்களது முதலீடுகளை தமிழ்நாட்டில் மேற்கொண்டன. 100 க்கும் மேற்பட்ட நிறுவனங்களால் புரிந்துணர்வு ஒப்பதங்கள் கையெழுத்திடப்பட்டுள்ளன. ஹூண்டாய் நிறுவனம் கூடுதலாக ரூ.6 ஆயிரம் கோடி முதலீடு செய்துள்ளது. டாடா பவர் நிறுவனம் தமிழகத்தில் அடுத்த 5 ஆண்டுகளில் ரூ.55 ஆயிரம் கோடி முதலீடு செய்ய உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. டிவிஎஸ் குழுமம் ரூ.5 ஆயிரம் கோடி முதலீடு என இன்றைய முதலீட்டாளர்கள் மாநாட்டில் தமிழகத்தில் முதலீடு செய்ய தொழில் நிறுவனங்கள் ஆர்வம் காட்டின. மேலும் பெகட்ரான், மிட்சுபிஷி, ஏ.பி. மோலார் மெர்ஸ்க், ஹுண்டாய், JSW, அசோக் லேலண்ட் மற்றும் வின்பாஸ்ட் ஆகிய முக்கிய நிறுவனங்களின் திட்டங்களுக்கான புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்திடப்பட்டன.முக்கிய நிறுவனங்கள் எவை என்று பார்ப்போம்

பெகாட்ரான்:

நுகர்வோர் மின்னணு சாதனங்கள் உற்பத்தி மையம் தொடங்கப்படவுள்ளது. முதலீடு ரூ 1,000 கோடி. இதன் மூலம் 8000 பேர் வேலைவாய்ப்பு பெறுவர்.

டாடா எலக்ட்ரானிக்ஸ்:

டாடா எலக்ட்ரானிக்ஸ், செல்போன் உற்பத்தி மையம் கிருஷ்ணகிரியில் நிறுவப்பட உள்ளது. முதலீடு ரூ 12,082 கோடி. இதன் மூலம் 40,500 பேர் வேலைவாய்ப்பு பெறுவர்.

கோத்ரெஜ் நுகர்வோர்:

முதலீடு ரூ 515 கோடி. இதன் மூலம் 446 பேர் வேலைவாய்ப்பு பெறுவர்.

JSW Energy:

JSW Energy (புதுப்பிக்கத்தக்க எரிசக்தி திட்டங்கள்)முதலீடு ரூ 10,000 கோடி. இதன் மூலம் வேலை 6,600 பேர் வேலைவாய்ப்பு பெறுவர்.

வின்ஃபாஸ்ட்:

வின்ஃபாஸ்ட் சார்பில் தூத்துக்குடியில் மின்சார வாகனங்கள் உற்பத்தில் மையம் நிறுவப்பட உள்ளது. முதலீடு ரூ 16,000 கோடி.

ஹூண்டாய்:

ஹூண்டாய் மோட்டார்ஸ், காஞ்சிபுரத்தில் மின்சார கார், மின்கலன்கல் உற்பத்தி நிறுவனம். முதலீடு ரூ 6,180 கோடி.

மிட்சுபிஷி:

மிட்சுபிஷி எலெக்ட்ரிக், குளிர்சாதன தயாரிப்பு தொழிற்சாலை விரிவாக்கம் செய்யப்படவுள்ளது. முதலீடு ரூ 200 கோடி. இதன் மூலம் 50பேர் வேலை வாய்ப்பு பெறுவர்.

குவால்காம்:

குவால்காம், சென்னை வடிவமைப்பு மையம் விரிவாக்கம் செய்யப்படவுள்ளது. முதலீடு ரூ 177.27 கோடி. இதன் மூலம் 1600 பேர் வேலை வாய்ப்பு பெறுவர்.

டிவிஎஸ் குழுக்கள்:

டிவிஎஸ் குழுக்கள்,தமிழகம் முழுவதும் பல்வேறு திட்டங்களை நிறைவேற்றவுள்ளது. முதலீடு ரூ 5,000கோடி. இதன் மூலம் 500 பேர் வேலை வாய்ப்பு பெறுவர்.

ஏபி மோலெர் மேர்ஸ்க்:

ஏபி மோலெர் மேர்ஸ்க் போக்குவரத்து மற்றும் சரக்கு போக்குவரத்து தீர்வுகள் சார்பில் தமிழகம் முழுவதும் சர்வதேச திறன் மையங்கள் நிறுவப்படவுள்ளது. ஆகிய நிறுவனங்கள் புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 20 )

Rengaraj
ஜன 08, 2024 15:28

இன்றைய காலகட்டத்தில் வேலைக்கு எடுக்கும் ஆட்களை நீண்ட நாட்கள் தக்கவைப்பது பெரும் சவாலாக இருக்கிறது. அவர்களை நம்பி ஒரு தொழில்முனைவோர் தொழில் விரிவாக்கம் , புது தொழில் நுட்பம் என்று இறங்க முடிவதில்லை. யார் அதிகம் தருகிறார்க்ளோ அவர்களை நோக்கி பணியாளர்கள் செல்வதை தடுக்குமுடியாது. வரும் காலங்களில் வியாபாரம் மற்றும் தொழில் முன்னேறிட, வேலைக்கு சம்பளம் என்பது மாறி. லாபத்தில் ஒரு பகுதி என்ற கோணத்தில் கூட்டாக செயல்பட வேண்டும் என்பதை தற்போதைய தொழிலாளர்களின் திறமை , அவர்களின் பங்களிப்பு மற்றும் வேலைக்கான தகுதி ஆகியவை எடுத்துரைக்கிறது.


Rengaraj
ஜன 08, 2024 15:19

புரிந்துணர்வு ஒப்பந்தம் போட்டால் முதலீட்டாளர்களின் பணம் உடனடியாக வரும் என்று சொல்லிவிட முடியாது. இத்தனை பேருக்கு வேலை கிடைக்கும் என்று சொல்கிறார்கள். ஆனால் எந்த எந்த பதவிகளுக்கு வேலை கிடைக்கும் என்று தீர்மானிக்க முடியாது. தொழில் ஆரம்பித்த பின்னர் அந்த கம்பெனிகள் இத்தனை பேருக்கு வேலை தரப்போகிறோம் என்று இப்போதே சொல்லமாட்டார்கள். மாஸ் ரெக்ரூட்மென்ட் என்ற ஒரு விஷயம் எப்போதுமே இருக்காது. தேவைக்கேற்ப ஆட்களை எடுப்பார்கள். எனவே இந்த மாநாட்டின் மூலம் நமக்கெல்லாம் வேலை கிடைக்கும் என்று இளைஞர்கள் கனவு காணவேண்டாம்.


ஆரூர் ரங்
ஜன 08, 2024 14:02

சப்பரீசுக்கு கொடுக்க வேண்டிய நுழைவுக் கட்டணம் எவ்வளவு???? பர்சன்ட்?


Sridhar
ஜன 08, 2024 13:28

தமிழ்நாட்டில் கட்டமைப்புகள் ஒன்றும் சரியில்லாத நிலையில் முதலீட்டாளர்கள் எந்த அடிப்படையில் இங்கு தொழில் தொடங்குவார்கள்? மேலும் இங்கு பெரிய அளவில் கமிஷன் வேறு நிச்சயமாக அவர்களுக்கு கட்டுப்படி ஆகாது. இதைப்பற்றி "புரிந்துணர்வு" வந்தவுடன் ஓடிவிடுவார்கள் இந்த நாற்றமடிக்கும் திருட்டு கும்பல் அகன்றாலொழிய, தமிழ்நாட்டின் விடிவுக்கு சாத்தியமே இல்லை.


D.Ambujavalli
ஜன 08, 2024 13:15

டின்னர் முடிந்துவிட்டது இனி அடுத்த வருஷம் இதே நாடகம் நடக்கும் வேலையில்லா இளைஞர்கள் தேர்தலில் ஓட்டுப்போட்டுவிட்டு இலவு காத்த கிளைகளாக நிற்க வேண்டும் வேறொன்றும் புதிதாக நடந்து விடாது


Narayanan
ஜன 08, 2024 13:00

எல்லாமே வெறும் காகித்ததோடு முடியும் சமாச்சாரம்


Chennaivaasi
ஜன 08, 2024 11:48

இந்த முதலீட்டார்கள் எல்லாம் முதலீடு செய்வதற்கு முன்பாக தமிழகம் முழுவதும் சுற்று பயணம் செய்து, சாலை மற்றும் பிற அடிப்படை வசதிகள் குறித்து அரசுக்கு அறிக்கை அளித்து அதனை சரி செய்தால் தான் முதலீடு செய்ய முடியும் என்று கறாராக தெரிவிக்க வேண்டும்.


D.Ambujavalli
ஜன 08, 2024 11:44

எந்த இளைய சமுதாயமும் இதை நம்பி வேலை கிடைத்துவிடும் என்று கனவு காண வேண்டாம் போட்டோஷூட், டின்னர் முடிந்ததும் திரை இறங்கிவிடும் அடுத்த நாடகம் அடுத்த வருஷம் தான்


Anand
ஜன 08, 2024 11:00

லூ லூ மால் புரிந்துணர்வு ஏதும் போடவில்லையா?


ஆரூர் ரங்
ஜன 08, 2024 14:04

சிங்கப்பூர் ஜப்பானுக்குக் கூடத்தான் போய் வந்தார் ஜப்பான் துணை முதலமைச்சர் விடியல் அவர்கள்????. ஏதாவது என்னாச்சு எவ்வளவு முதலீடுன்னு கேட்டோமா?


அப்துல்வஹாப்,துவரங்குறிச்சி 621314
ஜன 08, 2024 10:44

கோட்டு சூட்டு இப்படிப் பட்ட புரிந்துணர்வு ஒப்பந்த ஒப்பாரிகளை எல்லாம் இப்போது தமிழக மக்கள் யாரும் நம்புவது இல்லை.அப்படி ஒரு வேளை நம்பினாலும் இதில் இந்த திமுககாரனுங்க எவ்வளவு கமிஷன் அடிப்பானுகளோ என்ற எண்ணம்தான் வருகிறது.


மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை