உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / இதே நாளில் அன்று

இதே நாளில் அன்று

ஜனவரி 28, 1832தஞ்சாவூர் மாவட்டம், உச்சுவாடி கிராமத்தில், வெங்கடநாராயண சாஸ்திரியின் மகனாக, 1832ல் இதே நாளில் பிறந்தவர் முத்துசாமி அய்யர். இவர், இளமையிலேயே தந்தையை இழந்தார். தாயுடன் திருவாரூரில் குடியேறி, அங்கு படித்து, கிராம கணக்கராக பணியாற்றினார்.அங்கு தாசில்தாராக இருந்த முத்துசாமி நாயக்கர், சென்னை சர்.ஹென்றி மாண்டிசோரி பள்ளியில் சேர்த்து படிக்க வைத்தார். தொடர்ந்து மாநிலக் கல்லுாரி, சட்டக் கல்லுாரிகளில் படித்தார். சட்டம் முடித்து, தரங்கம்பாடியில் மாவட்ட நீதிபதியானார். கடந்த 1877ல், பிரிட்டிஷ் அரசு, இவரை சென்னை உயர் நீதிமன்ற நீதிபதியாக நியமித்தது. அப்பதவிக்கு வந்த முதல் இந்தியர் என்பதால், நீதி வழங்குவதில் பாரபட்சமும், ஜாதி பாகுபாடும் இருக்கும் என சில ஆங்கில பத்திரிகைகளும், பிரிட்டிஷ் நீதிபதிகளும் நெருக்கடி தந்தனர். அவற்றை சமாளித்து பணியாற்றினார்.மலபார் திருமண கமிஷனில் பணியாற்றிய போது பெண்கல்வி, விதவை மறுமணம் உள்ளிட்டவற்றை ஆதரித்தார். இவர், தன் 63வது வயதில் 1895, ஜனவரி 25ல் மறைந்தார்.நீதிமான் பிறந்த தினம் இன்று!


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை