உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / விடுதலை சிறுத்தைகளின் 25! தி.மு.க. அமைச்சரின் ரியாக்சன்

விடுதலை சிறுத்தைகளின் 25! தி.மு.க. அமைச்சரின் ரியாக்சன்

சென்னை: சட்டசபை தேர்தலுக்கு இன்னமும் காலம் உள்ள நிலையில் கூட்டணி கட்சிகளுக்கான தொகுதி பங்கீடு குறித்து இப்போது பேச தேவையில்லை என்று அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் கூறி உள்ளார். 2026ம் ஆண்டு சட்டசபை தேர்தலில் தி.மு.க., கூட்டணியில் தங்கள் கட்சிக்கு 25 தொகுதிகள் வேண்டும் என்று விடுதலை சிறுத்தைகள் துணை பொதுச்செயலாளர் வன்னி அரசு பேட்டி ஒன்றில் தெரிவித்து உள்ளார். என்னை போன்ற கடைநிலை தொண்டர்களின் மனநிலை என்னவென்றால், இது கட்சிக்கான சரியான நேரம் என்று எண்ணுகிறோம் என்றும் கூறி இருந்தார். வன்னியரசின் பேட்டி குறித்து பதிலளித்த விடுதலை சிறுத்தைகள் தலைவர் திருமாவளவன், வன்னியரசின் 25 தொகுதிகள் என்பது அவரது தனிப்பட்ட கருத்து. கட்சி நிர்வாகிகளின் விருப்பமும் கூட என்று கூறி இருந்தார். இந் நிலையில் வன்னி அரசின் 25 தொகுதிகள் குறித்து தி.மு.க., முக்கிய நிர்வாகியும், அமைச்சருமான எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் பதில் கூறி உள்ளார். அவர் கூறியதாவது; தேர்தலுக்கு இன்னமும் 15 மாதங்கள் உள்ளன.இப்போது தொகுதி பங்கீடு குறித்து பேச தேவையில்லை. கூட்டணி, தொகுதிகள் ஒதுக்கீடு குறித்து அப்போது பேசலாம். அ.தி.மு.க., போன்று கூட்டணி கட்சிகளை வெளியேற்றும் இயக்கம் தி.மு.க., அல்ல. முதல்வர் கூட்டணிக் கட்சிகளை மதிப்பவர். தி.மு.க., எதிர்க்கட்சியாக இருந்த போது, கூட்டணியில் அங்கம் வகித்த கட்சிகள் இப்போதும் கூட்டணியில் இருக்கின்றன. கூட்டணியை முதல்வர் தொடர்ந்து தக்க வைத்துக் கொண்டிருக்கிறார். இதற்கு கூட்டணிக் கட்சிகளை அவர் மதிக்கும் பண்பே காரணம்.இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 4 )

sankaranarayanan
டிச 23, 2024 20:57

இவரையும் கட்சியிலிருந்து சஸ்பெண்டு செய்துவிடுவார் பிறகு அடுத்தவர் வரிசையில் யார் என்றே தெரியவில்லை இப்படியே சென்றால் எஞ்சியிருப்பது அவர்மட்டுமே ஆகும்


Jagan (Proud Sangi)
டிச 23, 2024 20:11

பேரம் ஆரம்பிச்சாச்சு. தொகுதிக்கு 5 கோடி கைச்செலவுக்கு. அப்போ 125 கோடி ரூபா என்று அர்த்தம். தொகுதி தரவில்லை என்றாலும் அந்த இனாம் இனாம், தந்தா போதும்


V வைகுண்டேஸ்வரன்
டிச 23, 2024 18:19

ஒரு அல்லக்கை யை விட்டு, மன்னராட்சி என்று திருமா பேச வைத்தார். திமுக விட்ட டோஸ் ஸில் அந்த அல்லக்கை ஓடிப்போயிடுச்சி. இப்போ அடுத்த அல்லக்கை யை விட்டு 25 இடங்கள் என்று திருமா பேச வைக்கிறார். ஆனால் நேற்று திமுக வுக்கு இவரு மட்டும், வலுவான கூட்டணி என்று காவடி எடுத்தார். கூடிக் கெடுக்கும் நரித்தந்திரம் பண்றார். அறிவாலயம் பக்கம் வாங்க, அடிச்சு விரட்டப் போகிறார்கள் அல்லது விரட்டி அடிக்கப் போகிறார்கள்.


V வைகுண்டேஸ்வரன்
டிச 23, 2024 18:03

இந்த விசிக இப்போ விநக விடுதலை நரிகள் கட்சி வை கூட்டணியிலிருந்து அடிச்சி துரத்தி விடும் அளவிற்கு ஆடுகிறார்கள். காலையில் திருமா திமுக கூட்டணி தான் வெற்றி பெறும் என்று காவடி தூக்குவார். மாலையில் தன்னோட அல்லக்கைகள் எவனையாவது வுட்டு திமுக விற்கு குடைச்சல் குடுக்கற மாதிரி சாமியாட வைப்பார். தேர்தல் நெருங்கட்டும். எல்லா விநக வும் நடுத்தெருவில் நிக்கப் போகுதுங்க.


சமீபத்திய செய்தி