உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / ஆசிரியர் பணி தேர்வு உத்தேச தேதி அறிவிப்பு

ஆசிரியர் பணி தேர்வு உத்தேச தேதி அறிவிப்பு

சென்னை:ஆசிரியர், பேராசிரியர் உள்ளிட்ட பதவிகளில், 6,281 காலியிடங்களை நிரப்புவதற்கான, போட்டி தேர்வு தேதியை, டி.ஆர்.பி., வெளியிட்டுள்ளது.பள்ளிக் கல்வி, உயர் கல்வி மற்றும் சட்டத் துறைகளின் கீழ் செயல்படும் கல்வி நிறுவனங்களில், ஆசிரியர்கள், பேராசிரியர் பதவிகளில், காலியிடங்களை நிரப்புவதற்கான போட்டி தேர்வுகள், ஆசிரியர் தேர்வு வாரியமான டி.ஆர்.பி., வாயிலாக நடத்தப்படுகின்றன.இந்நிலையில், நடப்பு ஆண்டுக்கான தேர்வுகளின் உத்தேச தேதிகளை, டி.ஆர்.பி., செயலர் ராமேஸ்வர முருகன் நேற்று வெளியிட்டார்.அதில், அவர் கூறியிருப்பதாவது:போட்டி தேர்வுகளில், பட்டதாரிகள் பங்கேற்கும் வகையில், பயிற்சிகள் மற்றும் முன்கூட்டிய தயாரிப்புக்கான நோக்கத்தில், இந்த உத்தேச அட்டவணை வெளியிடப்படுகிறது. சில தேர்வுகள் ரத்தாகலாம்; சில தேர்வுகள் தள்ளி வைக்கப்படலாம். தேர்வு குறித்த அதிகாரப்பூர்வ தகவல்களை, www.trb.tn.gov.inஎன்ற இணையதளத்தில் தெரிந்து கொள்ளலாம்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்









சமீபத்திய செய்தி