உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / மகாத்மா காந்தியை அவமதிக்கவில்லை : கவர்னர் ரவி அறிக்கை

மகாத்மா காந்தியை அவமதிக்கவில்லை : கவர்னர் ரவி அறிக்கை

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சென்னை: மகாத்மா காந்தியை நான் அவமதிக்கவில்லை என கவர்னர் ரவி தெரிவித்துள்ளார். கடந்த சில தினங்களுக்கு முன் நேதாஜி பிறந்த நாளின் போது கவர்னர் ரவி பேசியது சர்ச்சையை ஏற்படுத்தியது. இந்நிலையில் காந்தி நினைவு நாள் அனுசரிக்கப்படுவதையொட்டி, இன்று கவர்னர் வெளியிட்டுள்ள அறிக்கையில், என் வாழ்க்கைக்கு ஒளி காட்டிய காந்தியின் போதைனைகளை நான் மதிக்கிறேன். அவரது போதனைகள் என் வாழ்வின் லட்சியங்களாக இருந்தன. நான் காந்தியை அவமதிக்கவில்லை. தேசத்தின் சுதந்திரத்திற்கு நேதாஜியின் பங்களிப்பை போதுமான அளவு பாரட்டப்படவில்லை என்பதையே விளக்க முயன்றேன்.நேதாஜி குறித்து ஆவணங்கள் அடிப்படையிலேயே பேசினேன்.அவரை அவமதிக்கும் நோக்கில் எதுவும் செய்யவில்லை. சில ஊடகங்கள் தவறாக திரித்துவிட்டன. இவ்வாறு அந்த அறிக்கையில் கவர்னர் தெரிவித்துள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்









அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை