உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / தர வரிசை தகவல்களை மாற்றிய மர்ம நபர்கள் குறித்து போலீசில் புகார்?

தர வரிசை தகவல்களை மாற்றிய மர்ம நபர்கள் குறித்து போலீசில் புகார்?

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சென்னை: 'இன்ஜினியரிங் கல்லுாரி மாணவர்கள் தர வரிசை தகவல்களை, தவறான தொலைபேசி எண் மற்றும் மாவட்ட விபரங்களுடன் மாற்றி வெளியிட்ட நபர்கள் குறித்து, 'சைபர் கிரைம்' போலீசில் புகார் அளிக்கப்படும்' என, தொழில்நுட்பக் கல்வி ஆணையர் ஆபிரகாம் தெரிவித்துள்ளார்.

அவரது அறிக்கை:

இன்ஜினியரிங் வகுப்பில் சேர, விண்ணப்பம் கோரப்பட்டு, சான்றிதழ் சரிபார்ப்புக்கு பின் தகுதி பெற்ற, 1 லட்சத்து 97,601 மாணவர்களுக்கான தர வரிசை பட்டியல், கடந்த மாதம் 10ம் தேதி வெளியிடப்பட்டது.தர வரிசை பட்டியலை அனைவரும் அறிந்து கொள்வதற்காக, www.tneaonline.org இணையதளத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது.அதில், மாணவர்களின் தர வரிசை எண், விண்ணப்ப எண், பெயர், பிறந்த தேதி, மதிப்பெண், ஜாதி, வகுப்பு தர வரிசை எண் போன்ற தகவல்கள் கொடுக்கப்பட்டுள்ளன; மாணவர்களின் தொலைபேசி எண் மற்றும் மாவட்ட விபரம் தெரிவிக்கப்படவில்லை.ஆனால், மாணவர்களின் நலனுக்காக கொடுக்கப்பட்ட தர வரிசை தகவல்களை, சில விஷமிகள் தங்கள் சுயநலத்திற்காக, தவறான தொலைபேசி எண் மற்றும் மாவட்ட விபரங்களை மாற்றியமைத்து வெளியிட்டது தெரிய வந்துள்ளது.இணைக்கப்பட்ட தொலைபேசி எண் மற்றும் மாவட்ட விபரங்கள், அதிகாரப்பூர்வ தரவு தளத்தில் உள்ள தொலைபேசி எண்கள் மற்றும் மாவட்டங்களின் பெயர்களுடன், 88.34 சதவீதம் பொருந்தவில்லை.இது தொடர்பாக, சைபர் கிரைம் போலீசில் புகார் அளிக்கப்பட்டு, தரவுகளை தவறாக கையாண்ட நபர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும்.கலந்தாய்வு கடந்த மாதம் 22ம் தேதி துவங்கியது.இதுவரை சிறப்பு இட ஒதுக்கீட்டில் 836; முதல் சுற்றில் 24,177 மாணவர்களுக்கு இடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன. இதன் விபரம் இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.சேர்க்கை தொடர்பான அங்கீகரிக்கப்படாத தொலைபேசி அழைப்புகளை, மாணவர்கள் நம்ப வேண்டாம்.தங்கள் பயன்பாட்டு பெயர் மற்றும் பாஸ்வேர்டை யாரிடமும் பகிர வேண்டாம். சந்தேகம் இருந்தால், 1800 425 0110 என்ற தொலைபேசி எண்ணில் தொடர்பு கொள்ளவும்.மாணவர்கள் எவ்வித அச்சமும் இல்லாமல், தங்கள் விருப்பப்படி கல்லுாரிகள் மற்றும் பாடப்பிரிவை, கலந்தாய்வு வழியே தேர்வு செய்து கொள்ளவும்.இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 5 )

இறைவி
ஆக 09, 2024 11:42

நீட் தேர்வில் பீஹாரில் கேள்வித்தாள் திருட்டுக் கும்பலால் வெளியிடப் பட்டால் அதற்கு மத்திய பிஜெபி பொறுப்பு ஏற்க வேண்டும். ஆனால் தமிழ் நாட்டில் நடந்தால் தீயமுக அரசு பொறுப்பேற்காது. திராவிட மாடல்.


JAYACHANDRAN RAMAKRISHNAN
ஆக 09, 2024 14:56

இங்கே அதை குழப்பி வெளியிட்ட தே திராவிட மாடல் ஆகத் தான் இருக்கும். இந்த குழப்பத்தை பயன்படுத்தி மாணவர்களை சுயநிதி கல்லூரிகள் தங்கள் பக்கம் இழுத்துக் கொள்ளும் சதியாக கூட இருக்கலாம். கோவையில் ஒரு தனியார் கல்லூரி திருவண்ணாமலை கோயிலுக்கு சொந்தமான நிலத்தை அபகரித்தாக கோரோணா நேரத்தில் வாட்ஸ்அப் தகவல் பரவியது. தற்போது அது அடங்கிவிட்டது.


நக்கீரன் (நெற்றிக்கண் திறப்பினும் குற்றம் குற்றமே)
ஆக 09, 2024 09:33

திருட்டு திராவிடியாக்களின் ஆட்சியில் தில்லுமுல்லு மட்டுமே இருக்கும். மாணவர்கள் எச்சரிக்கை.


raja
ஆக 09, 2024 08:08

திருட்டு தில்லு முல்லு கழக விடியா மூஞ்சிகள் ஆட்சியில் எல்லாமும் நடக்கும்....


Kasimani Baskaran
ஆக 09, 2024 07:17

பட்டியலையே மாற்ற முயன்று பாதியில் விட்டிருக்கிறார்கள். இது உள்ளடி வேலையாகவே இருக்க அதிக வாய்ப்பு இருக்கிறது. சர்வர் லாக்களை ஆய்வு செய்தால் எந்த வழியில் மாற்றினார்கள் என்பதை புரிந்து கொள்ள முடியும்.


மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை