உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / நீர்நிலைகளில் மண் எடுக்கலாம்; அதை தொழிலாக செய்யக்கூடாது!

நீர்நிலைகளில் மண் எடுக்கலாம்; அதை தொழிலாக செய்யக்கூடாது!

சென்னை:''நீர்நிலைகளில் விவசாயிகள் மண் எடுக்கலாம்; அதை தொழிலாக செய்வது தான் பிரச்னை,'' என, நீர்வளத் துறை அமைச்சர் துரைமுருகன் கூறினார்.சட்டசபையில் நடந்த விவாதம்:பாஜ., - நயினார் நாகேந்திரன்: வெள்ளத்தில் பாதிக்கப்பட்ட தாமிரபரணி ஆற்றை சுத்தப்படுத்தி, ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும். துாத்துக்குடி, கோரப்பள்ளம் குளம் துார்வாரப்படாததால், ஒரு சொட்டு நீர் கூட தேங்கவில்லை. திருநெல்வேலி, மானுார் குளத்திற்கு தாமிரபரணி, கோதையாற்றில் இருந்து தண்ணீர் கொண்டு வந்து நிரப்ப வேண்டும். அனைத்து குளங்களையும் 3 அடிக்கு துார்வார வேண்டும். மண் எடுப்பதற்கு விவசாயிகளுக்கு அனுமதி வழங்க வேண்டும்.அமைச்சர் துரைமுருகன்: மண் எடுப்பதற்கு நாங்கள் எதிர்ப்பு தெரிவிக்கவில்லை. மூன்று அடிக்கு மண்ணை அகற்றிவிட்டு, அதற்குள் மணல் அள்ளுகின்றனர். மண் அள்ளுவதில் பிரச்னை இல்லை; அதை தொழிலாக செய்வது தான் பிரச்னை. வெள்ளத்தில் சேதமான நீர்வழித்தடங்களை சீரமைக்க, 250 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டு உள்ளது.நயினார் நாகேந்திரன்: தென் மாவட்டங்களில் இருந்து சாமான்களை எடுத்து வரும் மக்கள், அதை கிளாம்பாக்கத்தில் ஏற்றி இறக்கி, சென்னை வருவதற்கு சிரமப்படுகின்றனர். பாரிமுனையில் இருந்து கோயம்பேடிற்கு பஸ் நிலையம் மாறியது; இப்போது கிளாம்பாக்கம் சென்றுள்ளது. வரும் காலத்தில் செங்கல்பட்டு செல்லும் சூழல் வரும். இது தவிர்க்க முடியாதது.ஆனால், இப்பிரச்னையை தீர்க்க ஒரு வழி உள்ளது. தலைநகரை திருச்சிக்கு மாற்ற வேண்டும். அவ்வாறு செய்தால், கோவை, கன்னியாகுமரி, நாகப்பட்டினம் ஆகிய இடங்களில் இருந்து, நான்கு மணி நேரத்தில் திருச்சியை அடைய முடியும்.போக்குவரத்து அமைச்சர் சிவசங்கர்: அருமையான யோசனை. அதேபோல, தலைநகர் டில்லியை மாற்றி, மையப் பகுதிக்கு கொண்டு வர வேண்டும். பயணியர், 'லக்கேஜ்'கள் எடுத்து செல்வதற்கு, பஸ்களின் பின்புறம் இருக்கைகளை அகற்றி, வசதி செய்யப்பட்டு உள்ளது.அமைச்சர் துரைமுருகன்: தலைநகரை திருச்சிக்கு மாற்றினால், அங்கு புதிய பஸ் ஸ்டாண்ட் அமைக்க முடியாது. புதுக்கோட்டை பக்கம் அல்லது வேறு பக்கம் தான் அமைக்க முடியும். எனவே, தலைநகர் இங்கேயே இருக்கட்டும்.இவ்வாறு விவாதம் நடந்தது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்









அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை