உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / நெல்லை, விளவங்கோடு காங்., வேட்பாளர்கள் அறிவிப்பு: மயிலாடுதுறைக்கு மவுனம்

நெல்லை, விளவங்கோடு காங்., வேட்பாளர்கள் அறிவிப்பு: மயிலாடுதுறைக்கு மவுனம்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சென்னை: லோக்சபா தேர்தலில் காங்கிரஸ் போட்டியிடும் 7 தொகுதிகளுக்கான வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்ட நிலையில் இன்று (மார்ச் 25) திருநெல்வேலி லோக்சபா தொகுதிக்கான வேட்பாளர் மற்றும் விளவங்கோடு சட்டசபை தொகுதி இடைத்தேர்தலுக்கான வேட்பாளர் அறிவிக்கப்பட்டுள்ளார். மயிலாடுதுறை லோக்சபா தொகுதிக்கு மட்டும் இன்னும் அறிவிக்கப்படவில்லை.தமிழகத்தில் ஏப்.,19ல் லோக்சபா தேர்தல் நடைபெற உள்ளது. இதற்கான வேட்புமனுத் தாக்கல் கடந்த 20ம் தேதி துவங்கி, 27ம் தேதி முடிவடைகிறது. இதனால் அனைத்து கட்சிகளும் வேட்பாளர்களை அறிவித்து தேர்தல் பணியை ஆரம்பித்துவிட்டன. வேட்பாளர்களும் தங்கள் தொகுதிகளில் வேட்புமனுவை தாக்கல் செய்து வருகின்றனர். திமுக கூட்டணியில் இடம்பெற்ற காங்கிரசுக்கு 9 தொகுதிகள் மற்றும் விளவங்கோடு சட்டசபை தொகுதி (இடைத்தேர்தல்) ஒதுக்கப்பட்டிருந்தன. அதில் 7 லோக்சபா தொகுதிகளுக்கு மட்டும் வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டிருந்தனர். திருநெல்வேலி, மயிலாடுதுறை தொகுதிகள் மற்றும் விளவங்கோடுக்கு இன்னும் அறிவிக்கப்படவில்லை.இந்த நிலையில், இன்று திருநெல்வேலி மற்றும் விளவங்கோடு சட்டசபை தொகுதிக்கான வேட்பாளர்களை காங்கிரஸ் தலைமை அறிவித்துள்ளது. அதன்படி, திருநெல்வேலியில் ராபர்ட் புருஸ், விளவங்கோடு தொகுதியில் தாரகை கத்பட் என்பவரும் போட்டியிடுகின்றனர். மயிலாடுதுறைக்கு மட்டும் இன்னும் வேட்பாளர்கள் அறிவிக்கப்படவில்லை. நாளை மறுநாளுடன் வேட்புமனு தாக்கல் முடியவுள்ள நிலையில் இன்னும் வேட்பாளரையே அறிவிக்காமல் இருப்பதால், அந்த தொகுதியில் தேர்தல் பணியை துவக்குவதில் காங்கிரசார் முனைப்பு காட்டவில்லை.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 3 )

ஆரூர் ரங்
மார் 26, 2024 11:18

ஜார்ஜ் பொன்னய்யாவின் தேர்வாக இருக்கும். இருவருக்கும் கிடைத்தது? அவர் போட்ட பிச்சையோ?


RAMAKRISHNAN NATESAN
மார் 25, 2024 20:27

திருநெல்வேலி, கன்யாகுமரி, தூத்துக்குடி ஆகிய மாவட்டங்களில் உள்ள தொகுதிகளில் பெரும்பாலும் கிறித்தவ மதத்தைச் சார்ந்த வேட்பாளர்களே களமிறக்கப்படுகிறார்கள் ஹிந்து வேட்பாளர்களை நிறுத்தினால் வாக்களிக்க மாட்டார்களா ????


பெரிய குத்தூசி
மார் 25, 2024 20:12

இந்த காங்கிரஸ் வேட்பாளர் தாரகை, கிறித்துவ பாதிரியாரும், திமுகவின் கிறித்துவ கொள்கைப்பரப்பு செயலாளராக இருக்கும் கிறிஸ்துவ பாதர் ஜெகத் கஸ்பர் ரின் நெருங்கிய உறவினர் என்பது குறிப்பிட தக்கது


மேலும் செய்திகள்











அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை