உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / இதே நாளில் அன்று

இதே நாளில் அன்று

ஜனவரி 13, 2016தர்மபுரி மாவட்டம், கொல்லஹள்ளியில் வெங்கடாசல நாயுடு, காத்தம்மாள் தம்பதியின் மகனாக, 1925, ஜூன் 12ல் பிறந்தவர் வடிவேலு.இவர், தர்மபுரி உயர்நிலை பள்ளியில் படித்தார். தன், 15வது வயதில் காங்கிரசில் சேர்ந்து, தனிநபர் சத்தியாகிரகம், வெள்ளையனே வெளியேறு ஆகிய சுதந்திர போராட்டங்களில் பங்கேற்று, பாளையங்கோட்டை சிறையில் அடைக்கப்பட்டார். நாடு சுதந்திரம் பெற்ற பிறகும், புதுச்சேரிக்கு பிரெஞ்சுக்காரர்களிடம் இருந்து சுதந்திரம் கிடைக்காததை எதிர்த்து, 'சமுதாயம்' என்ற பத்திரிகையில் தொடர்ந்து எழுதினார். தாழ்த்தப்பட்டோரின் முன்னேற்றத்துக்காக, மக்கள் தலைவர் ஜெயபிரகாஷ் நாராயணன் துவக்கிய, சோஷலிஸ்ட் குழுவில் சேர்ந்தார். சேலம், தர்மபுரி, மதுரை மாவட்டங்களில் நிலமற்றவர்களுக்காக போராட்டங்களை நடத்தி, 17 முறை சிறை சென்றார். பலனாக, 2,000 விவசாயிகள், 1,800 குடிசைவாசிகளுக்கு நிலம் பெற்றுத்தந்தார். பிரஜா சோஷலிஸ்ட் கட்சியின் மாநில பொதுச்செயலர், ஜனதா தளத்தின் தலைவர் பதவிகளை வகித்தார். மீண்டும், 2002ல் காங்கிரசின் ஒருங்கிணைப்பாளரானார். இவர், களப்பிரர் கால வரலாற்றை, 'செம்பியர் திலகம்' என்ற நாவல் உட்பட, 30 நுால்களை எழுதி, தன், 91வது வயதில், 2016ல் இதே நாளில் மறைந்தார்.புதுச்சேரி விடுதலைக்காக பாடுபட்ட தியாகி, 'ஜி.ஏ.வி.,' நினைவு தினம் இன்று!


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை