உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / தேசிய கட்சிகளை தவிர்த்துவிட்டு யாரும் ஆட்சி அமைக்க முடியாது: சிவகங்கை காங்., - எம்.பி., கார்த்தி பேட்டி

தேசிய கட்சிகளை தவிர்த்துவிட்டு யாரும் ஆட்சி அமைக்க முடியாது: சிவகங்கை காங்., - எம்.பி., கார்த்தி பேட்டி

கோவை : ''தேசிய கட்சிகளை தவிர்த்துவிட்டு, தமிழகத்தில் திராவிட கட்சிகளால் ஆட்சி அமைக்க முடியாது,'' என, சிவகங்கை எம்.பி., கார்த்தி கூறினார்.

கோவையில் அவர் அளித்த பேட்டி:

தேசிய அளவில் 'இண்டி' கூட்டணி ஒற்றுமையாக, வலிமையாக இல்லை; பா.ஜ.,வுக்கு நிகராக இல்லை என்ற யதார்த்த உண்மையை, கள நிலவரத்தை முன்னாள் நிதியமைச்சர் சிதம்பரம் கூறியுள்ளார். பா.ஜ., சாதாரண அரசியல் கட்சி இல்லை; அதற்கென அரசியல் குணம் உண்டு என்று கூறினார். அதில் என்ன தவறு என புரியவில்லை.1967க்குப் பின், தமிழகத்தில் காங்., ஆட்சியில் இல்லை; அதற்கு பல காரணங்கள் உண்டு. தேசிய கட்சிகளை தவிர்த்துவிட்டு, திராவிட கட்சிகள் அரசியல் செய்ய முடியாது. ஏதாவது ஒரு தேசிய கட்சியோடு இணைந்தால் மட்டுமே, திராவிட கட்சிகளுக்கு ஓட்டு வங்கி வலுவாக இருக்கும்.தமிழக காங்.,கில் அடிப்படை பிரச்னைகள் இருக்கின்றன. ஆளுங்கட்சிக்கு கூட்டணியாக தேர்தலில் இருக்கிறோம். அதைத்தவிர சிறப்பாக எதுவும் இல்லை. ஆக்கப்பூர்வமான அரசியல் கட்சியாகவும் இல்லை; ஆக்கப்பூர்வமான எதிர்க்கட்சியாகவும் இல்லை. எங்களது பலம் எங்களுக்கு தெரியும்; அதை அறிந்தே 'சீட்' கேட்க முடியும். ஆசைக்காக, பலத்தை மீறி எதுவும் செய்ய முடியாது. மக்கள் பிரச்னைகளை முன்வைக்க வேண்டியது, அரசியல் கட்சிகளின் கடமை. சில சமயங்களில் நாங்கள் அதை செய்வதில்லை. இவ்வாறு, அவர் கூறினார்.

'விஜய் கட்சிக்கு எனர்ஜி இருக்கு'

எம்.பி., கார்த்தி மேலும் கூறுகையில், ''அ.தி.மு.க., கூட்டணியை குறைத்து மதிப்பிட முடியாது; நல்ல ஓட்டு வங்கி உள்ளது. தற்போது பா.ஜ.,வுடன் வைத்துள்ள கூட்டணியை, அடிமட்ட தொண்டர்கள் விரும்பவில்லை. ''அது, பின்னடைவாக இருக்கலாம். விஜய் கட்சிக்கு 'எனர்ஜி' இருக்கிறது; அது, ஓட்டு வங்கியாக மாறுமா என்பதை கணிக்க முடியாது. விஜய் கட்சிக்கு, இன்னும் தெளிவான கூட்டணி வரவில்லை. என்னை பொறுத்தவரை தி.மு.க., தலைமையிலான கூட்டணி, 2026 தேர்தலில் வெற்றி பெறும்,'' என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை